August 16, 2013

கண்ணே கணினி மானே.. (தொடர் பதிவு)
மஞ்சுபாஷிணி மேடம் என்னையும் இதில் சேர்த்து விட்டதுக்கு நன்றி முதல்ல.

என்னதான் கொசுவர்த்தி சுருள் சுத்தினாலும் முதல் முதல்ல கணினியை எப்போ தொட்டேன்னு.. ரொம்பவே யோசிச்சேன்.

ஆ.. ஞாபகம் வந்திருச்சு. அக்கவுண்ட்ஸ்ல இருக்கறதால கஸ்டமர்ட்ட இருந்து வர கலெக்ஷன் பணத்தை அக்கவுண்ட் பண்ண அப்போ ரெண்டே ரெண்டு சிஸ்டம் வச்சிருந்தாங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு டைம் ஸ்லாட்..

ஏற்கெனவே டிசைன் பண்ணி வச்ச ப்ரொக்ராம்.. அதுல லாக் இன் பண்ணி அந்தந்த பீல்ட்ல செக் நெம்பர் தேதி கஸ்டமர் பெயர் வந்த தொகை இப்படி பில் அப் பண்ணனும். அதுக்கு செக் லிஸ்ட் வரும் தப்பா அடிச்சிருந்தா கரெக்ட் பண்ணனும் இப்படி ஆரம்பிச்சது. ஆனா இது டெர்மினல் டைப்.. டேட்டா ரொப்ப மட்டும்தான்.. இதில் வேற எதுவும் நம் விருப்பத்தில் இல்லை.

அப்புறம் தான் ஒரிஜினல் கணினியின் அறிமுகம்.. ஒவ்வொருத்தருக்கும் பாஸ்வேர்ட்.. கொண்டு வந்து வச்ச புண்ணியவான் ஏகத்துக்கு பயமுறுத்திட்டு போக. அதைத் தொடவே ரொம்பவே யோசிச்சி.. ஒருத்தர் கொடுத்த தைரியத்துல எக்செல்.. வேர்ட்.. இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லை விஸ்தீரணம் ஆச்சு.. இப்போ எல்லோருக்குமே ஆளுக்கொரு கணினி.. அதைத் தவிர வீட்டுலயும்...

 என்னைப் பாதிச்ச சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி, அபூர் சன்ஸார், அபரஜிதோவை டவுன் லோட் பண்ணி பார்த்தப்பதான் கணினி மேல எனக்குப் பயங்கர காதலே வந்திச்சு..

ஒரு நணபர் இன்னமும் விடாம டிபேஸ்.. பாக்ஸ்ப்ரோ.. அடிச்சுகிட்டு இருக்காரு.. அவரை நல்லாவே கலாய்ப்போம்.. 30 வரில ப்ரோகிராம் எழுதி 28 வரிக்கு * போட்டிருக்கீங்க.. அப்பவும் அது வொர்க் பண்ணுதுன்னு.

எல்லாமே சுயம்பு தான்.. அடிபட்டு அடிபட்டு தப்பு பண்ணி சரி பண்ணி கத்துகிட்டது.. பர்ஸ்ட் கணினியைத் தொடும்போது அது ஏதோ ஷாக் அடிக்கப் போறாப்ல பயத்துல தொட்டது போக.. அப்புறம் ஒரு சவடால்த்தனம் வந்தாச்சு.

முன்பு கையால் எழுதி கதைகள் அனுப்பினது போக அப்புறம் கணினியில் டைப் பண்ணி கன்வர்ட் பண்ணி அனுப்பற அளவு வந்ததும் எனக்கே ஒரு ஆச்சர்யம்தான்.

பிலாக் ஆரம்பிக்க திரு. ரேகா ராகவன் உதவினார். அவர் மட்டும் என்னைத் தூண்டலேன்னா இவ்வளவு பதிவுகள் போட்டிருக்க மாட்டேன். அதைப் படிச்சு எனக்குப் பாராட்டும் திட்டும் சொன்ன நட்பு வட்டம் அமையலன்னா இந்த அளவு வளர்ந்திருக்க மாட்டேன்..

