December 06, 2011

ரசனை



இதற்கு முன் யாரேனும் இதைப் பற்றி பதிவிட்டு இருக்கிறார்களா.. என்று தெரியவில்லை.

எனக்கு மெயிலில் வந்தது.

வாஷிங்டன் டிசி.. பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் அந்த நபர் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்.. ஒரு மணி நேரமாக.

கிட்டத்தட்ட 2000 நபர்கள் அவரைக் கடந்து போனார்கள்.

ஒரு பெண்மணி ஒரு டாலரை அவரது தொப்பியில் போட்டு விட்டு போனார்.

6 பேர் மட்டும் கொஞ்ச நேரம் நின்று கேட்டார்கள். சுமார் 20 நபர்கள் பணம் போட்டார்கள். வசூலானது 32 டாலர்கள் மட்டுமே.

யாரும் நின்று ரசிக்கவில்லை. கை தட்டவில்லை.

வாசித்தவர் ஜோஸுவா பெல் .. உலகின் நெம்பர் ஒன் வயலினிஸ்ட். அவர் கையில் வைத்திருந்த வயலின் விலை மூன்றரை மிலியன் டாலர்கள். அவர் வாசித்தது மிகவும் அபூர்வ சங்கதிகள்..

இரு தினங்கள் முன்புதான் அவர் கச்சேரிக்கு 100 டாலர் டிக்கட் வைத்து கூட்டம் அலைமோதியது இடம் கிடைக்காமல்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்தது.. மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. அவர்கள் விருப்பம்.. நுண்ணுணர்வு.. பற்றிய ஒரு சமுதாயத் தேடலுக்காக..

This experiment raised several questions:

*
In a common-place environment, at an inappropriate hour, do we perceive beauty?

*
If so, do we stop to appreciate it?

*
Do we recognize talent in an unexpected context?


One possible conclusion reached from this experiment could be this:


If we do not have a moment to stop and listen to one of the best musicians in the world, playing some of the finest music ever written, with one of the most beautiful instruments ever made . . ..


How many other things are we missing as we rush through life?


Enjoy life NOW ..
it has an expiry date !

(பின் பகுதியை அப்படியே தந்திருக்கிறேன்.. அது தரும் அதிர்வுக்காக..)

கொஞ்சம் வெட்கமாய்த்தான் இருக்கிறது.. பதில் சொல்ல.




28 comments:

வெங்கட் நாகராஜ் said...

How many other things are we missing as we rush through life?

Enjoy life NOW ..
it has an expiry date !

உண்மையான வார்த்தைகள்...

Matangi Mawley said...

A blogger named Ramm had shared this information with me before- in his comment to one of my posts- "Guggulu gulu gulu gulu".
The experiment, apparently won the Pulitzer. I liked reading it then, as I do now!! :)

raji said...

உண்மையில் நிஜத்திற்கு மதிப்பில்லை.நிழலுக்குத்தான்

ஷர்புதீன் said...

இது போன்ற மனோபாவம் ஏன் என்பது குறித்து நண்பர்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். கண்ணதாசன் மாணவன் ஒருவனின் கவிதையை வாசித்ததும், அவரது கவிதையை அந்த மாணவனை வாசிக்க்சொன்ன நிகழ்வும், இதுவும்- காரணத்தில் ஒன்றுதான்!

என்னை சுற்றி நடக்கும் அனேக விசயங்களை ரசிக்க கடந்த பல வருடங்களுக்கு முன்னே பயிற்சியாக ஐத்தது தற்போது 90 % பலனளிக்கிறது., பஸ் ஸ்டாண்டில் அரைமணி நேர காத்திருப்பில் எரிச்சல் பட்ட நிகழ்வே சமீகாலங்களில் கிடையாது! ஆனால் அந்த தருணத்தில் என்னை சுற்றி இருப்பவர்களின் ( உடன் வந்தவர்கள்) பார்வையில் தான் சிறிய நகைப்பு தெரிகிறது!

வாழ்க்கை மிக அழகானது!

Shobha said...

நம் ஊரில் ஒரு பிரபலம் ஒரு பொது இடத்தில் பாடியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறேன்! BTW உங்கள் பதிவுக்கு நான் ஒரு புதிய வாசகி, உங்கள் முந்தய பதிவுகளை மிகவும் ரசித்து படிக்கிறேன், முக்கியமாக ஸ்ரீரங்கம் பதிவுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு. கடைசியில் மிகவும் சிந்திக்க வைக்கும் கேள்விகள்.

உலகம் இப்படித்தான். அதன் ரசனையும் இப்படித்தான்.

ஒரு உபன்யாசகர் சொன்னார்:

“பிரத்யக்ஷமாக கருடன் தலைமேல் பறப்பதை, ரஸித்த்து ஸேவிக்கவோ கன்னத்தில் போட்டுக்கொள்ளவோ மாட்டான்.

அருகில் எவனாவது காக்கா போலக் கத்தி மிமிக்ரி செய்கிறான் என்றால் கூட்டமாகப்போய்ப் பார்த்து சிரித்து மகிழ்வார்கள்

இதுதான் இன்றைய உலகம்” என்றார்.
அது தான் ஞாபகத்திற்கு வந்தது.


