கண்களில் மின்னும்
அன்பைக்
காணும்போதெல்லாம் ...
எதிரில் என்னைப்
பார்த்தால்
உற்சாகக் கூவலுடன்
நீ வரும் போதெல்லாம் ...
செல்லமாய் என் தலையில் தட்டி
'லூசு' என்று சொல்லும் போதெல்லாம் ..
உச்சி முடி கலைத்து
உன் மகிழ்ச்சி பகிரும் போதெல்லாம் ..
என் வாட்டம் பார்த்து
உன் மடி காட்டி
என் துயர் நீக்கும் போதெல்லாம் ...
தோன்றுகிறது பெண்ணே ..
உனக்காகத்தான்
முன் ஜென்மங்களில் எல்லாம்
நான் தவம் இருந்திருப்பேனோ என்று..
17 comments:
வாவ்... அருமையா இருக்கு.
கவிதை நல்லாருக்குங்க ரிஷபன்..
சாதாரண வார்த்தைக் கூட
மனசுக்குப் பிடித்தவர்கள்
சொன்னால் வசீகரமாய்
ஆகிவிடுகிறது.
:))
பிரம்மாதம் ரிஷபன்.
நல்ல கவிதை, ரிஷபன் சார்.
என்ன தவம் செய்தனை ? இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் .நல்லா இருக்கு கவிதை
அருமையான கவிதை...
அப்போது மட்டும் தான் தோன்றுகிறதாக்கும்?
மதுமிதா சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். வெகு சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகள் கூட ‘சொல்பவர்கள்’ சொன்னால் மனதுக்குள் ரம்யமாய் ஒரு பூ பூத்து.....
அப்படியா?
Dear Rishaban,
Good one.
Ragavan
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கணினியில் உட்கார்ந்து (அமெரிக்காவில்) மிக அருமையான கவிதையை வாசித்ததில் எனக்கு மகிழ்ச்சி.
ரேகா ராகவன்.
என்ன ரிஷிபன்,
ஏதாவது பெரிய அப்பிளிகேசன் அம்மணிட்ட போட
பவுண்டேசன் வேலையா? முன்பிறவி தவம், அது இதுன்னுட்டு
`லூசா`!! `நூலா` !!
நல்லா இருக்கு...
ம்ம்ம் லூசுன்னு சொன்னா சந்தோசப் படுற ஆளை நான் இப்போதான் பார்க்கிறேன் ரிஷபன்..:)))
(அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம் என்று ஒரு சினிமா பாடல் உண்டு) அன்புப்....பெண்களின்
வாயா....லே
”லூசென்றாலும்”
சந்தோஷம். அருமை.
மனதில் தூய்மையான அன்பு எப்போதும்
இப்படி தான் பிரதிபலன் எதிர்ப்பாராமல்
தாயாய், தந்தையாய், தோழமையாய்,
ஆசானாய் இப்படி யாதுமாய்....
அன்பை பகிர உறவாய், நட்பாய் இருக்கவேண்டிய அவசியமே இல்லை ஆனால் அன்பைப்பகிர அன்பாய் இருக்கவேண்டியது அவசியம் நச் என்று சொல்லிச்சென்ற அருமையான வரிகள்..
மனதின் நேர்மை அன்பாய் வெளிபடும்... மனதின் அன்பு கண்களில் கனிவாய் தென்படும்.... அந்த அன்பு நிலைக்க இறைவனை வேண்டும்...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா அருமையான கவிதைப்பகிர்வுக்கும் ஹாஹா தலைப்புக்கும்...
Post a Comment