November 01, 2009

கவிதைகள்




நான் இப்போது

புன்னகைகளை சேகரிக்கிறேன்

எத்தனை விதமாய் புன்னகைகள் !

சில கனிவாய் ..

சில எள்ளலாய் ..

சில ஆராய்ச்சியுடன் ..

சில பிரத்தியேகமாய் எனக்கே எனக்காக ..

இதுவரை கணக்கிலடங்கா

புன்னகைகள் பார்த்தும்

அமையவில்லை

எனக்கே எனக்கான

ஒரு ஸ்பெஷல் புன்னகை

என் உதட்டின் மீது !

*****************************************

பல வருடங்களாய்

பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆனாலும் முடியவில்லை

எத்தனையோ பேர்

முட்டி மோதி முயற்சித்தும்

அசல் போல வரவில்லை

ஒப்பிடுதலில் பிழை

கண்டு பிடிக்கப்பட்டு விடுகிறது.

சலிக்காமல் இன்னும் முயற்சிகள்

என்றாவது ஒரு நாள்

கிடைத்து விடக் கூடும்

அசலாய் ஒரு நகல்
நிஜமாய் ஒரு பிரியம் !



2 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

உங்கள் புன்னகை
எனக்கு பொன் நகை
படித்ததும் பொங்கியது
என்னுள் பரவசம்.

ரேகா ராகவன்

K.B.JANARTHANAN said...

ஸ்பெஷல் கவிதைகள்! எங்களுக்கே எங்களுக்காய்!
-- கே.பி. ஜனா