த.ம: 2; ஊடான்ஸ்: 6; இண்ட்லி: 4
vgk

Philosophy Prabhakaran said...

Thanks for sharing this lesson...

KParthasarathi said...

எதுவுமே ஓசியில் கிடைத்தால் அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.
அதற்கே பணம் கொடுத்து அனுபவித்தால் ருசி பன்மடங்கு ஆகிறது.
மற்றொன்றும் இருக்கிறது.உணமையான ரசனை,அழகை எங்கிருந்தாலும் ஆராதிக்கும் திறமை எல்லோருக்கும் எளிதில் வருவதில்லை.சாயம் பூசினால் தான் மக்கள் கவனம் திரும்புகிறது. முக சாயம் இல்லாத நடிகை நம்முடன் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வந்தால் அடையாளம் கண்டு பிடிப்போமா?

ரிஷபன் said...

நன்றி மாதங்கி. உங்க பிளாக்ல போய் இப்பதான் அந்த கமெண்ட் பார்த்தேன்.. கூடவே அதை வச்சு காணொளியும்.


வாங்க ஷோபா.. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஷ்ர்புதீன்.. கண்ணதாசன் நிகழ்வும் சரியான உதாரணம்.. நம் மனோபாவத்திற்கு.

பால கணேஷ் said...

இதே சோதனையை மற்ற நாடுகளில் செய்தார்களா தெரியவில்லை. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அழகுற உணர்த்துகிறது! முயல்வோம்!

கோமதி அரசு said...

நின்னு நிதானித்து ரசித்து வாழாமல் மனிதன் பறந்து கொண்டு இருக்கிறான் என்பது தான் நிதர்சன உண்மை.

நல்ல இசையை கேட்க நேரமில்லை.

அவர்களுக்கு தேவை படும் போது தான் கேட்பார்கள் போலும்.

நமக்கு கொடுக்க பட்ட நாளில் ரசித்து வாழ மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

யாரும் இருக்குமிடத்தில் இருந்து
செய்ய வேண்டியதைச் செய்தால்தான் மதிப்பு
அருமையான மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

அப்பாதுரை said...

யோசுவா பெல் இதற்கு இணங்கியது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது..

கீதமஞ்சரி said...

பணத்தை வைத்துத்தானே மனிதர்களுக்கு மதிப்பு. ஒரு பொருளோ, இசையோ, படைப்போ எளிதில் கிடைப்பதாலேயே அதன் தரத்தைக் குறைத்து மதிப்பிடும் மக்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள் என்பதற்கு இப்பதிவே சாட்சி. வாழ்க்கையை அனுபவிக்கத் தூண்டும் அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றி ரிஷபன் சார்.

கவி அழகன் said...

சிந்திக்க வைத்த விடயம்

G.M Balasubramaniam said...

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், அவரைக் கடந்துசென்றவர்களுக்கு அவர் யாரென்றே தெரிந்திருக்காது. தான் இன்னார் என்று சொல்லிக் கொண்டு இசைத்திருந்தாரானால் ரெஸ்பான்ஸ் வித்தியாசமாக இருந்திருக்கலாம். கண்ணதாசன் குறிப்பிட்ட உதாரணமும் அதைத்தான் விளக்குகிறது. விளம்பர வெளிச்சம் இருந்தால்தான், நுண்கலைகள், தெரிய வருகின்றன, ரசிக்கப் படுகின்றன. எழுத்தாளனும் பத்திரிகைகளில் அங்கீகரிக்கப்பட்ட பிறகுதான் பிரபலமாகிறான். எதற்காக அந்த சோதனை ( சோதனையா.?) நிகழ்த்தப்பட்டதோ, அதிலிருந்து தெரிந்து கொள்ள நிறையவே இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

நிறையச் சின்னச் சின்ன விஷயங்களை பரபரப்பான வாழ்க்கையின் காரணமாக இழக்கிறோம் என்பது உண்மைதான்.. எனினும், இதில் மற்ற காரணங்களும் தென்படுகின்றன (எனது பார்வையில்).

முதல் காரணம்:
அததுக்கு நேரங்காலம் உண்டுன்னு சொல்வோமே.. Priority.. முன்னுரிமை.. வாழ்க்கையில் நாம் எதற்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது.. இசையை நாம் காலைநேர பிஸியில் நின்று ரசிப்பது அரிது. இசை பரபரப்புக்கு எதிர்; சரியாச் சொன்னா, பரபரப்பைத் தவிர்க்கத்தான் இசை!! அதுவே, மாலை அல்லது இரவு நேரம் என்றால் ரசிப்பவர்கள் அதிகமிருக்கலாம்...

