August 04, 2014

தஞ்சாவூர் கவிராயர் - ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி விழா

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி  அவர்களின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு  திரு . தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் நிகழ்த்திய உரை இதோ உங்கள் ரசனைக்கு !  












16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான உரை. நேரில் அவர்கள் வாயால் கேட்டு நம்மால் மகிழ முடிந்தது. இங்கு அவரின் அழகான கையெழுத்தினைக் காணவும் மீண்டும் பொறுமையாக வாசிக்கவும் முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு என் நன்றிகள்.

G.M Balasubramaniam said...

என் சிறுகதைத் தொகுப்புக்கு”வாழ்வின் விளிம்பில்” தஞ்சாவூர்க் கவிராயர் அணிந்துரை வழங்கி இருக்கிறார். அவருடைய கையெழுத்தை படிக்கச் சிரமப் பட்டபோது அதை கணினியில் தட்டச்சு செய்து உதவியவர் சுந்தர்ஜி. கவிராயரை அவர் வீட்டில் சந்தித்த அனுபவம் இருக்கிறது. மிகவும் சுவாரசியமான மனிதர்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்னும் பல நூல்கள் வெளிவர வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான உரை! பகிர்வுக்கு நன்றி! புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான உரை..

கவிராயரின் கையெழுத்தில் படிக்கும்போது அவர் குரலில் நேரில் கேட்பது போன்ற உணர்வு..

வாழ்த்துகள்.

ஜீவி said...

//வீட்டுக்கும் கலைஞனுக்குமான போராட்டம் என்பது யதார்த்தத்துக்கும் கனவுக்குமான போராட்டமாக காலம் காலமாக நடந்து வருகிறது.//

ஆஹா.. எவ்வளவு நிதர்சனமான வரிகள்!

இந்த போராட்டமில்லாத கலைஞர்கள் பொய்மையான பாக்கியவான்களோ; இல்லை, அவர்கள் கலைஞர்களே அல்லவோ?.. இல்லை அவர்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்தவர்களோ? இல்லை, கனவை விற்று யதார்த்தத்தைக் கைக்கொண்டவர்களோ?.. இல்லை, யதார்த்தமே கனவாகிப் போனவர்களோ! இல்லை, கனவுக்கும் யதார்த்தத்துக்கும், அல்லாது யதார்த்ததுக்கும் கனவுக்கும் பாலம் போட்டுப் பழகிக் களித்தவர்களோ!

கலைஞனுக்கும் கனவுக்குமான தொடர்பு என்னவெல்லாம் எண்ண வைக்கிறது!

ஹ்ம்.. விட்டு விடுதலையாகி என்பதே கனவோ!

முழுதும் படித்து முடித்த பொழுது மனசு விம்மியது.

கையெழுத்தில் என்ன இருக்கிறது என்றாலும் கவிராயரது எவ்வளவு அழகான கையெழுத்து!
ஜீஎம்பீ சார்! உங்கள் கையெழுத்து இதை விட படிக்க சிரமப்படுத்துவதாய் இருந்து அதைப் படித்துப் பழகிப்போனதால்
தெளிவானதைப் இயல்பாய் படிக்க முடியாது போயிற்றோ!

பால கணேஷ் said...

விழாவுக்கு வந்து கலந்து கொள்ள முடியாத மனக்குறையை ஓரளவு போக்கியது அவரது கையெழுத்திலேயே நீங்கள் தந்த அவரது உரை. நன்று. நன்றி.

அப்பாதுரை said...

கையெழுத்து எத்தனை அழகாக இருக்கிறது!

எவர்சில்வர் டிபன்பாக்ஸ் 'கவிதை' ரொம்ப நாளைக்கு மனதைச் சுற்றும். என்னப் பார்வை கவிராயர் பார்வை!

வெங்கட் நாகராஜ் said...

தஞ்சாவூர் கவிராயரின் உரையை அவரது கையெழுத்திலே படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.....

விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை - அடுத்த வாரம் திருச்சி வரும்போது [விடுமுறை கிடைத்தால்] சந்திப்போம்....

நெய்வேலி பாரதிக்குமார் said...

வர வாய்ப்பற்ற எங்களைப் போன்றோர் வாழ்த்தைப் பிடியுங்கள் கைநிறைய!!

கவிராயர் எண்ணம், எழுத்து, குரல் எல்லாம் ஒலிக்கிறது-ஒளிர்கிறது பதிவில்.

நன்றி!!

ராமலக்ஷ்மி said...

அருமையான உரை.

G.M Balasubramaniam said...

@ ஜீவி
அவர் எனக்கெழுதி இருந்த அணிந்துரையைப் படிக்க முடிந்தது. இருந்தாலும் அச்சில் வரும்போது என் புரிதலில் தவறு இருக்கக் கூடாதே என்னும் எச்சரிக்கை உணர்வும் நான் சுந்தர்ஜியின் உதவியை நாடக் காரணமாய் இருந்தது.

ADHI VENKAT said...

அருமையான உரையை அவரது கையெழுத்திலேயே படிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

நிலாமகள் said...

அருமையான வேலை பண்ணியிருக்கிங்க சார்!

கவிராயர் உரைக் கருத்துகள் உங்க தயவில் எங்களையும் அடைந்தது. படிக்கும் போது மனசில் அவர் பேச்சு அப்படியே ஒலித்தது.

ஜீவி said...

ஜிஎம்பீ சார்! தங்கள் பதிலைப் படித்து விட்டேன்.

Unknown said...

அருமையான அழுத்தமான வரிகள். 'ஆரண்ய நிவாஸ்' புத்தகத்தை படிக்க தூண்டுகிறது . நன்றியுடன் கண்மணி