March 28, 2010

அஹோபிலம்

படத்தை பாருங்கள் .. அதன் பயங்கரம் அத்தனை தெளிவாக உணர முடியுமா தெரியவில்லை ..

இந்த படத்தில் உள்ளதை விடவும் இன்னமும் இடம் சின்னதாகி விட்டது .. இது முன்பு எப்போதோ எடுத்த படம் ..

இதுதான் உக்ர ஸ்தம்பம்!
பக்கத்தில் தெரிகிற பசுமை அதல பாதாளத்தில் உள்ள மரங்கள்.

'இந்த தூணில் இருப்பானா உன் ஹரி ? ' என்று ஹிரண்யன் கேட்டதும் தூணைப் பிளந்து கொண்டு வருகிற நரசிம்ஹர் .. இந்த இடத்தில்தான் வந்தாராம்.. மூன்று பக்கமும் அதல பாதாளம் .. விழுந்தால் சுலபமாய் மேலே போய் விடலாம்.
அடிவாரத்திலிருந்து தம் கட்டி மேலே ஏறி வந்தால்.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மர்.
இரணியனைக் கிழித்ததும் கை அலம்பிய இடம் சிவப்புக் கலரில் பாறை.. குழிவான இடத்தில் நீர்..
பயங்கரமாய் சறுக்குகிற மலை உச்சி ..
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மலை உச்சியை தொட்டால் உக்ர ஸ்தம்பம்..
அதை அடைய வழுக்குப் பறை மீது தவழ்ந்து .. ஒற்றை அடிப் பாதை போல கால் வைத்து நகர்ந்து .. நாலு பக்கமும் ஜிவ்வென்று அடிக்கிற காற்றில் பேலன்ஸ் செய்து ஏறி கீழே பார்க்காமல் அந்த இரும்புக் கம்பியை சுற்றி வந்தால் ' மகத்தான சாதனை' செய்து விட்ட பீலிங் !
நான் போனபோது அடித்து கொண்டிருந்த மழை.
வழிகாட்டி முதலில் மறுத்து விட்டார். வற்புறுத்தியதும் எட்ட நின்று காட்டுகிறேன் என்றார்.
சுற்றி வந்து கீழிறங்கியதும் ஒருத்தர் சொன்னார் .. யாரோ ஒரு பெண்மணி கீழே விழுந்து சிதறிப் போனதை.. அதுவும் கீழிருக்கும் ஜ்வால நரசிம்மர் பகுதியில்.
அதற்கும் மேலேதான் உக்ர ஸ்தம்பம் !
அடுத்த முறை போவேனா தெரியாது.. பர்வத மலை உச்சியில் அந்த குகைக்குள் 3 நாட்கள் இருந்த அனுபவம் ஒரு விதம் என்றால்.. அகோபிலம் உச்சி உக்ர ஸ்தம்பம் இன்னொரு விதம்..
நமக்கும் அவ்வப்போது த்ரில் வேண்டியிருக்கிறது.. இல்லையா?!

(அஹோபிலம் ஆந்திராவில் உள்ளது. கடப்பா ஸ்டேஷனில் இறங்கி காரில் அல்லது பேருந்தில் பயணிக்கலாம். அப்படித்தான் நான் போனேன். )

15 comments:

பத்மா said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

நல்ல பகிர்வு, நானும் கேள்விப்பட்டிருக்கேன் இந்த இடத்தைப் பற்றி...

நான் வேலை இல்லாது சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் இது போன்ற கதைகளை கேட்டு கேட்டு எக்ஸ்ப்ளோர் செய்வதுண்டு...

”தவ கர கமல வரே நகம்
அத்புத ஸ்ருங்கம்
தலித ஹிரன்யகசிபு தனு
ப்ரிங்கம்
கேசவ த்ருத நரஹரி ரூப ஜெய
ஜெகதீச ஹரே!!

அன்புடன்
ராகவன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படிக்கும் போதே இவ்வளவு த்ரில் என்றால் நேரில் பார்க்கும் போது....

சிநேகிதன் அக்பர் said...

படிக்கும்போதே பயங்கரமாக இருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது பொன்ற பயணக்கட்டுரைகளும் தொடரட்டும்.

Madumitha said...

அனுபவங்களை
வார்த்தைகளாய்
உருமாற்றும்
வித்தை
உங்களுக்கு
அடிபணிகிறது
ரிஷபன்.

Chitra said...

த்ரில்லுக்காக என்றாலும் ......... ரிஸ்கியான விஷயம்தான். பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

இது எங்க இருக்கு? இன்னும் விவரமாக எழுதியிருக்கலாம்.

திவ்யாஹரி said...

படிக்கும் போதே த்ரில் ஆகா இருக்கு ரிஷபன்.. எங்க இருக்கு எப்டி போகணும்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..

Ahamed irshad said...

நேரில் உணர்ந்த அனுபவம் உங்கள் எழுத்தில் வாழ்த்துக்கள் சகா...

பனித்துளி சங்கர் said...

உண்மையாகவே த்ரிலான ,வித்தியாசமான அனுபவம்(பதிவு ) !
இன்னும் நிறைய எழுதுங்கள் ரிஷபன் !!

சுந்தர்ஜி said...

அற்புதமான நான்-ஃபிக்‌ஷன் நடை. அஹோபிலத்தின் விறுவிறுப்பு நள்ளிரவில் துணையற்றுக் காட்டில் நடந்தது போல ஒரு பதைபதைப்புடன் கடந்தது உங்கள் இடுகை.சபாஷ்.

குட்டிப்பையா|Kutipaiya said...

paravathamalai - romba naala poganum nu ninaikra idam dhan -inum jaasthi aguthu indha padhivai paarthathum :)

Thenammai Lakshmanan said...

ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு ரிஷபன்

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடரட்டும் ........