March 27, 2010

நுனிப்புல்


என்ன ஒரு அவசரம்

உங்களுக்கு

சொல்லி முடிப்பதற்குள்

சொல்லாத அர்த்தங்களை எல்லாம்

யூகித்து

பாராட்டோ ,

வசவோ

தந்து விடுகிறீர்கள் ..

அத்தனை வார்த்தைகளிலும்

ஊடுருவி நிற்பது

சொல்லப்பட்டும்

சொல்லப்படாமலும்

உங்கள் மீதான

பிரியமும் நேசமுமே ..

இருக்கும் ஒரு தேநீரை

பகிர்ந்து நாம்

குடிப்பதற்குள்

விலகிப் போகட்டும்

தொண்டைக்குழியில்

திணறிக் கொண்டிருக்கும்

விமர்சனங்கள்..

இழுத்து விடும் மூச்சில்

புதிதாய் பூக்கட்டும்

இன்று கண்டெடுத்த

நம் ப்ரியம்

12 comments:

பனித்துளி சங்கர் said...

////என்ன ஒரு அவசரம்உங்களுக்கு
சொல்லி முடிப்பதற்குள்
சொல்லாத அர்த்தங்களை எல்லாம்
யூகித்து பாராட்டோ ,வசவோ
தந்து விடுகிறீர்கள் ../////

முழுமையாக படித்து விட்டேன்,,,,
பகிர்வுக்கு நன்றி!!!

"புதிதாய் பூக்கட்டும் இன்று கண்டெடுத்த நம் ப்ரியம்"

க ரா said...

நன்றி. நான் படிக்க நல்ல விடயங்களை தருவதற்காக.

Chitra said...

அருமையான கருத்து, நுனி புல் தலைப்பில் வெளிவந்த கவிதையில் வேரூன்றி நிற்கிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெகு அழுத்தமான கவிதை! நுனிப்புல் மேய்வது போல் இதனைப் படிக்க இயலாது!

பத்மா said...

அதென்ன ரிஷபன், நுகத்தடி ,புல் இந்த தலைப்பில தான் எழுதுவீங்களோ? :)
நான் கவிதை பற்றிய கருத்தை பொறுமையா நாளைக்குத்தான் சொல்லபோறேன் .:)
நல்ல கவிதை

என் நடை பாதையில்(ராம்) said...

இந்த பொருள்தரும் கவிதையை நான் இதுவரை எங்கும் படித்ததில்லை.
நன்று...!

ப்ரியமுடன் ராம்....

Madumitha said...

நீங்கள் பகிர்ந்தளித்த
தேனீரைப் பருகினேன்.
மிகவும் சுவை.

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

எளிமையாய் இருக்கிறது கவிதை... உங்கள் உரைநடையில் இருக்கிற ஒரு அடர்த்தி கவிதைகளில் இல்லையோ என்று தோன்றுகிறது...

ஆனாலும் பிரியம் சொல்கிறது கவிதை.

அன்புடன்
ராகவன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரியத்துடன், தங்களின் நுனிப்புல்லை அடி வரை மேய்ந்தேன், அசைபோட்டேன், ஆனந்தம் அடைந்தேன்.

Santhini said...

ப்ரியம் பூக்கிறது இங்கும் ..

கே. பி. ஜனா... said...

எப்படியோ நேசம் வந்து விழுந்து விடுகிறது...

vasan said...

ப‌கிர்ந்த‌ தேநீரின் சுவை
நாவிலிருந்து இத‌ய‌த்திற்கு
இய‌ல்பாய்.....