February 07, 2010

ஒவ்வொரு வியாழனும் உன் நினைப்பாகவே

தட்சிணாமூர்த்தியை

ஒவ்வொரு வியாழக் கிழமைகளில்பார்க்கும்போது

'உங்க ஆளு' என்று

வம்பிழுத்த நாட்கள்

வந்து போகும் நினைவில்.

'அதென்ன சாமியை உங்காளுன்னுகிட்டு'

'பின்னே எனக்கா

முல்லைப் பூ,

கொத்துக்கடலை மாலை..

சூடம்.. விளக்கு..

என்னைப் பார்த்த நேரத்தை விட

அவரைப் பார்த்த நிமிஷம்தான் அதிகம்.

'சீண்டும் வார்த்தைகளில் உள்ளூர

இழையோடும் தவிப்பு.

சாமிகூட நம்ம குறுக்கேவரக் கூடாதுன்னு

சொல்லும் மனசு!

அதான் உன் கல்யாணப் பேச்சப்ப..

கண்டுக்காம நின்னுச்சோ சாமி?

இப்பவும் ஏதோ ஒரு ஊர்ல

ஒரு தட்சிணாமூர்த்தி உங்கையால

மாலை வாங்கிப் போட்டுக்குது தவறாம(ல்).

அது எங் கழுத்து தவற விட்ட மாலைன்னு

யார் போய்ச் சொல்றது

ஜோடி பிரிச்சு விட்ட

தட்சிணாமூர்த்திகிட்ட..!



12 comments:

Rekha raghavan said...

அருமையோ அருமை. எப்படி சார் எப்படி?

ரேகா ராகவன்

Paleo God said...

அது எங் கழுத்து தவற விட்ட மாலைன்னு யார் போய்ச் சொல்றது ஜோடி பிரிச்சு விட்ட தட்சிணாமூர்த்திகிட்ட..!//


அசத்தல் ரிஷபன்..:))

கிச்சான் said...

தோழர் ரிஷபன் அவர்களே!
உங்களுக்குனு
ஒரு நாலு வரி இடம் கொடுத்தால்கூட .....
அந்த நாலு வரியில் கூட..
ஒரு கதை சொல்லும் ரசனை
வாழ்த்துக்கள்!!

அன்புடன் கிச்சான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

aasaamikaL iraNdum thangkaL kaathalil uRuthiyaaka illaathapothu saami enna seyyum? Innaarukku innaar thaan endru saamikkuth theriyaathaa enna?

செ.சரவணக்குமார் said...

Excellent.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Dhakshinamoorthy enbavar Guru. Ennutaiya (Ezhuththulaga)Guruve, Viyaazhan endkiRa Guruvai, blame seythu kavithai ezhuthiyiruppinum, kavithai nangu rasikkumpatiye uLLathu. VaazhththukkaL Guruve!

வசந்தமுல்லை said...

excellant

மாதவராஜ் said...

ரசித்தேன் நண்பரே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த கவிதையைப் படித்தவுடன் நானும், என் நண்பர்கள் ஸ்ரீனிவாசனுன்,ராஜகோபாலும் கோவிலுக்குப் போன ஞாபகம் வந்து விட்டது. excellant

மதுரை சரவணன் said...

nalla karuththulla varikal . vaalka kavithaiudan. vallththukkal.

Chitra said...

அது எங் கழுத்து தவற விட்ட மாலைன்னு

யார் போய்ச் சொல்றது

ஜோடி பிரிச்சு விட்ட

தட்சிணாமூர்த்திகிட்ட..!


.......சாமி கிட்டே தான் முறையிட முடியும். :-)

Thenammai Lakshmanan said...

இந்த வார்த்தையில் அசரடிச்சுட்டீங்க ரிஷபன்