February 08, 2010

காயங்கள்


காயங்கள் எவரிடம்தான்இல்லை..
அவை உள் காயமா..
வெளிக் காயமா..
ரணமாகிப் போனதா..
வறண்டதா..
தழும்பா..
மறைப்பில் உள்ளதா..
காயமற்ற மனிதர்உலகில் இல்லை..
வலி உணராத மனிதர்
வாழத் தெரியாதவர் ..
வார்த்தைகளினாலா..
ஆயுதங்களாலா..
விபத்தா..
நேரிட்டதா..
'இந்தக் காயம் சொல்லால் இல்லை' என்ற
நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே
வாழ்வின் அடையாளம்..
வாழ்ந்ததின் அடையாளம்!






14 comments:

Thenammai Lakshmanan said...

//'இந்தக் காயம் சொல்லால் இல்லை' //

இதற்கு மேல் வேறென்ன வேண்டும் ரிஷபன்

வசந்தமுல்லை said...

காயங்கள் இல்லையேல் வாழ்க்கை இல்லை !
இதை உணராதவன் மனிதனே இல்லை!
இதை உணர்ந்தவன் பாதி கடவுள்!
அவனே நமது முன்னோடி !!!!!!!!!........

'இந்தக் காயம் சொல்லால் இல்லை' என்ற
நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே
வாழ்வின் அடையாளம்..
வாழ்ந்ததின் அடையாளம்!

மொத்தத்தில் ரியலி சூபர்ப் ரிஷபன்!
வாழ்க்கையை உணர்ந்தவன் மட்டுமே எழுதக்கூடிய கவிதை!!!!!!!!

Rekha raghavan said...

//காயமற்ற மனிதர்உலகில் இல்லை..
வலி உணராத மனிதர்
வாழத் தெரியாதவர்//

உண்மை சார். படித்ததும் நிறைய யோசிக்க வைக்கிறது உங்கள் கவிதைகள்.

ரேகா ராகவன்.

Paleo God said...

ரிஷபன்..

எப்படி இப்பிடி..:))

-------
வடுக்களில்லாத நாவின் ரணங்களை
புரையோடிப்போகாமல் எச்சில்கள்
பத்திரப்படுத்திக்கொன்டே இருக்கிறது
எப்போதும் மனதிற்குள்..
------

எனக்கு இப்படித்தான் வருது:((

அசத்திட்டீங்க போங்க..:)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்கள் பதிவினைப் படித்தவுடன் ‘தீயினால் சுட்ட புண்...’ திருக்குறள் எனோ ஞாபகம் வந்தது!

க.பாலாசி said...

உண்மைதான் நண்பரே... காயங்கள் கற்றுத்தரும் பாடமும் முக்கியம்...

நல்ல கவிதை நண்பரே...

செ.சரவணக்குமார் said...

//'இந்தக் காயம் சொல்லால் இல்லை' என்ற
நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே
வாழ்வின் அடையாளம்..
வாழ்ந்ததின் அடையாளம்! //

அற்புதம் ரிஷபன்.

அண்ணாமலையான் said...

அமைதியா அழுத்தமா இருக்கு

கே. பி. ஜனா... said...

//வலி உணராத மனிதர்
வாழத் தெரியாதவர்... //
காயத்தை ஆற்றும் மாய வரிகள்!

கே. பி. ஜனா... said...

//வலி உணராத மனிதர்
வாழத் தெரியாதவர்... //
காயத்தை ஆற்றும் மாய வரிகள்!

மதுரை சரவணன் said...

theeyinaal suttavadu illamal irukkum
vadu vellaam vali alla arumai . valththukkal.

Chitra said...

'இந்தக் காயம் சொல்லால் இல்லை' என்ற
நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே
வாழ்வின் அடையாளம்..
வாழ்ந்ததின் அடையாளம்!


...........ஒவ்வொரு கவிதையிலும், நீங்கள் மனித நேய முத்திரை பதிப்பது அருமை.

ஹேமா said...

காயங்களை மறைக்கத்தானே உதட்டில் சின்னதாய் பொய்யாய் ஒரு புன்னகை.நல்ல கவிதை ரிஷபன்.

சாந்தி மாரியப்பன் said...

கவிதை அற்புதம்.

//இந்தக் காயம் சொல்லால் இல்லை' என்ற
நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே
வாழ்வின் அடையாளம்..
வாழ்ந்ததின் அடையாளம்!//

அபாரமா இருக்கு.