February 23, 2010

முற்றுப் பெறாமலே ..

என்னிடம் ஒரு ஓவியம்

முற்றுப் பெறாமலேஇருக்கிறது..

ஒரு கவிதையின்

கடைசி வரிகள்

இன்னும் எழுதப்படாமல்..

நிறைவேறாத ஆசைகள் சிலவும் ..

வீட்டின் அண்மையில்

என்னுடன் பழகும்

சில குழந்தைகளும் கூட..

என் ஆயுளை நீட்டிக்க

இவை போதுமென்று

வந்தவன் புன்னைகையுடன்

திரும்பிப் போனான்..

காலிப் பாத்திரமாய்

என் இருப்பு புரியாமல்!

22 comments:

Rekha raghavan said...

//வந்தவன் புன்னைகையுடன்
திரும்பிப் போனான்..
காலிப் பாத்திரமாய்//

நல்ல கவிதை.

ரேகா ராகவன்.

Paleo God said...

அடுத்த களமா?? நடத்துங்க..:))

Chitra said...

வலைச்சரத்தில், உங்களை ஜெட்லி அறிமுகப்படுத்தி உள்ளார். வாழ்த்துக்கள்!

ஜீவன்சிவம் said...

'நச்' ன்னு இருக்கு சார்

ஜீவன்சிவம் said...

'நச்' ன்னு இருக்கு சார்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை வெகு எதார்த்தமாய் இருந்தது!

வெள்ளிநிலா said...

வாழ்த்துக்கள் ரிஷபன்

வசந்தமுல்லை said...

fantastic :))

Thenammai Lakshmanan said...

//காலிப் பாத்திரமாய்

என் இருப்பு புரியாமல்//
ரொம்ப அருமை ரிஷபன் வலைச்சரத்தில் உங்களைப்பார்த்தேன் வாழ்த்துக்கள் ரிஷபன்

மதுரை சரவணன் said...

காலிப்பாத்திரமாய் / அருமை . வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

"முற்றுப்பெறாமலே" ............ இருப்பினும் திருப்தியே !

கிச்சான் said...

"வந்தவன் புன்னைகையுடன்
திரும்பிப் போனான்..
காலிப் பாத்திரமாய்"

அருமையான கவிதை வரிகள்



தோழர் ரிஷபன் அவர்களே !

சில சமயம் முற்று பெறாத...விஷயங்கள்
( கவிதை ,குழந்தையின் சிரிப்பு ,எழுத்து)
சிறப்பாக தோன்றும்மில்லையா ?


அன்புடன் கிச்சான்

திவ்யாஹரி said...

"வந்தவன் புன்னைகையுடன்
திரும்பிப் போனான்..
காலிப் பாத்திரமாய்"

கவிதையிலும் கலக்குறீங்க ரிஷபன்..

Anonymous said...

திவ்யாஹரி said...
"வந்தவன் புன்னைகையுடன்
திரும்பிப் போனான்..
காலிப் பாத்திரமாய்"

கவிதையிலும் கலக்குறீங்க ரிஷபன்

ஆமாம் கவிதையும் கலக்கல் தான் ரிஷபன்....

vidivelli said...

நல்ல கவிதை.பிடிச்சிருக்கு.

அம்பிகா said...

\\என் ஆயுளை நீட்டிக்க

இவை போதுமென்று \\
அருமையா இருக்கு.

ஹேமா said...

போதும் என்ற திருப்தியையும் முற்றுப் பெறாமலே !

கண்மணி/kanmani said...

அருமை

கே. பி. ஜனா... said...

//என் ஆயுளை நீட்டிக்க

இவை போதுமென்று//
இது போன்று சில கவிதைகளும்...

கே. பி. ஜனா... said...

//என் ஆயுளை நீட்டிக்க

இவை போதுமென்று//
இது போன்று சில கவிதைகளும்...

ஜூலியட் said...

நான் வரைந்து தரட்டா ணா..

ஜூலியட் said...

நான் வரைந்து தரட்டா ணா..