February 04, 2010

காற்று


எல்லா யுகங்களிலும்இருந்திருக்கிறது.

கடவுள்களை (நிஜமோ.. பொய்யோ)

தரிசித்திருக்கிறது.

வன்முறை, மென்முறைதெரியும்.

யுத்தம், சமாதானம்

இவற்றின் சாட்சியாய்நின்றிருக்கிறது.

பிரளயங்களையும் அது அறியும்.

எப்போதும் எல்லோரையும்

தொட்டுச் செல்லும் காற்று

ஏன் சொல்வதில்லை...

சாஸ்வதம் எனும் நினைப்பில்

சண்டையிட்டுக் கொள்ளும்நம்மிடம்...

நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்

தன்னிடம் இருப்பதை.


18 comments:

கே. பி. ஜனா... said...

புயலாப் புறப்பட்டுட்டீங்க! சூபர்!

கே. பி. ஜனா... said...

புயலாப் புறப்பட்டுட்டீங்க! சூபர்!

ஹேமா said...

ரிஷபன் அருமை.காற்றின் வேகத்தைவிட மனிதனின் வேகம் அதிகமாகிவிட்டது.காற்று நிச்சயம் சொல்லியிருக்கும்.நின்று நிலைத்து மனிதன் கேட்டிருக்க மாட்டான் !

க.பாலாசி said...

//ஏன் சொல்வதில்லை...
சாஸ்வதம் எனும் நினைப்பில்
சண்டையிட்டுக் கொள்ளும்நம்மிடம்...
நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்
தன்னிடம் இருப்பதை.//

அதானே...

நல்ல கவிதை...

Chitra said...

நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்

தன்னிடம் இருப்பதை.


....... superb!

Thenammai Lakshmanan said...

//சாஸ்வதம் எனும் நினைப்பில்


சண்டையிட்டுக் கொள்ளும்நம்மிடம்//

Superb Rishaban . verenna solla ..

வசந்தமுல்லை said...

காற்று நம்மை தழுவையில் ஒரு தென்றல்
காற்று நம்மை சுழுவையில் ஒரு சூறாவளி
காற்று கடலுடன் சேருகையில் ஒரு பிரளயம்
காற்று நம் முன்னோருடன் இருக்கையில் ஆத்ம சாந்தி
இதை விளக்கிய உமக்கு,ஒரு சூபெர்ப் பாராட்டு!!!!
மொத்தத்தில் நீங்க ஒரு சூபர் ஸ்டார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வசந்தமுல்லை said...

என்னுடைய கவிதை நட்பின் இலக்கணம் பாருங்களேன் !!!!..............

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முன்னோரின் மூச்சுக் காற்றும் நம்மிடம் இருப்பது... அற்புதமான வரிகள்!! ரிஷபனுக்கு என்ன எழுதவா சொல்லித்
தர வேண்டும்!!

திவ்யாஹரி said...

அருமையாக உள்ளது ரிஷபன்.

மதுரை சரவணன் said...

karru palamaai veesuthu ,athil nam munorkal kaanaampoi irupparkal enru ninaikka vendaam. nam karru inru karum pukaiyaai kasanthu kitappathaal nam munorkal karinthu vittanar. super.

கிச்சான் said...

கோவம் கொண்டு புயலாக
காற்றே
நீ
புயலாக

மாறி
மொழி வாதம்
இன வாதம்
செய்யும்
அரசியல் வாதிகளிடம்
சொல்

""நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்


தன்னிடம் இருப்பதை."

கிச்சான் said...

தோழா
சமுகத்தின் மீது உங்களுக்கு உள்ள கோவத்தை
மென்மையாக
காற்று
மூலம்
சொல்லி இருக்கிறேர்கள்

செந்தில் நாதன் Senthil Nathan said...

//நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்
//

ஆகா!! அற்புதம்...

வெங்கட் நாகராஜ் said...

//சாஸ்வதம் எனும் நினைப்பில்


சண்டையிட்டுக் கொள்ளும்நம்மிடம்...


நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்


தன்னிடம் இருப்பதை.//

அருமையான மனதைத் தொட்ட வரிகள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

மாதவராஜ் said...

அருமை!
காற்றின் பாடலை நம் மக்கள் கேட்பதில்லை!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏன் சொல்வதில்லை...
SONNAAL ORU VElAI NAM MOOCHCHUKKAATRU NINDRUVIDUM ENBATHAALO ! ALLATHU NAM MUNNORKALIN MOOCHCHUKKAATRAI (AATRU MANAL POLA) KATATHTHIVIDUVOM ENDRA PAYATHTHINAALO ! RISHBAN SAARUKKE VELICHCHAM.

vasan said...

காற்று ம‌ட்டுமா க‌ண்டிருக்கிற‌து நேற்றை?
ம‌ண், வின், நீர், தீ என‌ எல்ல‌ பூத‌ங்க‌ளும்
தீட்டிய‌ அழியும் ஓவிய‌ம் தானே உயிரின‌ம்.
அஃகறிணை எல்லாம் இய‌ற்கையோடு இயைந்து வாழ‌.
உய‌ர்திணையான‌ ம‌னித‌ன் ம‌ட்டும்
வ‌ர‌ம் த‌ந்த‌வ‌னையே அழிக்கும் ப‌ர‌காசுர‌னாய்.