April 10, 2010

கச்சேரி


மேடையில் எவருமில்லை..

கீழே நாற்காலிகளில்

நிறைய மனிதர்கள்..

இந்த நிகழ்ச்சிக்கு

வைத்த டிக்கட்

ஆயிரம் ரூபாய்

முகம் சுளிக்காமல்

வாங்கி உள்ளே வந்திருந்தார்கள்..

கச்சேரி துவங்கியதும்

ஒவ்வொரு நிரவலுக்கும்

கைதட்டல்கள் ..

சீட்டு எழுதிக் கொடுத்து

விருப்பப் பாடல்கள்

கேட்டார்கள்...

இரவு முழுவதும்

இடைவிடாத பாட்டு..

விடியலில் சுகமாய் அலுத்து

வீடு திரும்பினார்கள்..

குழந்தைகள்

தூங்கிப் போயிருந்தன..

'இப்படி ஒரு சங்கீதம்

இதுவரை கேட்டதே இல்லை ..'

அடி மனசிலிருந்து

பாராட்டு ஒவ்வொருவரும்..

ஏற்பாடு செய்தவரைக்

கட்டிக் கொண்டார் ஒருவர்..

'இந்த யோசனை எப்படித் தோன்றியது? '

'எக்ஸ் ஐம்பதாயிரம் கேட்டாரு..

அப்பத்தான் தோணிச்சு..'

வெளியே விளம்பரப் பலகை..

'உள்ளே வரலாம்..

உங்கள் விருப்பம் போல

மனசுக்குள் பாடலாம் ..

எத்தனை மணி நேரம்

வேண்டுமானாலும்..'


மேடையை சுத்தம் செய்ய

எவ்வித நிர்ப்பந்தமும்

இந்த முறை ஏற்படவில்லை

பராமரிப்பு தொழிலாளிக்கு!17 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

// 'இந்த யோசனை எப்படித் தோன்றியது? '


'எக்ஸ் ஐம்பதாயிரம் கேட்டாரு..


அப்பத்தான் தோணிச்சு..'//

புதிய கோணத்தில் நல்லதொரு சிந்தனை. அருமையான கவிதை.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

VAI. GOPALAKRISHNAN said...

நல்ல கற்பனை. வித்யாசமான கச்சேரி. பாடகர்களே தலைக்கு ஆயிரம் கொடுத்துவிட்டு அனைவரும் கூடி, மனதுக்குள் பாடி, கைத்தட்டி, தாங்களே விருப்பப்பாடல்கள் சீட்டு எழுதி தங்களுக்கே கொடுத்துக்கொண்டு, அதையும் பாடி, அடிமனதிலிருந்து பாராட்டிக்கொண்டு, நல்ல ஒரு மனதிற்குத்திருப்தியான நிகழ்ச்சி தான். எது எப்படியோ ஏற்பாடு செய்தவர் அந்த எக்ஸ் or ஒய்யை திருப்தி படுத்த முடிந்தால் சரிதான். ஆனால் மேடையை சுத்தம் செய்யும் வேலை வாய்ப்பை இழந்த ஏழைத் தொழிலாளி பாடு தான், நினைத்தாலே கஷ்டமாக உள்ளது.

Chitra said...

'உள்ளே வரலாம்..

உங்கள் விருப்பம் போல

மனசுக்குள் பாடலாம் ..

எத்தனை மணி நேரம்

வேண்டுமானாலும்..'


மேடையை சுத்தம் செய்ய

எவ்வித நிர்ப்பந்தமும்

இந்த முறை ஏற்படவில்லை

பராமரிப்பு தொழிலாளிக்கு!........ இந்த கவிதை கரு, உங்கள் உள்ளத்தில் வந்த காரணத்துக்காகவே, உங்களை பாராட்ட வேண்டும்.
கவிதை, அருமை. ரொம்ப நல்லா இருக்குங்க.

அமைதிச்சாரல் said...

புது விதமான கச்சேரி, நல்லாருக்கு.

வானம்பாடிகள் said...

:)). ஆஹா! நல்லாருக்கே.

padma said...

மனதுக்குள் பாடும் பாட்டு ஆயினும் அதை மேடையில் பாட விழையும் மனது .
மிக வித்தியாசமான கரு. அதற்கே நூறு மதிப்பெண்கள் .
கைகொடுங்க .

என் நடை பாதையில்(ராம்) said...

அப்பாடா....! எனக்கு புரிய ரொம்ப நேரம் ஆச்சு சாரே....!

K.B.JANARTHANAN said...

கச்சேரி களை கட்டி விட்டது. கருத்து மனதை எட்டி விட்டது (கட்டி போட்டு விட்டது?)

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

வெங்கட் நாகராஜ் said...

கச்சேரி ப்ரமாதம் போங்க! நல்ல சிந்தனையிலிருந்து பிறந்த இந்த கவிதை கானம் அற்புதம்.

வெங்கட் நாகராஜ்

ஹுஸைனம்மா said...

//உங்கள் விருப்பம் போல
மனசுக்குள் பாடலாம் ..//

அப்ப யாருமே வாய்விட்டுப் பாடலையா?

/கச்சேரி துவங்கியதும்
ஒவ்வொரு நிரவலுக்கும்
கைதட்டல்கள் ..
சீட்டு எழுதிக் கொடுத்து
விருப்பப் பாடல்கள்
கேட்டார்கள்...
இரவு முழுவதும்
இடைவிடாத பாட்டு.. //

அப்ப இது எப்படி?

(தவறா நினைக்காதீங்க)

இராமசாமி கண்ணண் said...

நல்ல கவிதை ரிஷபன்.

thenammailakshmanan said...

ரிஷபன் செம கிண்டலா இருக்கு ..
என்னதிது ஆட்டோ வருதாமா ரிஷபன் விட்டுக்கு

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஒரு நல்ல கவிதையை தந்ததிற்கு நன்றி!

Madumitha said...

உங்க கச்சேரி
ரகளையா இருக்கு.

ஹேமா said...

விடுபட்ட கவிதைகள் வாசித்தேன்.
அத்தனையும் அருமை ரிஷபன்.

நிறைவான இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in