ரெண்டாவது:
அந்தப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் வாசிச்சது ஒரு மெட்ரோ ஸ்டேஷன்ல... சாதாரண பொதுஜனங்கள் புழங்கும் ரயில் நிலையத்தில்.. அதனால அவரை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

$100 டிக்கெட் வாங்கி, அவரது இசைக்கச்சேரிக்கு வருபவர்களில் பெரும்பாலோர் பெருந்தனக்காரர்கள்.. மேட்டுக்குடியினர்.. அவர்கள் இந்த மெட்ரோ ஸ்டேஷனுக்கு வருவதுமில்லை; இவர்கள் அவரின் கச்சேரிகளுக்குப் போயிருப்பதுமில்லை.. இதனால்தான் அவரை யாரும் அறிந்திருக்கவில்லை; யாரோ ஏழை வித்வான் என்று நினைத்திருக்கிறார்கள் போல...

பிஸ்மில்லா கான் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஷெனாய் வாசித்திருந்தாலும் இதுதான் நிலைமைபோல!! :-)))))

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு சார்.
யாருக்கும் எதையுமே ரசித்து கேட்கவோ, செய்யவோ நேரமில்லை.நிறைய விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.இனிமேலாவது வாழ்வை ரசித்து வாழ்வோம்.....

இண்ட்லி - 6
த.ம - 6

அப்பாதுரை said...

சிந்தனை தெறிக்கும் கருத்துக்கள் G.M Balasubramaniam, ஹுஸைனம்மா.

R. Jagannathan said...

I have read this mail long ago and my reaction has not changed even now.

I don't think this experiment has any seriousness or even real.
If the musician was so popular, he would have been identified and definitely a crowd would have gathered. Even people who do not have an ear for music would have stood by out of curiosity. Secondly, people rush to their destination and have a schedule to catch a particular train (like 8.21 local!). Thirdly, it requires few minutes of listening to enjoy any music. In a noisy surrounding it is not possible.
Many of those people who rushed to their trains would have taken some books to read or listen to music in their mobile / ipods.

People do not have time to stop by when they are on a mission. To enjoy music / arts, one needs a time and mood.

I know my opinion contradicts the message in the mail. But it is mine!
-R. J.

நிலாமகள் said...

'எதையும் வெக்கிற‌ இட‌த்தில் வெக்க‌ணும்' இது எங்க‌ம்மா ப‌ல‌ நேர‌ங்க‌ளில் சொல்வாங்க‌.

நான்கைந்து மாத‌ங்க‌ளுக்கு முன் சென்னை சென்றிருந்த‌ போது, காலை நேர‌த்தில் ச‌ப்‍வே துவ‌க்க‌த்தில் சென்ட்ர‌ல் போகும் அவ‌ச‌ர‌த்திலும் என்னைக் க‌ட‌ந்து சென்ற‌ எளிய‌ தோற்ற‌முடைய‌ சாதார‌ண‌ பெண்ணொருத்தி த‌ன்னுட‌ன் வேக‌வேக‌மாக‌ ந‌ட‌ந்த‌ ச‌காவுட‌ன் 'ஆசை மேல் ஆசை வெச்சேன்... நான் அப்புற‌ம்தான் காத‌லிச்சேன்... ஹோய்...' என‌ப் பாடிச் சென்ற‌து இன்னுமின்னும் என் காதுக‌ளில் ஒலித்துக் கொண்டே இருக்கிற‌து. அந்நினைவு எழும் நேர‌மெல்லாம் அப்பாட‌லை முழுமையாக‌ ஹ‌ம் செய்து கிற‌ங்கிக் கிட‌க்கிறேன். இசையும் பாட‌லும் இருப்ப‌வ‌ர் இல்லாத‌வ‌ர் அனைவ‌ரையும் ஆன‌ந்த‌ப்ப‌டுத்த‌ போதுமான‌தாக‌ இருந்து விடுகிற‌து எந்நேர‌த்திலும்!
நின்று ர‌சிக்க‌ பாராட்ட‌ நேர‌ம‌ற்றுக் க‌ட‌ந்த‌வ‌ர்க‌ளும் அக்குர‌லை, இசையை த‌ன்னோடு பொத்தியெடுத்துப் போயிருப்ப‌ர் ச‌ர்வ‌நிச்ச‌ய‌மாய்

மாலதி said...

மிகவும் சிறப்பான அலசல் உண்மையில் இலவசம் அல்லது உண்மை என்றுமே எங்குமே தோற்கும் அல்லது மதிபிழந்துபோகும் என்பது உறுதியாகிறது சிறப்பான செய்தி பாராட்டுகள்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

CS. Mohan Kumar said...

Though I have read this in e-mail, nice to read here with your comments. Thanks

Sharmmi Jeganmogan said...

பேசி பேசி சப்புக் கொட்டத் தயார் இல்லை. நித்தமும் அந்நிய மண்ணில் பொருள் தேடி அலையும் நான் பேசத் தகுதி இல்லாதவள்.

RAMA RAVI (RAMVI) said...

இந்த அவசர வாழ்கையில் எதற்குமே நேரமில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஒரு நொடி நிற்று யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றுக்குமே,நேரமிருப்பது புரியும்.

ரசனை ரசிக்க வைத்தது.சார்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

உண்மை விசித்திரமானது. இடுகைக்கு நன்றி.
இப்பதிவும் மேலும் குறுஞ்செய்திகள்
பதிவையும் வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன்.

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

Anonymous said...

நல்ல பகிர்வு நன்றி:)