April 07, 2010

ஜீவிதம்


எனக்கான சிம்மாசனம்

அப்படியேதான்..

எவராலும் ஆக்கிரமிக்கப்படாமல் ..



அந்த ஒற்றை ரோஜாவும்

அதே செடியில்

பறிக்கப் படாமல் ..



காலதேவனின் தேர்

இன்னமும் விண்ணில்

சுற்றிக் கொண்டு

என் வருகைக்காக..



பிரபஞ்சம் முழுதும்

நிறைய புன்னகைகள்

எனக்காக பரிசுகளாய்..



ஏதோ ஒரு பகுதியில்

பெய்யும் மழை கூட

என்னுள் சிலிர்ப்பாய்..


யாருக்கேனும்


சொல்லப்படாத


ரகசியங்கள்


அடிமனதில் ஆழமாய் புதைந்து ..


ஜீவிதத்தை


அர்த்தப்படுத்திக் கொண்டு..





13 comments:

பத்மா said...

எத்தனை பாசிடிவா நம்பிக்கையா இருக்கு ரிஷபன் !
தேர்ந்தெடுத்த படமும் அருமை

பனித்துளி சங்கர் said...

உங்களின் புகைப்படமும் ,சிந்தனையும் அற்புதம் .
பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன்

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான சிந்தனை - அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ்

Chitra said...

அழகான கவிதையில், அருமையான உணர்வுகள். வாழ்த்துக்கள்!

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்ற பாடல் போல ஒரு கவிதை. எல்லாம் உங்களுக்காக தான் ரிஷபன். ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது யாரும் கிட்ட நெருங்க கூட முடியாமல் உங்களுக்கு. நான் அதை முழுமையாய் வழிமொழிகிறேன். கடைசி பத்தியில் கவிதை புரண்டு படுக்கிறது தனது குறுக்கு வெட்டு தோற்றத்தை போல ஒரு புதிய அழகை, வர்ணங்களை கொண்டு வந்து சேர்க்கிறது ரிஷபன்.

வாழ்த்துக்கள்.
ராகவன்

Anonymous said...

அழகான புரிதல் வாழ்க்கையைப் பற்றி..

யாநிலாவின் தந்தை said...

அழகான கவிதை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களின் எழுத்துலக சாம்ராஜ்யத்தை யாரால் ஆக்கிரமிக்க முடியும்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெகு அற்புதமான கவிதை!

கே. பி. ஜனா... said...

அதான் அந்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கிரீர்களே எப்போதும் கை நிறைய இதுபோன்ற அசத்தல் கவிதைகளுடன்? அதயாவது மற்றவர்கள் ஆக்கிரமிப்பதாவது?

vasan said...

அவ‌ன‌வ‌ன் அரிசியில்
அவ‌ன‌வ‌ன் பெய‌ர்.

என‌க்கான‌ நெருப்போ
இன்றும் சுட‌ராய் அருகே.

`நானொ` க‌விஞ்க‌ன்
பெய‌ரோ ரிஷிப‌ன்.

Thenammai Lakshmanan said...

ஓஹ் ரிஷபன் உங்களுக்கும் தம்பி தங்கைகள் அவார்டு கொடுத்துட்டாங்களா...என்ன

Madumitha said...

உங்கள் கவிதை
தன் காலடித் தடத்தை
அழுத்தமாகவேப் பதித்திருக்கிறது.