கணினித் துறையில் எவ்வித படிப்பும் இல்லாமல் இப்படி பிலாக், முக நூல் என்று இப்போ (சுமாராவாவது) கலக்கிகிட்டு இருக்கேன்னா.. அதுக்கு எனக்குள்ளே ஒளிஞ்சுகிட்டிருந்த ஒரு வித தன்னார்வம்தான் காரணம்..

இப்பவும் கணினி பத்தி எனக்கு முழுமையாத் தெரியாது.. ஆனா வல்லுனர்கள் இப்படி பண்ணலாம்னு சொல்றப்ப லேசாப் புரியற மாதிரி இருக்குன்னா அது என் முன்னோர்களின் அறிவுஜீவித்தன ஜீன்ஸ் தான் ..

நிறைய சொல்லிட்டே போலாம்.. ஆரம்பகால அசட்டுத்தனங்கள்.. பூட் ஆகல.. சிஸ்டம் தானா ஆஃப் ஆகி ரீபூட் ஆகுது.. ஓஎஸ் பண்ணிடலாம்.. கண்ட் ரோல் பேனல்ல பார்த்தீங்களா.. இப்படி முதல் முதலா கணினி  சம்பந்தமான வார்த்தைகளை கேட்டபோது மாடு விரட்டி மிரண்டு நிற்கிற மாதிரி நினறதும்.. பின் தெளிந்ததும்..

பாவம் ரேகா ராகவன் ஸார்.. சாட்ல வந்து அவர் சொன்னது எனக்குப் புரியாம.. காது டப்பாஸு மாதிரி 'ஆ.. ஆ' கேட்க அவர் போன்ல வந்து சொல்லிப் பார்த்து அதுவும் புரியாம முழிக்க.. உங்க பாஸ் வேர்டை சொல்லுங்க நானே சரி பண்ணிடறேன்னு அட்சதை போட்டுகிட்டதும்..

என்னதான் சொல்லுங்க.. நாமளே கண்டுபிடிச்சு.. கற்றுக் கொள்ளும் அந்த நிமிட உற்சாகத்திற்கு ஏதாச்சும் ஈடு உண்டா.. அந்த வகையில் கணினி தினமும் எனக்கு ஒரு உற்சாக ஊற்றுத்தான் இப்போதும் !

யார் வேண்டுமானாலும் தொடரலாம்,,  

வாசிக்க எங்களுக்கு கசக்குமா என்ன?


12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக, உண்மையை உண்மையாகச் சொல்லிட்டீங்க, சார்.

நிறுத்தி நிதானமா இரண்டு முறைகள் படித்தேன். பழைய D base போல பல கணினி வார்த்தைகள் மறந்து போனதை நினைவு படுத்தினீங்க.

பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

தங்களை எழுதச்சொன்ன மஞ்சுவுக்கும் பாராட்டுக்கள். ;)

அப்பாடி, நீங்க ஒருவழியாத் தப்பிச்சுட்டீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப்புத் தேர்வுக்குத் தலை வணங்கிறேன்.

கண்ணே கலை மானே ... க்குப்பதிலா

கண்ணே கணினி மானே !

சூப்பர், சார். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

[”அடடா என்ன அழகு ..... அடையைத் தின்னு பழகு”
போலவே இருந்துச்சு. ;)))))]

ப. தியாகு said...

சிஸ்டம் அறிமுகமான சமயம் எனக்கு copy, paste பண்ணத்தெரியாமல் நண்பன் ஒருத்தன் போனில் திட்டிக்கிட்டே சொல்லித்தந்தது இப்பொ நியாபகம் வர சிரிப்பு வருது ரிஷபன் ஜி. ப்ளாக் டிசைன் சம்பந்தமா உங்ககிட்டே நிறைய கத்துக்கிட்டதும் அப்படித்தான். இப்போ பாருங்க கம்ப்யூட்டரில் கமெண்ட் எழுதிக்கிட்டிருக்கேன். :) எழுதுங்க ரிஷபன் ஜி, நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்! :)

அமைதிச்சாரல் said...

