March 02, 2014

பிரார்த்தனை

குறுஞ்செய்திகளுக்காய் நிறைய பேர் இதழ் நடத்துகிறார்கள்.. அவ்வப்போது எனக்கும் சான்ஸ் தருவார்க்ள். அந்த குரூப்பில் சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் எழுதியதும் அனுப்பி வைப்பார்கள்.
அப்படி அறிமுகமானவர் தான்.. 
‘நல்லா இருக்கு’ன்னு ஒரு மெஸெஜ் அனுப்பியபோது தெரியவில்லை.. அவரைப்பற்றி எதுவும்.
6 மாதங்கழித்து வேறேதற்கோ பழைய செய்திகளை அலசியபோது.. டிலீட் ஆகாமல் இருந்த அவரின் ரெண்டு வரிக் கவிதை கண்ணில் பட்டது.
’எப்படி இருக்கீங்க.. அப்புறம் எதுவும் எழுதலியா’ன்னு ஒரு மெசேஜ் தட்டினேன்.
’உடம்பு சரியில்ல’
‘சரி பார்த்துக்குங்க.. முடிஞ்சப்ப எழுதுங்க’
’என்னைப்பத்தி தெரியுமா’
‘தெரியாது..’
சொன்னார். வீல் சேரில்தான் வாழ்க்கை. உடல் நலம் பாதித்து எப்போதும் ஹாஸ்பிடல்.. ட்ரீட்மெண்ட்.. 
வீட்டில் இருந்தபடியே ஏதோ ஒரு வேளை செய்து நாட்களைக் கழிக்கிறார்.
‘சரிங்க’
இன்னொரு 6 மாதம் கழித்து ‘நலமான்னு’ செய்தி அனுப்பினேன்.
இல்லையாம். அவர் அடுக்கிய உடல் உபாதைகளைப் படிக்கவே பயமாக இருந்தது. 
‘பேசட்டுமா’
‘வேணாம்.. அழுதுருவேன்.. அப்புறம் ஒரு சமயம் பேசலாம்.. ‘
‘டேக் கேர்’
’ஒண்ணு சொல்லட்டுமா’
‘சொல்லுங்க’
‘என்னையும் ஒருத்தர் விரும்பறார்.. இந்த நிலையிலும்.. கல்யாணம் கட்டிகிட்டா என்னைத்தான் கட்டிப்பாராம்..’
‘வாவ்.. நல்லது.. ரொம்ப மகிழ்ச்சி’
’எங்க வீட்டுல தயங்கறாங்க’
‘பேசிப் பாருங்க’
‘ம்ம்..’
‘நல்லதே நடக்கட்டும்.. உங்க கல்யாணத்துக்கு அவசியம் வரேன்’

இதுவரை பார்த்திராத.. பேசியிராத.. வெறும் குறுஞ்செய்தி மூலமே பழகிய.. அந்த நட்பு.. நினைத்தபடி நல்ல வாழ்க்கை அமையணும்னு இப்போ என் பிரார்த்தனை !







13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பிரார்த்தனை... வாழ்த்துக்கள்...

vimalanperali said...

அவரது உடல் பூரண்குஇணமடைய வாழ்த்துக்கள்,மாற்று மருத்துவங்கள் நிறைய இருக்கிறது,முயற்சித்துப் பார்க்கச்சொல்லுங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

‘நல்லதே நடக்கட்டும்..

அனைவரின் பிரார்த்தனையும்..!

பால கணேஷ் said...

அவரின் நிலையைப் படிக்கவும் மனம் கனக்கிறது அண்ணா! தன்னம்பிக்கை ஒன்றே நம் சொத்து, அதைக் கைவிடாமல் இருக்கச் சொல்லுங்கள். உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன் அவருக்காய்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோல முகம் தெரியாத நிறைய நட்புகள் அவ்வப்போது எனக்கும் சிலர் வருகிறார்கள்.

ஏதேதோ சொல்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சொல்லும் ஒருசில வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைத்தருவதாகவும் சொல்கிறார்கள்.

முன்பு என் வட்டத்தில், ஒருமிகப்பெரிய நாவல் எழுதுவதற்கு வேண்டிய நிறைய விஷயங்களுடன், ஒரு நபர் என்னுடன் மிகமிக நெருக்கமாகப் பழகி வந்தார். [As a Pen Friend only]

அவருக்கு வாழ்க்கையில் பல்வேறு சோகங்கள் + பிரச்சனைகள்.

அவருக்குப் பிரச்சனைகள் மட்டுமே வாழ்க்கையாக அமைந்துவிட்டது .... பாவம் ..... அவர்.

தினமும் பலமுறை என் தொடர்பிலேயே இருந்து வந்தார்.

உடனுக்குடன் என் பதில் வராது போனால் துடிப்பார். தூங்க மாட்டார். புலம்புவார். அழுவார்.

நான் எங்காவது செல்வதானால் அவரிடம் சொல்லிவிட்டே, நான் செல்ல வேண்டும்.

ஆனால் இப்போது அவரைக் காணோம். அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் என நான் இப்போதும் மனதார வேண்டுவது உண்டு.

தாங்கள் சொல்பவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

அன்புடன் வீ.....ஜீ

துளசி கோபால் said...

எங்கள் பிரார்த்தனைகளும் இத்துடன்.

நல்லா இருக்கட்டும்.

”தளிர் சுரேஷ்” said...

நல்லவை இனிதே நடக்க வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

முகமறியாமனிதருக்குப் பிரார்த்தனை நன்று. நானும் பங்கு கொள்கிறேன். என் தளத்தில் காதல் போயின் எனும் சிறுகதை பாதி எழுதி இருக்கிறேன். மீதிக்கதை வாசகர்கள் முடிக்க வேண்டுகிறேன். உங்களிடமிருந்தும் எதிர் பார்க்கிறேன்.

கே. பி. ஜனா... said...

மனம் பனித்தது!

வெங்கட் நாகராஜ் said...

எனது பிரார்த்தனைகளும்.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் அன்பருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.

கதம்ப உணர்வுகள் said...

உடல் உபாதைகள் எத்தனை இருந்தாலும்.... மனதை மட்டுமே நேசிக்கும் ஒரு சில உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறது...

குறுஞ்செய்தி மூலமாகவே ஒரு நட்பு தன் விஷயங்களை பகிர....

நலமா என்று நீங்கள் விசாரிக்க.. உங்களிடம் தன்னை ஒரு உள்ளம் நேசிப்பதைச்சொல்ல...

அவர்கள் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் என்ற நல்வாக்கு நீங்கள் சொன்னது அற்புதம்பா ரிஷபா...

என் பிரார்த்தனைகள் அவர் உடல்நலம் சரியாக... என் வாழ்த்துகள் அவர்கள் நேசம் வாழ்க்கையில் இணைந்து என்றும் நிலைத்திருக்க....

VELU.G said...

நண்பரே நலமா?