September 12, 2012

பூக்கள்

தேடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு தோட்டமாக..

அறியாமல் தொலைத்த பூவை !



தொடுத்த பிறகே

தெரியும்..

எந்த மலர் தன் காம்பு இழக்குமென..




இயற்கையின் காதல்

தோட்டப் பூக்களாய்..

மனிதனின் காதல்

அவற்றைப் பறித்து..

15 comments:

நிலாமகள் said...

இர‌ண்டும் மூன்றும் ம‌ன‌சில் ஒன்றாக‌.

கீதமஞ்சரி said...

தொடுத்தவை அனைத்தும் சுகந்தம். இறைவனின், மனிதனின் காதல்வெளிப்பாடு அசத்தல். பாராட்டுகள் ரிஷபன் சார்.

சிவகுமாரன் said...

\\இயற்கையின் காதல்

தோட்டப் பூக்களாய்..

மனிதனின் காதல்

அவற்றைப் பறித்து///


ஆகா அருமை.
இயற்கையின் காதலைப் புரிந்து கொள்ளாத நமக்கு காதலிக்க, அதுவும் பூக்கள் கொடுத்து காதலைச் சொல்ல, என்ன உரிமை இருக்கிறது?

இராஜராஜேஸ்வரி said...

"பூக்கள்" ரசிக்கவைக்கின்றன..

Unknown said...

சிலவற்றை தொடுக்கும்போதே தெரியும் இல்லையா ரிஷபன் ஜி.. மென்மையான, அழகான கவிதைகள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


பூக்களின் நறுமண சுவாசம் தங்கள் கவிதையை வாசிக்க வீசும்



அன்புடன்
ஆர்.ஆர்.ஆர்.

செய்தாலி said...

ம்ம்ம் நச் வரிகள் சார்

ஸ்ரீராம். said...

மனிதக் காதலை மலரச் செய்யவே தோட்டப் பூக்கள் பூக்கின்றனவோ...! மறந்த காதலை மலரச் செய்ய தொலைத்த பூவைத் தேடித் தோட்டம் தோட்டமாய்?!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... முடிவில் நான்கு வரிகளும் மிகவும் அருமை...

Yaathoramani.blogspot.com said...

இயற்கையின் காதல்
தோட்டப் பூக்களாய்..

மனிதனின் காதல்
அவற்றைப் பறித்து..//

அருமையான வரிகள்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

vasan said...

/இயற்கையின் காதல்

தோட்டப் பூக்களாய்..

மனிதனின் காதல்

அவற்றைப் பறித்து../

ம‌னித‌ன் அந்த‌ இய‌ற்கையையே
செய‌ற்கையாக்கி, செய‌ற்க‌ரிய‌ச் செய்ததாய்
மார்த‌ட்டி, இய‌ற்கைக்கே எதிராய் போகிறானே!!
ஏன் இந்த‌ முர‌ண்?

ADHI VENKAT said...

அருமையான கவிதை.

arasan said...

இயற்கையின் காதல்

தோட்டப் பூக்களாய்..

மனிதனின் காதல்

அவற்றைப் பறித்து..//

இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது நண்பரே ...
கவிதை கலக்கல் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

மூன்றாவது மனிதனின் மூடத்தனத்தினை பறைசாற்றுகிறது....

நல்ல கவிதைகள்...

பால கணேஷ் said...

இயற்கையின் காதல். மனதைத் தொட்டன வரிகள். கவிதை இனிமை.