February 12, 2010

இதுதான் காதல் என்பதா


வானவில் தோன்றும் இரவு.

காகிதப்பூக்களில் கூட நறுமணம்.

விழிகளில் வழியும் நிலவு.

கால்களின் அடியில் பூகம்பம்.

விழித்திருந்து கனவு.

ஆளரவமற்ற சாலையில் அழைப்புக் குரல்.

ஸ்விட்ச் ஆஃப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.

கை நழுவிப் போகும் பொழுது.

எதையும் நினைக்காமலேகனக்கும் மனசு.

ஜாடையில் தெரிந்தாலேஅதிரும் இதயம்.

உதடுகள் முழுக்க இனிய பொய்கள்.

கலவர பூமியில் தென்றல்.

முழங்காலுக்கு அடியில் பஞ்சுப் பொதி.

இமைகளின் வேலை நிறுத்தம்.

பிடித்தது கூடப் பிடிக்காமல்..

பிடிக்காதது எல்லாம் பிடித்து..

தன்னைத் தொலைத்துதன்னில் தொலைந்து..

'தான்' 'தனது' எல்லாம் மறந்து..

எந்த அரசியலாலும் சாதிக்க முடியாதசமத்துவம்!


15 comments:

கும்மாச்சி said...

அருமை, வாழ்த்துகள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்படியெல்லாம் கூட எழுதமுடியுமா என்று வாசகனை ஆச்ச்ர்யபபடவைக்கும் கவிதை இது!!!

Paleo God said...

எப்படி வார்த்தைக்கு வார்த்தையா? எழுத்துக்கு எழுத்தா படிக்கனுமா..:)

இதுதான்யா காதல்..:))

//தன்னைத் தொலைத்துதன்னில் தொலைந்து..
'தான்' 'தனது' எல்லாம் மறந்து..
எந்த அரசியலாலும் சாதிக்க முடியாதசமத்துவம்!
//

ரிஷபன் வழக்கம் போல கொன்னுட்டீங்க..:)

கமலேஷ் said...

வித்தியாசமாக முயற்சி செய்து இருகிறீர்கள்..நன்றாக இருக்கிறது...உங்களின் பழைய பதிவுகளையும் படித்தேன்

அந்த "எட்டு திக்கும்" பக்காவான கதை... நேர்த்தியான நடை
அழகான கதையோட்டம்,,சற்றும் எதிர்பார்க்காத ஒரு திடுக் முடிவு...அந்த ஒரு பதிவு போதும் உங்கள அடையாளம் காட்டுவதற்கு.....பின்னி எடுத்துருந்தீங்க ....வாழ்த்துக்கள்....தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம்....

Thenammai Lakshmanan said...

//ஸ்விட்ச் ஆஃப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.//

இது ரொம்ப சரிதான் ரிஷபன் ஹிஹிஹி அனுபவம்

மதுரை சரவணன் said...

nalla samaththuvam. arumaiyaana varikal . vaalththukkal. kavithai arputham

மாதவராஜ் said...

:-)))))))

ஆர்வா said...

காகிதப்பூக்களில் கூட நறுமணம்//
உண்மைங்க..

கால்களின் அடியில் பூகம்பம்.
அட......

ஆளரவமற்ற சாலையில் அழைப்புக் குரல்//
அனுபவிச்ச வார்த்தை..

ஸ்விட்ச் ஆஃப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.
சான்ஸே இல்லை செமையா இருக்கு

ஜாடையில் தெரிந்தாலேஅதிரும் இதயம்.
கரெக்ட்...

உதடுகள் முழுக்க இனிய பொய்கள்.//
இனிக்கும் பொய்கள்

அருமையா எழுதி இருக்கீங்க.. so sweet

அகல்விளக்கு said...

//எந்த அரசியலாலும் சாதிக்க முடியாதசமத்துவம்!//

ஆழமான கவிதை...

Chitra said...

வானவில் தோன்றும் இரவு.

காகிதப்பூக்களில் கூட நறுமணம்.


..........ரிஷபன் சார், நடத்துங்க. நடத்துங்க. ...........!

Unknown said...

வாழ்த்துக்கள்

அம்ம்மோ காதலர் தின விசேசமா

கே. பி. ஜனா... said...

//ஸ்விட்ச் ஆஃப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.//
மாஸ்டர் லைன்!

கே. பி. ஜனா... said...

//ஸ்விட்ச் ஆஃப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.//
மாஸ்டர் லைன்!

Ananthasayanam T said...

கற்பனை வளம் நன்று, வழக்கம் போல ..

பூ முகம் பொன் உடல் தேன் பேச்சு
கனிவின் பரிசாய் மூச்சுக்குள்
ஆறுதல் தென்பட ஆசையும் அதிகமானது
ஏக்கம் எப்போதும்
பசி மறந்தேன் ருசி மறந்தேன்
பாசத்தில் எல்லாம் அழகாய் தெரியுதடி
ஏனோ எல்லாம் நேராகி விட்டதடி
நானும் சற்று வளைந்ததால்
காரணம் காதல் என்றாலும்
மாறியதுன் தேடலில் தான்

குட்டிப்பையா|Kutipaiya said...

காதல் வழிகிறது ஒவ்வொரு வரிகளிலும்..அருமை ரிஷபன்..