December 07, 2012

வனதேவதை

வன தேவதையின்

வருகைக்குக் காத்திருக்கிறது

அந்த வனம்..

பசுமை அழிந்த காட்டின்

துளிர்கள்..

பனித்துளிகளினூடே

உயிர்த்திருக்கிறது..

பறவைகள் அறியக் கூடும்


தேவதை வந்தால்..

பட்டாம்பூச்சிகளும்..

தவறிப்போய் ஓரிரு

மானிடர் அறியலாம்..

உன்னைப் போல்..

என்னைப் போல்..

இமை கொட்டாமல்

காத்திருப்போம்

இவ்விருட்டில் விடியும் வரை. 


16 comments:

கே. பி. ஜனா... said...

ஆம் காத்திருப்போம் கையில் இந்தக் கவிதையுடன்!

raji said...

சிவப்புக் கம்பளத்துடன், பச்சையாடை அணிந்த வனதேவதையின் வருகைக்கு காத்திருப்போம்

மனோ சாமிநாதன் said...

அந்த ஓவிய சிறுமி கூட காத்திருப்பது போலத் தோன்றுகிறது! ஒருவேளை இவள் தான் அந்த வன தேவதையோ?

வெங்கட் நாகராஜ் said...

வாவ்....

படமும் படத்திற்கேற்ற கவிதையும் அருமை....

sury siva said...

வன தேவதையே ! நீ
வாராது
வருத்துவாயோ ?

வந்தும் என்
உள்ளத்தைப்
பூவெனக் கொய்வாயோ !
இல்லை இல்லை எனச்சொல்லி
இனிதே உன்
இதழ் மலர்ந்து
நெஞ்சுடன் அணைப்பாயோ !

வா.

சுப்பு ரத்தினம்.


ஸ்ரீராம். said...

அருமை. துளிர்க்கும் நம்பிக்கைகள்.

இராஜராஜேஸ்வரி said...

வன தேவதையின்
வருகைக்குக் காத்திருக்கும் அந்த வனம்..
வளம்மிக்க கவிதை வரிகளால்
வண்ணம் கொள்கிறது ...

vasan said...

வ‌ன தேவ‌தைக‌ள் வ‌னத்துள் வ‌ந்த‌ம‌ற‌
வான தேவ‌தைக‌ள் ஆசிர்வ‌திக்க‌ட்டும்.
அதுவ‌ரை..............
வ‌ன‌த்தை காத்திருப்போம் க‌ண் கொட்ட‌து,
இந்த‌க்........ க‌ய‌வாலி, க‌ள்வானி
அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌மீருந்து.

G.M Balasubramaniam said...


வனதேவதையிடம் என்ன எதிர்பார்க்கலாம். ?இரவு உறங்காது காத்திருப்போம்.

ADHI VENKAT said...

வன தேவதையின் வருகைக்காக காத்திருப்போம் இந்த அழகான கவிதையுடன்.

Studentsdrawings said...

கவிதை அருமை...

Ranjani Narayanan said...

உங்களுடன் நாங்களும் காத்திருக்கிறோம் ரிஷபன் சார்!

http://thiruvarangaththilirunthu.blogspot.in/

நிலாமகள் said...

அவள் வருவாளா? வந்தால் நம் வாழ்வில் வசந்தம் தான்.

vasan said...

ம‌க‌ன்/ம‌கள் வ‌ளர்ப்பின் க‌ண்டிப்புக்கும், பேர‌க்குழ‌ந்தைக‌ளை வ‌ள‌ர்க்கும் முதிர்ச்சிக்குமான, ம‌னவிய‌லை செயல் முறையில் அழ‌காக‌ விள‌க்கி இருக்கிறீர்க‌ள்.
"ம‌க‌ன்/ம‌க‌ள் பிற‌ந்தால் ஆன‌ந்த‌ம்.
பேர‌ன்/பேத்தி பிற‌ந்தால் பேரான‌ந்தம்' ஏதே ஒரு வார‌ந்திரியில் எப்போதோ ப‌டித்த‌ வ‌ரிக‌ள் மீண்டும் நினைவ‌லையில்.
பேர‌னுக்கு எங்க‌ள‌து வாழ்த்தை தெரிவியுங்க‌ள்.

மாதேவி said...

வனதேவதையை வரவேற்கும் கவிதை எம் இதயத்தையும் மலரச் செய்கின்றது.

manichudar blogspot.com said...

படமும் பா 'வும் நல்ல பவுசாய் பொருந்தியுள்ளது.