July 25, 2013

பால்யம்

குழந்தைகளை
மிரட்டிக் கொண்டு
செல்கிறாய் நீ.
உன் அதட்டல்
கேட்காத அலட்சியத்தில்
பிள்ளைகள்.
'மிஸ்.. மிஸ்' என்று
உன்னைச் சுற்றி வரும்
பட்டாம்பூச்சிகளாய்..
என் பால்யம் திரும்புகிறது
அந்த நிமிடம்..
முன்பே பிறந்து விட்டதில்
முகம் சிணுங்கி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அழித்து அழித்து எழுத
இப்போது சிலேட்டும் இல்லை
நானும் சிறு பிள்ளையும் இல்லை..!



11 comments:

Yaathoramani.blogspot.com said...

படிப்பவர்கள் அனைவருக்குள்ளும்
அந்தப் பால்ய ஏக்கத்தை
ஒரு நொடி வரவழைத்துப்போகும்
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவை
அனைவரும் அறிய
தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்

ராஜி said...

கவலைப்படாதீங்கோ! இருக்கவே இருக்கு முதியோர் கல்வி அங்க போய் சேர்ந்துடுங்க!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏக்கம் நியாயமானது.

அழகான படைப்பு.பாராட்டுக்கள்.

Miss .... Miss என்று We are missing so many things. ;(((((

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

முன்பே பிறந்து விட்டதில்
முகம் சிணுங்கி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

ஏங்கவைத்து சிணுங்க வைத்தது பகிர்வு..!

ஜீவி said...

அந்த பட்டாம்பூச்சிகளுடான சந்தோஷத்தை அந்த மிஸ், மிஸ் பண்ணுவதும் தெரிந்தது.

Ranjani Narayanan said...

//அழித்து அழித்து எழுத
இப்போது சிலேட்டும் இல்லை
நானும் சிறு பிள்ளையும் இல்லை..!//

சிறு வயதின் ஏக்கத்தை எல்லோரையும் உணர வைத்துவிட்டீர்கள்!

வாழ்த்துக்கள்!

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

அருமையான வலைப்பூ! நல்ல பதிவுகள் பகிர்வுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. மகிழ்ச்சி!

இங்கும்... உங்கள் கவிதை அருமை. ரசிக்கவைக்கிறது உங்கள் எழுத்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோ!

முன்பே கடந்து முடிந்து மறைந்தது
பின்னுந் தெரியாப் பிறப்பு!


பி.கு: உங்கள் வலைப்பூவிற்கு வரமுடியாமல் சிரமப்பட்டவர்களில் நானும்....

இன்று துள்ளல் என்னிடம் இப்படி அடங்கிவிட்டது.

உங்கள் வலைப்பூ முகவரியில் பிற்பகுதியில்
http://rishaban57.blogspot.de

இப்படி இருப்பதை

http://rishaban57.blogspot.com/ncr

இப்படி மாற்றி எழுத துள்ளல் அடங்கி சாந்தமாகிறது. இதை முன்பு வேறொருவர் தளத்தில் கண்டதை முயன்றேன். வெற்றி!
நன்றி!

vimalanperali said...

சிலேடு வைத்துக்கொண்டு சிறுபிள்ளையாய் ஆகும் பாகியம்பெற வேண்டும் என்கிற நினைப்பெல்லாம் எதற்கு?நினைவுக்கூடுதான் இருக்கிறதே?,,,,,,,,,,,,,

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.... பால்யம் நினைத்தாலே ஒரு வித மகிழ்ச்சி...