November 28, 2009

ஸ்பரிசம்

விளக்குகளை அணைத்த பின்னும்
ஒரு வெளிச்சம் போல
அவள் பார்வைமின்னிக் கொண்டிருந்தது.
உதடுகள் அசைவின்றி
மௌன மொழியில் எங்கள் உரையாடல்.
அவ்வப்போது தொட்டுக் கொண்டதில்
மனசுக்குள் சின்ன அதிர்வு.
'ஓடாதே.. விழுந்துருவே..'
குழந்தையைத் துரத்திக் கொண்டு வந்தவள்
விளக்கொளிர விட்டு சொன்னாள்..
'இருட்டுல யாரு.. நடு வழில'
குழந்தை வந்துசுவாதீனமாய் மடியில் அமர்ந்தது..
'ஹை.. ஆண்ட்டி'
அம்மாக்காரி நகர்ந்து போனாள் பெருமூச்சுடன்..
'கொஞ்ச நேரமாச்சும்நான் நிம்மதியா இருக்கேன்'
பிஞ்சு விரல்களின்மெத்தென்ற ஸ்பரிசத்தில்
எங்கள் மௌனம் இனிமையாய்
மொட்டவிழ்த்துக் கொண்டது அப்போது..
ஒரே நேரத்தில் சொன்னோம்..
'ஹாய்.. செல்லம்..'
எட்டு வருஷ ஏக்கம் அந்த நிமிஷம்
எங்களை விட்டுசற்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தது அப்போது.

7 comments:

கே. பி. ஜனா... said...

''விளக்குகளை அணைத்த பின்னும்
ஒரு வெளிச்சம் போல
அவள் பார்வை மின்னிக் கொண்டிருந்தது''
அந்த இடத்தில மின்னறீங்க.

Rekha raghavan said...

//எட்டு வருஷ ஏக்கம் அந்த நிமிஷம்
எங்களை விட்டுசற்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தது அப்போது//

அருமையான வரிகள். மனதில் நிற்கும் கவிதை.

ரேகா ராகவன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபனின் கவிதையில் ஒவ்வொரு
வார்த்தையும் அந்தந்த இடத்தில் அழகாக
பொருந்தி, தம்மைத் தாமே அலங்கரித்துக்
கொள்கின்றன....

கிருபாநந்தினி said...

ரிஷபன்! நீங்க கவிதையெல்லாம்கூட எழுதுவீங்களா! சொல்லவேயில்ல?!

ரிஷபன் said...

அப்படின்னா நீங்க என் பிளாக்ல மத்த மேட்டர இன்னும் பார்க்கல கிருபா நந்தினி நிறைய கவிதை போட்டிருக்கேனே..

வெங்கட் நாகராஜ் said...

//எட்டு வருஷ ஏக்கம் அந்த நிமிஷம்
எங்களை விட்டுசற்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தது அப்போது.//

கவிதை மிகவும் அருமை.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

kavya said...

அருமை!!