எப்பவும் அடுத்தவ்ருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !
ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும்
ஒளிக்காமல் இருப்பதில்லை
இந்த மனசு !
ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும்
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
வாழ்நாள் முழுமையும் !
27 comments:
//ஆனால் இன்னமும் ஒரு குழல்..ஒரு மயிற்பீலி..ஒரு பீதாம்பரம்..சீந்துவாரற்று ! //
;)))))
வருத்தமேதும் இல்லை என்பதை மிகச்சிறிய வருத்தத்துடன் சொல்வது போல உள்ளது.
>>>>>
//ஒளித்து வைத்த மயிலிறகு குட்டி போடப் போவதில்லை என்றாலும் ஒளிக்காமல் இருப்பதில்லை இந்த மனசு! //
எவ்வளவு வயதானாலும் நம் மனசு எப்போதுமே தங்கம் தான்.
குழந்தை மனசு அப்படித்தான் இருக்கும், எதையும் ஒளிக்கத்தெரியாமல். ;)
சமயத்தில் மாட்டுவதும் அதனால் மட்டுமே !
>>>>>
மூன்றும் மிக அழகு.
//ப்ரியம் பூத்திருக்கும் பூவைப் பார்க்காவிட்டாலும் வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது வாழ்நாள் முழுமையும் ! //
சூப்பர் சார், அதே அதே ! ;)
கையைக் கொடுங்கோ, கண்ணில் ஒத்திக் கொள்ளணும்.
கும்மென்று நறுமணம் எப்போது மனதில் நிறைந்தல்லவா உள்ளது.
அதுபோதுமே!!!!!!
ப்ரியம் பூத்திருக்கும் பூவைக்கண்ணால் காணமுடியாவிட்டால் தான் என்ன!
நினைவுகளின் வாசனை தூக்கலாக மனதைச் சொக்க வைப்பதாக அல்லவா உள்ளது.
>>>>>
’நேசம்’ நேசம் மிகுந்த பாசமிகு படைப்பாக உள்ளது.
ஏதேதோ சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
மணம் கமழ்ந்த படைப்புக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
//ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும்
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
வாழ்நாள் முழுமையும் !//
மனதில் இருக்கும் அன்பை புரியவைக்க அவசியமே இல்லாது கண்களில் வழியும் கனிவைக்கண்டே உணர்ந்துவிடலாம்.. பவழமல்லி மலர்ந்து தோட்டமெல்லாம் படர்ந்து கிடக்க.... எத்தனையோ தூரத்தில் இருந்தாலும் அதன் வாசனை மனதை நிரப்பிவிடுவது போல... அன்பெனும் அற்புதம் வாழ்நாள் முழுக்க மணம் பரப்பி.. குணம் உணர்த்தி... அமைதியாய் தான் இருக்கும் இடம் கூட சொல்லாது புன்னகைக்கிறது.... குழந்தையாய்... அற்புதமான வரிகள்பா ரிஷபா.....
//எப்பவும் அடுத்தவ்ருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !//
அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கை எத்தனை உயர்ந்த மனம்.... தனக்காக எதுவும் வேண்டாது, தன்னைப்பற்றி நினைக்காது, தன் சுகம் பற்றி கவலையில்லாது, புன்னகைப்பூக்களாலும் அன்பின் சிறகாலும், தவறுகளை பொறுத்து மன்னித்து மென்மேலும் அன்பையே மருந்தாக்கி தரும் உயரிய மனசு.... இப்படி ஒரு தெய்வப்பிறவியாய் வாழ்வதில் தான் எத்தனை சுகம்.... தன் துன்பங்களை மறைத்து பிறர் சந்தோஷத்துக்காக சிரித்து.. சிரிக்கவைத்து.... இப்படியே காலம் சென்றுக்கொண்டு தான் இருக்கிறது.. இசைக்க வைத்த குழல்.. ரசிக்க வைத்த மயிற்பீலி, போர்த்திக்கொண்ட பீதாம்பரம்... இன்னும் மென்மையான அன்பின் கண்களில் பட்டுவிடும் என்ற நம்பிக்கையோடு தூசித்தட்டிக்கொண்டு.. குழல் இசைத்துக்கொண்டு.... மயிற்பீலி சேகரித்துக்கொண்டு.. பீதாம்பரத்தின் இழையை நெய்துக்கொண்டு.... காத்திருக்கிறது... அன்புப்பூக்கள் வந்து அமிழ்த்திவிடும் நொடிகளுக்காக..... சுயநலம் நிறைந்த உலகில்.... இப்படி பிறருக்காகவே வாழும் அற்புத வாழ்க்கையில் தெய்வமே நேர் வந்து நின்று வரம் தந்துவிடும்பா... சீரிய ஆழ்ந்த அற்புதமான வரிகள்பா ரிஷபா....
//ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும்
ஒளிக்காமல் இருப்பதில்லை
இந்த மனசு !//
மயிலிறகு புத்தகத்தில் ஒளித்து வைத்து தந்தவரின் நேசம் அதில் உயிர்த்தே இருப்பது போலவும்... குட்டிப்போட்டால் பெருகும் அன்பைப்போலவும்.... சிறுவயதில் குழந்தைப்பருவத்தில்... மயிலிறகு தாப்பா என்று அன்புக்குரியவரிடம் கேட்டு அதை வாங்கி பத்திரமாக புத்தகத்தில் வைத்து தினமும் குட்டி போட்டதா போட்டதா என்று எடுத்து எடுத்துப்பார்த்து “ அப்ப சின்னவயசுல தெரியாதேப்பா குட்டிப்போடாதுன்னு “ குட்டிப்போட்டுச்சுன்னா உனக்கு தரேன் என்று வாக்கும் வேறு கொடுத்திருப்போம்.. சோ ஸ்வீட்நா? பிள்ளைப்பருவத்தில் இதுபோன்ற குழந்தைச்செயல்கள் ரசிக்க வைப்பவை... மலரும் நினைவுகளில் சில மணித்துளிகள் அழைத்துச்சென்றது ரிஷபா இந்த கவிதை வரிகள்.... கவிதையை படித்து முடித்ததுமே “ குழந்தை மனசு “ என்று சொல்லவைத்த வரிகள் ரசிக்க வைத்த குழந்தை வரிகள்பா ரிஷபா...
த.ம.1
ரசித்தேன்.....
சிலருடைய நேசம் இப்படித்தான் மனதில் வாசனையைப் பரப்பிக் கொண்டிருக்கும்.
வணக்கம்
ரிஷபன்(அண்ணா)
கவிதையின் வரிகள் அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானும் ரசித்தேன்
:)
வார்த்தைகளை வைத்து ஜாலம் புரிகிறீர்கள்,நன்றாக உள்ளது
//ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும்
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
வாழ்நாள் முழுமையும் ! //
டாப் பூ!
\\ப்ரியம் பூத்திருக்கும் பூவைப் பார்க்காவிட்டாலும் வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது வாழ்நாள் முழுமையும் ! \\
அரூபப் பூவின் வாசம் உலகளக்கும் அதிசயம்.
பாராட்டுகள் ரிஷபன் சார்.
tha.ma.1
//எப்பவும் அடுத்தவருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !//
அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கை எத்தனை உயர்ந்த மனம்.... தனக்காக எதுவும் வேண்டாது, தன்னைப்பற்றி நினைக்காது, தன் சுகம் பற்றி கவலையில்லாது, புன்னகைப்பூக்களாலும் அன்பின் சிறகாலும், தவறுகளை பொறுத்து மன்னித்து மென்மேலும் அன்பையே மருந்தாக்கி தரும் உயரிய மனசு.... இப்படி ஒரு தெய்வப்பிறவியாய் வாழ்வதில் தான் எத்தனை சுகம்.... தன் துன்பங்களை மறைத்து பிறர் சந்தோஷத்துக்காக சிரித்து.. சிரிக்கவைத்து.... இப்படியே காலம் சென்றுக்கொண்டு தான் இருக்கிறது.. இசைக்க வைத்த குழல்.. ரசிக்க வைத்த மயிற்பீலி, போர்த்திக்கொண்ட பீதாம்பரம்... இன்னும் மென்மையான அன்பின் கண்களில் பட்டுவிடும் என்ற நம்பிக்கையோடு தூசித்தட்டிக்கொண்டு.. குழல் இசைத்துக்கொண்டு.... மயிற்பீலி சேகரித்துக்கொண்டு.. பீதாம்பரத்தின் இழையை நெய்துக்கொண்டு.... காத்திருக்கிறது... அன்புப்பூக்கள் வந்து அமிழ்த்திவிடும் நொடிகளுக்காக..... சுயநலம் நிறைந்த உலகில்.... இப்படி பிறருக்காகவே வாழும் அற்புத வாழ்க்கையில் தெய்வமே நேர் வந்து நின்று வரம் தந்துவிடும்பா... சீரிய ஆழ்ந்த அற்புதமான வரிகள்பா ரிஷபா...
//ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும்
ஒளிக்காமல் இருப்பதில்லை
இந்த மனசு ! //
மயிலிறகு புத்தகத்தில் ஒளித்து வைத்து தந்தவரின் நேசம் அதில் உயிர்த்தே இருப்பது போலவும்... குட்டிப்போட்டால் பெருகும் அன்பைப்போலவும்.... சிறுவயதில் குழந்தைப்பருவத்தில்... மயிலிறகு தாப்பா என்று அன்புக்குரியவரிடம் கேட்டு அதை வாங்கி பத்திரமாக புத்தகத்தில் வைத்து தினமும் குட்டி போட்டதா போட்டதா என்று எடுத்து எடுத்துப்பார்த்து “ அப்ப சின்னவயசுல தெரியாதேப்பா குட்டிப்போடாதுன்னு “ குட்டிப்போட்டுச்சுன்னா உனக்கு தரேன் என்று வாக்கும் வேறு கொடுத்திருப்போம்.. சோ ஸ்வீட்நா? பிள்ளைப்பருவத்தில் இதுபோன்ற குழந்தைச்செயல்கள் ரசிக்க வைப்பவை... மலரும் நினைவுகளில் சில மணித்துளிகள் அழைத்துச்சென்றது ரிஷபா இந்த கவிதை வரிகள்.... கவிதையை படித்து முடித்ததுமே “ குழந்தை மனசு “ என்று சொல்லவைத்த வரிகள் ரசிக்க வைத்த குழந்தை வரிகள்பா ரிஷபா...
//ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும்
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
வாழ்நாள் முழுமையும் ! //
மனதில் இருக்கும் அன்பை புரியவைக்க அவசியமே இல்லாது கண்களில் வழியும் கனிவைக்கண்டே உணர்ந்துவிடலாம்.. பவழமல்லி மலர்ந்து தோட்டமெல்லாம் படர்ந்து கிடக்க.... எத்தனையோ தூரத்தில் இருந்தாலும் அதன் வாசனை மனதை நிரப்பிவிடுவது போல... அன்பெனும் அற்புதம் வாழ்நாள் முழுக்க மணம் பரப்பி.. குணம் உணர்த்தி... அமைதியாய் தான் இருக்கும் இடம் கூட சொல்லாது புன்னகைக்கிறது.... குழந்தையாய்... அற்புதமான வரிகள்பா ரிஷபா.....
பிரியங்கள் எப்பொழுதுமே நம்மை சூழ்ந்து கொண்டும்,வாசனை வீசிக்கொண்டுமாய்/
ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும் ...//
நேசம் வைத்தவர்கள் எப்போதும் நினைவில் தான்...
அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கை,
குட்டி போடாது என புத்தி சொன்னாலும்
புத்தக பக்கங்க்களுக்குள் வைக்கப்படும்
மயிலறகாக பதியமாக்குகிறது குழந்தையுள்ளம்.
கண்கள் காட்டாததை நாசியே பார்த்துவிட
புலன் மயக்கம் தருகிறது அந்த பூக்கள்.
மயிலிறகும், புல்லாங்குழலும்,
பீதாம்பரமும், கண்ணனை கட்டி
இழுந்து வந்துவிடுகிறது மனதில்.
ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும்
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
வாழ்நாள் முழுமையும்
மணம் கமழ்ந்து
மனம் நிறைக்கிறது வாழ்வு முழுவதையும்...
பார்க்காமல் போகிற பூவிலிருந்து வருகிற வாசனை இன்னும் மனம் மயக்குவதாயும் எதிர்பார்க்க வைப்பதாயுமாகவே/
ஒளிக்காமல் இருப்பதில்லை இந்த மனசு.. mandhil indha varigal olitthukonde..
ஒளிக்காமல் இருப்பதில்லை இந்த மனசு !
கவிதை மிக அழகு.மனதிலிருத்த எல்லாமே மிக அழகு. அன்புடன்
Post a Comment