நேற்று உறையூரில் சேர்த்தி உத்ஸவம். தாயார் கமலவல்லி. சோழ அரசனின் மகளாய்ப் பிறந்து அரங்கனை மணந்தார்.
வந்த சேவார்த்திகள் அனைவரும் அத்தனை ஒழுங்கு. ஒருவரும் அமளி இல்லை. பேச்சு இல்லை. வரிசை பிசகாமல் வந்து தரிசித்த அழகை பார்த்து கூடுதல் ஆனந்தம்.
(இது முன்பு எடுத்த சேர்த்தி போட்டோ. )
இன்று உபயநாச்சிமாருடன் அரங்கன் வீதி உலா. 7ஆம் திருநாள். சித்திரை வீதியில் அவரைத் தரிசிக்க போனபோது ஒரு சுவாரசியம்.
பெரிய அடுக்கு நிறைய டீ தயாரித்து வைத்திருந்தார்கள்.
“யாருக்கு இவ்வளவு டீ” என்றேன்.
“ஆண்டாளுக்கு”
“அவ்வளவு டீ குடிக்கிற மாமி யார்”
பெரிதான சிரிப்புடன் “யானைக்கு.. ஆண்டாளை யானைன்னு சொல்ல மாட்டேன்” என்று பதில் வந்தது.
சுக்கு, ஏலம், வெல்லம் போட்டு டீ. சூடாய் இருந்தால் சாப்பிடாதாம்.
மின்விசிறி காற்றில் ஆற வைத்திருந்தார்கள்.
சின்ன சொம்பில் ஊற்றி அதன் வாயைத் திறக்கச் சொல்லி மெல்ல பாகன் ஊற்றுகிறார். ஆங்.. சொல்ல மறந்துட்டேனே..
டீ குடிக்க முதலில் யானையிடம் பர்மிஷன் வாங்கிக் கொள்ள வேண்டும். (ஒரு முறை வேறு நபர் கொடுத்த சொம்பு டீயை நிராகரித்து விட்டது)
முழுக்கக் குடித்ததும் ஆண்டாளிடம் “டீ எப்படி” என்று கேட்டால் ஜோராய் ரசனையுடன் தலையாட்டுகிறது !
22 comments:
சூப்பர் ரிஷபன்..யானை..சாரி..ஆண்டாள் டீ குடிப்பது, இப்போது தான் கேள்விப் படுகிறேன்..
முன்பெல்லாம் காபி குடித்துக் கொண்டு இருந்தாளே ஆண்டாள்!...
ஆண்டாளும் டீக்கு மாறியாச்சு போல!
நல்ல பகிர்வு சார்.
ஆஹா!
எவ்வளவு பெரிய ஆகிருதி யானை , அதையும் மனிதன் பிச்சை எடுக்க பழகி விடுகிறான் .என்று பிரகாஷ் அய்யா வருத்தமோடு சொல்வார். யானைக்கு பிரியமாய் டீ தருவதை முதல் முதலாய் கேள்விபடுகிறேன். அதிலும் சுக்கு ஏலம் வெல்லம் கலந்த டீ வாசிக்கறது பதிவும்.
உம்மாச்சியை இங்க சேவிச்சாச்சு.சரி! ஆனா யானை டீ குடிக்கற அழகையும் ரசனையாய் தலையாட்டறதையும் நான் பாக்கலையே.அந்த ஃபோட்டோ காணோம்.
//வந்த சேவார்த்திகள் அனைவரும் அத்தனை ஒழுங்கு. ஒருவரும் அமளி இல்லை. பேச்சு இல்லை. வரிசை பிசகாமல் வந்து தரிசித்த அழகை பார்த்து கூடுதல் ஆனந்தம்.//
இது போல வைரமுடி சேவைக்கு திரு நாராயணபுரத்தில் இருந்தால் தேவலை.தேவையற்ற தள்ளுமுள்ளு.
பெருமாளுக்கும் வைரமுடிக்கும் கொடுக்கும் பாதுகாப்பு மக்களுக்கும் சற்று இருந்தால் பரவாயில்லை.
கழிப்பறை,தேவையான குடிநீர் வசதி போன்ற விஷயஙளுக்கும் கர்னாடக அரசாங்கம் இன்னும் சற்று கவனிக்க வேண்டும்.
ஆண்டாள் டீ குடித்ததை சுவாரஸ்யமாய் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி
Very Nice Post Sir.
Beautiful Information.
I have seen this type of elephants drinking coffee tea juice etc., on many occasions. ;)))))
பெருமாளை சேவிச்சாச்சு.....
ஆண்டாள் டீக்கு மாறிட்டாளா......
ஒரு அடுக்கு நிறைய காபி குடிப்பதை என் மாமனார் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவளின் கொலுசும், மவுத் ஆர்கான் வாசித்து கொண்டே நொண்டி அடிப்பதும் சென்ற முறை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
ஆண்டாளுக்கு டீ 'ன்னு படிச்சதும் துணுக்குற்றேன், நம்மை ஆன ஆண்டாளு! டீ யோட உட்ட்ருங்கப்பா.
--
Oh supper tea
எழுத்தின் வசீகரம் கூடுதல் சிறப்பு ஆண்டாளைப்போலவே!
ஆண்டாளுக்கு டீயா.. இப்பத்தான் கேள்விப்படுறேன். ஆச்சரியப்படுறேன்.
Evening market பக்கத்ல ஒரு கடை லேர்ந்து "ஆண்டாள்" 20 bottles Fanta குடிச்சத பார்த்ததுண்டு... Tea குடிக்கறத பத்தி கேட்டது இப்போ தான் 1st time !! :)
சேர்த்தி photo superb! Tea கூட பார்க்க நன்னா இருக்கு...
தேநீரின் நிறத்தில் தெரிகிறது அதன் குணமும் மணமும்.
மழை மாலையில் நணபர்களோடு அருந்தும் தேநீராய் இந்த பதிவு.
முழுக்கக் குடித்ததும் ஆண்டாளிடம் “டீ எப்படி” என்று கேட்டால் ஜோராய் ரசனையுடன் தலையாட்டுகிறது !
ரசனையான பகிர்வு...
சேர்த்தி உற்சவப்படங்கள் அருமை.. சிற்ப்பான பாராட்டுக்கள்..
ஆண்டாளுக்கு டீ....உறிஞ்சிக் குடிக்குமா, தூக்கிக் குடிக்குமா!
சுவாரசியமான தகவல் கூடுதல் சுவையான எழுத்துவரிகளுடன். நன்றி ரிஷபன் சார்.
உறையூர் சேர்த்தியை மென்ஷன் பண்ணிவிட்டு ஆண்டாள் டீக்குத் தாவிவிட்டாய்! போன வருஷம் மாப்பிள்ளை செல்லப்பிள்ளையும் சுமதியும் தேர் சமயத்தில் பெரிய அண்டாவில் டீ வைத்துக் கொண்டு காத்திருக்கும் போது நான் ‘நீர்மோர்’ தருவதைப் போல் பக்தர்களுக்குத்தான் என்று நினைத்துவிட்டேன். யானைக்கு கொடுத்தபோதுதான் வியந்தேன். (நிறைய பிஸ்கட்டுகளும் கொடுத்தான்!) எனக்கு அது முதல் அனுபவம். - ஜெ.
தொடர்பணியோட்டத்தில் தொடவே வந்தேன். வருவேன் பயணம் முடித்து.
நம்மோடு இருந்து அதற்கும் நம் உணவுப் பழக்கம் பழகிவிட்டது போல!
Post a Comment