February 27, 2010

மூன்று கவிதைகள்


1. விமர்சனம்

அது எனக்கு

விவரம் புரியாத வயது.

எதிர்ப்படும் மனிதரை எல்லாம்

நேசிக்கிறேன் என்று

கை நீட்டினேன்.

பற்றிக் குலுக்கிய சிலர்

என் கையைவிமர்சித்தார்கள்.

விரல்கள் குட்டை..

சொரசொரப்பு அதிகம்..

பிடி இறுக்கம்.. என்று.

பற்றியதை உதறினேன்.

நீட்டிய கையில் என் மனசிருந்ததை

எப்படிச் சொல்லுவேன்?


2. கீறல்கள்

நகங்களை யாரும்

நினைவில் வைப்பதில்லை.

நிறைய முறை வெட்டப்பட்டு

மீண்டும் வளர்ந்து..

உதிர்ந்த துணுக்குகள்

மண்ணோடு மக்கி..

எங்கோ சிதறி..

நினைவைப் பின்னோக்கினால்

கீறல்கள் மட்டும்

அழியாச் சித்திரமாய்!

3. உண்மை

மனசுக்கு மனசு

வித்தியாசப்படும் .

வார்த்தைக்கு அகப்படாமல்

ஜாலம் காட்டும்.

வெளிப்படும்போது

சுயமிழந்து போகும்.

'இல்லை'யென்று வேறொருவர்

நிரூபிக்கும்வரை

எதுவுமே உண்மைதான்எனக்கு!



21 comments:

தமிழ் said...

/1. விமர்சனம்

அது எனக்கு

விவரம் புரியாத வயது.

எதிர்ப்படும் மனிதரை எல்லாம்

நேசிக்கிறேன் என்று

கை நீட்டினேன்.

பற்றிக் குலுக்கிய சிலர்

என் கையைவிமர்சித்தார்கள்.

விரல்கள் குட்டை..

சொரசொரப்பு அதிகம்..

பிடி இறுக்கம்.. என்று.

பற்றியதை உதறினேன்.

நீட்டிய கையில் என் மனசிருந்ததை

எப்படிச் சொல்லுவேன்?
/

அருமை

Rekha raghavan said...

முத்தான மூன்று கவிதைகளை படித்து ரசித்த திருப்தியோடு...

ரேகா ராகவன்.

மதுரை சரவணன் said...

விமர்சனம் சூப்பர். மூன்று கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ரிஷபன் மூன்று கவிதைகளும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மூன்று கவிதைகளூம் முத்துக்கள்!! அதிலும் “ நீட்டிய கையில் என் மனசிருந்ததை எப்படிச் சொல்லுவேன்?”
ஒரு அற்புதமான உருவகம்!!

நாளும் நலமே விளையட்டும் said...

உண்மை !

அது உண்மையானது எனில் யார் மனதில் இருந்து வெளிவந்தாலும்
அதுவாகத்தான் இருக்கும் .

நீங்கள், நான் சொல்வது போல் அது மாறுவதில்லை.

என் நடை பாதையில்(ராம்) said...

chanceless... great...

வசந்தமுல்லை said...

fantastic!!!!!!!!!!!!!!!
fine!!!!!!!!!!!!!!!!!!!!
excellent!!!!!!!!!!!!!!!

settaikkaran said...

//'இல்லை'யென்று வேறொருவர்

நிரூபிக்கும்வரை

எதுவுமே உண்மைதான்எனக்கு!//

மூன்று கவிதைகளுமே மூன்று முத்துக்கள் என்றாலும், முத்தாய்ப்பு நச்சுன்னு இருக்குங்க! வாழ்த்துக்கள்!!

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

ராகவன். எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடித்தது.

மற்ற இரண்டும் நல்லாயிருந்தது.

அன்புடன்
ராகவன்

திவ்யாஹரி said...

//நீட்டிய கையில் என் மனசிருந்ததை

எப்படிச் சொல்லுவேன்?//

அழகா இருக்கு கவிதை வரிகள்.. உங்க கதைகள் போலவே..

கண்மணி/kanmani said...

அருமை அருமை
ஒரு கவிதையை வாசிக்கும் போது அதிலுள்ள உணர்வை வாசிப்பவர்களும் புரிந்து கொள்ளக் கூடுமாயின் அதுதான் அருமையான் கவிதைக்கு அழகு.
இவைகள் மிக அழகு

vidivelli said...

மூன்று கவிதைகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...
சுப்பர்......

ஸ்ரீராம். said...

2. கீறல்கள்

நகங்களை யாரும்

நினைவில் வைப்பதில்லை.

நிறைய முறை வெட்டப்பட்டு

மீண்டும் வளர்ந்து..

உதிர்ந்த துணுக்குகள்

மண்ணோடு மக்கி..

எங்கோ சிதறி..

நினைவைப் பின்னோக்கினால்

கீறல்கள் மட்டும்

அழியாச் சித்திரமாய்//

அருமை.

வெட்டிய நகங்கள் கெட்ட எண்ணங்களாய்....
வளரும் நகங்கள் எதிர்கால நம்பிக்கையாய்..

Thenammai Lakshmanan said...

//'இல்லை'யென்று வேறொருவர்

நிரூபிக்கும்வரை

எதுவுமே உண்மைதான்எனக்கு!//

மூன்றிலும் இதுரொம்ப அருமை ரிஷபன்

Anonymous said...

விமர்சனம்.............மனதை பேசியது பேசிய விதம் அருமையோ அருமை...

பத்மா said...

முதல் கவிதை அட்டகாசம் ரிஷபன் ..
கீறல்கள் சரிதான் அவை மட்டுமே நினைவில் இருக்கும் .class

Sathya003 said...

எப்படி விமர்சிப்பது உங்கள் முதல் கவிதைக்குப் பிறகு ?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

எனது விமர்சனத்தில்
கீறல்கள் இல்லை இது
அப்பட்டமான
உண்மை...............

vasan said...

1.//விவரம் புரியாத வயது.

நீட்டிய கையில் என் மனசிருந்ததை//

விவ‌ர‌மான‌ பின் எங்கிருக்கிற‌து? ம‌ன‌சு!!

2. /கீறல்கள்/
அழியாச் சித்திரமாய்!
இருப்ப‌து நீங்க‌ள் கீறிய‌ கீற‌ல்க‌ளா?
உங்க‌ளை கிள‌றிய‌ கீற‌ல்க‌ளா?

3. /உண்மை/
சென்ன‌தா? செல்ல‌ப்போவ‌தா?
இர‌ண்டுமா? இர‌ண்டையுமா?