எனக்கான அடையாளம் தொலைத்து
எங்கும் பரவி நிற்கும் அன்பாய்
காற்றின் கை கோர்த்து நடக்கிறேன்..
எனக்கு முன்னும் பின்னுமாய் எத்தனை காலடித்தடங்கள்..
எவர் முகமும் எனக்குத் தெரியவில்லை.
சகலமும் என் முகமாய்..
காற்றின் அறிமுகமாய்..
ஒவ்வொரு சூறாவளிக்குப் பின்னும்
உயிர்த்தெழும் மானுடம்
காற்று அளித்த வரம்.
3 comments:
Very Poetic Good One
காற்று தங்களை வெகுவாக கவர்ந்த ஒன்று என தெளிவாக தெரிகிறது. இது மிக நல்லது. காற்று நம் மீது பட்டு போகும் கணம் அற்புதமானது. ஆயினும் பலர் இதனை கூட ரசிக்க மாட்டாமல் தத்தம் கவலைகளில் மூழ்குகிறார்கள்.
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
காற்றை நேசிக்கும் ஒரு அற்புத பிறவி....
காற்றின் ரகசியங்களை எல்லாம் அறிய முற்படும் ஆச்சர்யப்பிறவி....
காற்றினூடே கைக்கோர்த்து நடக்கும் ஒரு அன்புப்பிறவி...
மனிதர்களை நேசித்து... இயற்கையை நேசித்து.... இப்படி ஒரு அழகிய கவிதைப்பகிர்வு தர இயல்கிறது.....
தனிமை மனிதனுக்கு ஞானத்தை போதிக்குமாம்....
இங்கேயோ காற்றின் துணைக்கொண்டு மானுடத்தின் உயிர்ப்பின் ரகசியம் அறிய முயற்சிக்கும் அதிசயம் கவிதை வரிகளில்.....
அற்புதமான ஆழ்சிந்தனை வரிகள் பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா....
Post a Comment