February 19, 2009

நீ

மரத்தில் பூ இலை காய் பழம்

எதையும் விட்டு வைப்பதில்லை பிறர்

ஆனால் தினம் நீர் ஊற்றும் நீயோ நின்று பேசிப் போகிறாய்

உடைந்த கிளையைத் தொட்டு

அதன் வலி மறந்து அடுத்த நாளும் பூக்கிறது உற்சாகமாய்

3 comments:

கே. பி. ஜனா... said...

நீ செடிக்குச் செய்ததையே நான் இந்தக் கவிதைக்கும் செய்ய விரும்புகிறேன்: நின்று பாராட்டிச் செல்ல! இன்னும் நிறைய பூக்கட்டும்!
_கே.பி.ஜனார்த்தனன்.

CS. Mohan Kumar said...

அந்த மனது எத்தனை அற்புதமானது !! வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என சொன்ன வள்ளலார் மனது. நிறைய எழுதுங்கள்


மோகன் குமார்

http://veeduthirumbal.blogspot.com/

கதம்ப உணர்வுகள் said...

செடிக்கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த வரிகள் இவை....

சுய நலத்துடன் மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் உயிர் துடிக்க வலி தெறிக்க பிடுங்கிக்கொண்டு போகும் மனங்களிடையே....

செடிகொடிகளும் மரங்களும் தன் உயிர் வலியை சிநேகிதபாவத்துடன் பகிரும்போது மனம் இசைந்து அதைக்கேட்டு ஆறுதல் சொல்லும் அற்புதமான மென்மையான மனதினை “நீ” என்றுச்சொல்லி வரைந்த கவிதை வரிகள் மிக மிக அருமை...

மனிதனும் அவ்வாறே... தன் வலி, வேதனைகளை அன்போடு நம்பிக்கையோடு பகிரும்போது அந்த வலியை வேதனையை இகழாமல் உருக்குலைத்துவிடாமல் ஆறுதல் சொல்லி அணைத்து நல்வழியில் நடத்திச்செல்லும்போது மனம் லேசாகி தன் நாட்களை சந்தோஷமாக நகர்த்திக்கொள்ள முயல்கிறது....

மரத்தின் வலியை மறந்து அடுத்த நாளே சந்தோஷமாய் பூக்கும் அற்புதம் இது தான் என்று எத்தனை தத்ரூபமாக சொல்லிட்டீங்கப்பா?

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா அற்புதமான கவிதை வரிகளுக்கு..