நாமக்கல்லில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மோகனூரில் ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணன் அருள் பாலிக்கிறார்.
அலுவலக நண்பரிடம் இந்தப் படத்தைப் பார்த்து அதிசயித்தேன்.
தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க வழிபட வேண்டிய தலமாம்.
தாமரையின் இதழன்ன கண்களும் உருவிலே
சரிபாதி பெண்ணுமாய்
தக்கவர் பாணங்களைச் சூடி வில் போல்
சற்றுடல் வளைந்தும் அழகில்
காமனையும் மிஞ்சியே வாசனை மிகுந்துள்ள
கவலைகள் உடம்பில் பூசி
கரங்களில் வனைக்கிளறி அங்குசங் குமுதம்
கருப்புலில் புட்பபாணம்
தேமதுரக் கானவிசை யாவரும் ஓவாது
செவிகளில் கேட்டு மகிழ
திருக்கரமிரண்டில் வேய்ங்குழலெடுத்துதியெண்
திசைகள் மெய்சிலிர்க்கவைத்து
சேமங்கள் இல்லாத வறியவருக்கழியாத
திரளான செல்வங்களீந்து
திகழ்கின்ற மோகனைக் கோபாலக் கிருஷ்ணனின்
திருவடி தியானிக்கிறேன்.
அலுவலக நண்பரிடம் இந்தப் படத்தைப் பார்த்து அதிசயித்தேன்.
தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க வழிபட வேண்டிய தலமாம்.
தாமரையின் இதழன்ன கண்களும் உருவிலே
சரிபாதி பெண்ணுமாய்
தக்கவர் பாணங்களைச் சூடி வில் போல்
சற்றுடல் வளைந்தும் அழகில்
காமனையும் மிஞ்சியே வாசனை மிகுந்துள்ள
கவலைகள் உடம்பில் பூசி
கரங்களில் வனைக்கிளறி அங்குசங் குமுதம்
கருப்புலில் புட்பபாணம்
தேமதுரக் கானவிசை யாவரும் ஓவாது
செவிகளில் கேட்டு மகிழ
திருக்கரமிரண்டில் வேய்ங்குழலெடுத்துதியெண்
திசைகள் மெய்சிலிர்க்கவைத்து
சேமங்கள் இல்லாத வறியவருக்கழியாத
திரளான செல்வங்களீந்து
திகழ்கின்ற மோகனைக் கோபாலக் கிருஷ்ணனின்
திருவடி தியானிக்கிறேன்.
15 comments:
கிருஷ்ணன் அழகோ அழகு!
கீழே எழுதியிருப்பது வெறும் ஆங்கில எழுத்துக்களாக இருக்கின்றனவே!
கொஞ்சம் பாருங்கள்.
”ஸம்மோஹன கிருஷ்ணன்”
என்ற பெயரே அழகாக உள்ளது.
//தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க வழிபட வேண்டிய தலமாம்.//
ஆஹா, இதுவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது.
சம்ஸ்கிருதத்தில் “ஸம்சர்க்கம்” என்ற ஒரு சொல் உண்டு.
கணவனும் மனைவியும் ஒருசேரக் கலந்து விடுவது என்ற பொருளும் அதற்கு உண்டு.
உடலால் மட்டும் கூடாமல் உள்ளத்தாலும் கூட
”ஸம்மோஹன கிருஷ்ணன்”
அவர்கள் அனுக்கிரஹிப்பாராக!
பகிர்வுக்கு நன்றிகள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
தூய்மையான பக்திக்கே முதலிடம் கொடுப்பவர்.
ஸ்ரீ ராதா, ஸ்ரீ மீரா, ஸ்ரீ ஆண்டாள் அனைவரையுமே அவர்களின் பிரேம பக்தியால் மட்டுமே ஆட்கொண்டவர்.
அதனால் எழுத்துக்கள் இங்கு அதுவாகவே ஸம்சர்க்கம் ஆகியுள்ளன.
பரவாயில்லை. அவைகள் அப்படியே இருக்கட்டும்.
ஆனாலும் விஷயம் புரிந்து விட்டது.
புறப்படுவோம், தனித்தனியாக இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி, தனித்தனியாக இரண்டு பேருந்துகளில் மோகனூர் [நாமக்கல்] நோக்கி.
தரிஸித்த பின், உடலால் மட்டுமின்றி, உள்ளத்தாலும் ஸம்சர்க்கம் ஆகி திரும்பிடுவோம் ஒரே டிக்கெட்டுடன் ஒரே கிஸ்ஸில் ஸாரி ... ஒரே பஸ்ஸில்!.
அன்புடன்
வீ....ஜீ
எழுத்துரு சரி செய்து விட்டேன் நன்றி,
இதுவரை பார்த்திராத படம்,அறிந்தாரத தகவல்கள்.கிருஷ்ணனின் படம் மிக அழகு.பார்த்துக்கொண்டே இருக்கலாம்..
கிருஷ்ணனின் படமும், கவிதை வரிகளும் அருமையோ அருமை.
மாயாதீதன் அல்லவா பரம்பொருளான கண்ணன்..!
திருவடி தியானிக்கிறேன்.
never knew!
அழகிய துதி! அர்த்த நாரீஸ்வரர் போல் இந்த சம்மோகன கிருஷ்ணன்! அறியத் தந்தமைக்கு நன்றி.
”ஸம்மோஹன கிருஷ்ணன்” அழகாக இருக்கின்றது.
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே...
பாதம் பணிவோம்.
The Right article to watch on the VALENTINE Day Sri, Rishban ji.
எனக்கு இது புதிய தகவல்.அழகான கவிதை.நன்றி
சிறு வயதில் சென்ற நியாபகம்
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
Post a Comment