July 27, 2012

தேவதை

சிறகுகளை
மறந்து விட்டு
அழுகிறது ஒரு தேவதை.
நான் ஒரு மனிதன்
என்பதை மறந்து விட்டு
தேற்றத் துடிக்கிறேன்..
எனக்கும் முளைக்கிறது
இரு சிறகுகள்..

22 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

படத்துக்குக் கவிதையா, கவிதைக்குப் படமா?!

வெங்கட் நாகராஜ் said...

படமும் கவிதையும் கலக்கல்....

முகப்புத்தகத்தில் தொடர்ந்து அசத்தறீங்க ஜி!

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

Yaathoramani.blogspot.com said...

படமும் கவிதையும்
மிக மிக அருமை
மனிதன் என்பதை மற்ந்து
கொஞ்சம் உயர்வாகச் சிந்தித்தாலே
நிச்சயம் சிறகுகள் முளைக்கும்
மனம் கவந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நன்றி வெங்கட் :)

raji said...

nice:-)

இராஜராஜேஸ்வரி said...

தேற்றப்போய்
தேவதை ஆனது இனிமை !

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான சிறு கவிதை. பாராட்டுக்கள்.

//இராஜராஜேஸ்வரி said...
தேற்றப்போய் தேவதை ஆனது
இனிமை !//

மிகச்சரியாகச் சொல்லியுள்ளது இனிமையிலும் இனிமை. ;)))))

sathishsangkavi.blogspot.com said...

சிறகுகள் அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

படமும், கவிதையும் ... எது அழகு...?
இரண்டுமே அருமை... நன்றி...

vasan said...

தேறுத‌ல் ஆற்ற‌ எண்ணுமிட‌த்தே
அவ‌ருக்கு தேவ‌ ஆற்ற‌ல் வ‌ந்துவிடுகிற‌தோ?

சீனு said...

கவிதை அழகு

ஹேமா said...

அசத்தலான கற்பனை ரிஷபன் !

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் நல்லதொரு கற்பனை!....

vimalanperali said...

மனிதர்களே தேவதைகளாக தெரிகிற சமூகம் இது.தேவதைகளை மட்டுமல்ல அழுகிற யாரையும் தேற்ற நம்மால்தான் முடியும்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

நம் பலம் நமக்கே தெரிவதில்லை என்பார்கள். தேவதைக்கும் தெரியவில்லை போலும். சிறகில்லா மனித உள்ளம் உயர்வாய் உள்ள, பறக்கிறது எண்ணங்கள் சிறகு விரித்து. அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.

நிலாமகள் said...

ம‌ற‌தி ஒன்றாயினும் ப‌ய‌ன் இரு வேறு!

manichudar blogspot.com said...

படத்திற்கேற்ற கவிதையா, கவிதைகேற்ற படமா ஏதாயினும் அழகு .

சீனு said...

உங்கள் விருப்பத்தை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html

கோமதி அரசு said...

மனிதனும் தேவனாகலாம் என்பது இது தானா!
அன்பு கருணை இருந்தால் ,அடுத்தவர் துன்பத்தை துடைத்தால் சிறகுகள் முளைத்து தேவனாகி விட்டான்.
அருமை.

பால கணேஷ் said...

குறுங்கவிதை அபாரம்.

Deepa said...

Wow!!!