November 14, 2009

சிநேகிதன்

எனக்கு இந்த சவாரி
மிகவும் பிடித்திருக்கிறது
பின்னால் ஒரு மனிதனை
நம்பி
ஏற்றிக் கொள்ளும் நாள் வரும் வரை
பெயரில் மிருகமாய்
நிஜத்தில் நேசமாய்
இத்தனை உரிமையுடன்
என்னோடு ஒட்டிக் கொள்ளும்
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..

4 comments:

கே. பி. ஜனா... said...

//பெயரில் மிருகமாய்
நிஜத்தில் நேசமாய்//
ரசித்த வரிகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

superb.thanks for sending. vgk

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வார்த்தைகள் என்ன அருமையாக அதனதன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தம்மை த்தாம் அலங்கரித்துக் கொள்கின்றன !

Ananthasayanam T said...

எனக்கு இந்த சவாரி
மிகவும் பிடித்திருக்கிறது
முன்னால் ஒரு மனிதனை
நம்பி ஏறிக் கொண்ட வரை
பெயரில் மனிதனாய்
நிஜத்தில் நேசமாய் மிருகமாய்
இத்தனை உரிமையுடன்
என்னை கூட்டிக் கொள்ளும்
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..

உயிர் இல்லா சிக்னல்கள் புரியும் இவனுக்கு
உயிரின் உணர்வுகள் புரியாது போகுமா என்ன..

இவனுக்கும் பசி வருகிறது
தூக்கம், ஏன் துக்கமும் தான்..
புதிது புதியதாய் ஏதேதோ செய்கிறான்..
என்னால் இயலாது..
போட்டிகள் புதுமைகள் வசதிகள்
எத்தனையோ அழுத்திய போதும் சேர்கிறான் செய்கிறான்
இவன் சாதனைகள் புரிகிறதோ பிடிக்கிறதோ
இவன் மனிதம் எனக்குப் பிடிக்கிறது..

என்னை கூட்டிக் கொள்ளும் இந்த
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..