அசத்தல்..

கீத மஞ்சரி said...

அட, கொசுவர்த்திச்சுருள் மணக்கிறதே. கணினியுடான அனுபவங்களை அழகாய் விவரித்தமை நன்று. தலைப்பு கவர்கிறது. பாராட்டுகள் ரிஷபன் சார்.

Manjubashini Sampathkumar said...

தலைப்பு க்யூட்….

கண்ணே கணிணிமானே…

இப்படிச்சொல்லும்போதே கணிணியை ஒரு காதலியைப்போல ஒரு பொக்கிஷம் போல நாம் செல்லும் பைக் போல.. இப்படி எத்தனையோப்போல….போற்றி பத்திரமா வெச்சிருக்கும் உங்க கணிணிக்காதல் தொடங்கியது ஆபிசில் தானாப்பா? அதுசரி ஆபிசுல எல்லாமே கம்ப்யூட்டர் மயமானபோது எல்லோருக்குமே ஒரு ஜெர்க் இருக்கத்தான் செய்யும்..


அடா அடா அடா…. என்னே தன்னடக்கம்.. ஓரளவு சுமாரா தான் வலைப்பூவிலும்… முகநூலிலும் கலக்குறீங்களாக்கும்…

ஒவ்வொரு பகிர்வுமே அற்புதம்பா உங்களோடது…கணிணி வீட்டிற்கு வந்ததும்.. ரேகா ராகவன் அவர்கள் சொல்லித்தர தர கொஞ்சம் கொஞ்சமா நீங்கள் சுயம்புவாக கற்றுக்கொண்டு கணிணியை உங்கள் கண்ட்ரோலில் வைத்திருப்பது சோ க்யூட்…


இன்னமும் கணிணி எனக்கு ஒரு உற்சாக ஊற்றே… தட்ஸ் த ஸ்பிரிட்… கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம் சொல்வது போல இன்னமும்…..

உங்க அனுபவம் அருமையாக.. ரசிக்கும்படி… ரசனையாக இருந்ததுப்பா…
எப்டி எப்டி.. கொசுவர்த்தி சுருள் போல… ஆஹா படத்தில் ஃப்ளாஷ்பேக்னா இப்படித்தானே? :) ரசித்தேன்பா..

நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கணிணித்தொடர் எழுதி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா…

மாதேவி said...

"கண்ணே கணிணிமானே" அழகிய தலையங்கத்துடன் ரசனையான பகிர்வு.

விமலன் said...

கறப்து ஒரு தவம் எனச்சொல்கிறார்கள். அது நமக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது காலம் கொடுத்த மிகப்பெரிய வரம் அது.இதுவும் ஒருவகையான மெடிடேஷனே/

ராஜி said...

என்னதான் சொல்லுங்க.. நாமளே கண்டுபிடிச்சு.. கற்றுக் கொள்ளும் அந்த நிமிட உற்சாகத்திற்கு ஏதாச்சும் ஈடு உண்டா
>>>
நிஜம்தான். என்னோட வலைப்பூவுக்கு என் ஃப்ரெண்ட்தான் அழகா டிசைன் பண்ணி கொடுத்தாங்க. அப்புறம் நானே பல பிளாக்குக்கு போய் தத்தக்க பித்தக்கான்னு சிலதுலாம் சேர்த்தேன். அது அழகா பிளாக்குல வரும்போது ஏதோ அவார்ட் கிடைச்ச சந்தோசம்!!

G.M Balasubramaniam said...

ஒவ்வொருவரின் கணினி அனுபவமும் சிறப்புதான். முட்டி மோதி தட்டுத்தடுமாறி.....அநேகமாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவங்கள்தான். பகிர்வுக்கு நன்றி.

Ranjani Narayanan said...

நாமே கண்டுபிடிச்சு கத்துகறதுல நிச்சயம் ஒரு தனி சந்தோசம் இருக்கு - உண்மை உண்மை, உண்மை!

தலைப்பபே ஒரு கவிதை!

இராஜராஜேஸ்வரி said...

கணினி தினமும்
உற்சாக ஊற்றுத்தான் !