November 01, 2014

இன்றைக்கான கவிதைகள் !




இன்றைக்கான கவிதைகள்




1. அதன் கண்களில்
ஒரு கெஞ்சல் இருந்தது..
சிறிது நேரம்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்ன செய்வதென்று புலப்படாமல்..
என் தயக்கம் பார்த்து
வினாடி நேரத்தில்..
ஆம்.. வினாடி நேரத்தில்
அதன் கண்களில்
மின்னி மறைந்த கேலி..
என்னைக் குறித்த
அதன் விமர்சனமாய்..
நிராகரித்து நகர்ந்தபோது
எனக்குத்தான்
அதிகமாய் வலித்தது..
அந்த புறக்கணிப்பு !


2. ஒரு நேரத்தில்
ஒரு கவலை
என்றுதான்
வகைப்படுத்திக் கொண்டேன்..
எனக்கும் அதுவே
வசதியாய் இருந்தது..
இப்போதெல்லாம்
ஓடி வந்து
மடியில் விழுகிற
அத்தனை மகிழ்ச்சிகளையும்
அப்படித் தள்ள முடியவில்லை !


3. வாயைத் திற..
பல்லைக் கடி இறுக்கமாய்
விட்டு விடாதே..
ம்ம்..
சூழ் நிலையை வாயில் திணித்து
அடிக்க ஆரம்பித்து விடுகிறது
வாழ்க்கை விளையாட்டு..

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்போதெல்லாம் ஓடி வந்து
மடியில் விழுகிற அத்தனை மகிழ்ச்சிகளையும் அப்படித் தள்ள முடியவில்லை !//

இனி என்ன மனக்கவலை ?

பாராட்டுகள். வாழ்த்துகள்.

அன்புடன்
வீ.....ஜீ

Thenammai Lakshmanan said...

மூன்றுமே அற்புதமான கவிதைகள் ரிஷபன்.. ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. !

சுப்ரா said...

வலியும் வாழ்க்கையும் கவிதையின் பாடுபொருளாக அமையும்போதும் கவிதை இனிமையையே தருகிறது .

தினேஷ்குமார் said...

என் தயக்கம் பார்த்து
வினாடி நேரத்தில்..
ஆம்.. வினாடி நேரத்தில்
அதன் கண்களில்
மின்னி மறைந்த கேலி..///

சொல்லில் ஒதுங்கிய நிகழ்வை எண்ணக்கண் காணுகையில் வலிக்கத்தான் செய்கிறது...

ராமலக்ஷ்மி said...

மூன்றும் மிக அருமை.

ஜீவி said...

முதல் கவிதை 'எதன்' என்பதைத் தெரிந்து கொள்வதின் கண்டுபிடிப்புச் சிறப்பில் மிளிர்கிறது.

இரண்டாதோ, மனசின் போக்கைச் அழகாகச் சொல்கிறது. துயரென்றால் வகைப்படுத்தி ஒவ்வொன்றாக; சந்தோஷமெனில், ஒருசேர அனுபவிக்க வாசற்கதவை விரியத் திறந்து வைப்பது. மகிழ்வையும் வகைப்படுத்தினால் ஆழ்ந்து அனுபவித்து அடுத்ததை இன்னும் சிறக்கச் செய்யுமோ என்று இடுக்கில் ஓர் எண்ணம் எழுதவதைத் தவிர்க்க முடியவில்லை.

விளையாட்டாய் வாழ்க்கையை எடுத்துக் கொள்வதற்கும் அசாத்திய உள்ளத் திண்மை வேண்டும். சூழ்நிலை திக்குமுக்காடல்கள் எப்படி 'அடித்து' அனுபவமாகின்றன என்பதை வாயில் திணிப்பதாய் சொன்ன நேர்த்தியும் அழகு.

மூன்றும் மூன்று இரத்தினங்கள்.
அருமையான இரசனை.

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய கவிதைகள் மூன்றுமே ரசித்தேன். அருமை. பாராட்டுகள் ரிஷபன் ஜி!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அருமை ஐயா

Unknown said...

ஒரு நேரத்தில்
ஒரு கவலை
என்றுதான்
வகைப்படுத்திக் கொண்டேன்.. // அட, இந்த திட்டமிடல் நல்லாயிருக்கே ரிஷபன் ஜி... :)

Yaathoramani.blogspot.com said...

கவிதைகளும் அதற்கான தாலைப்பும் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Kavinaya said...

வாழ்வியல் கவிதைகள் அருமை!