July 07, 2010

ஜெய் பத்ரி - வியாசர் குகை

சென்ற பதிவில் வியாசர் குகை பற்றி சொல்லி இருந்தேன்.

அவர் கணபதிக்கு மகாபாரதம் சொல்லி வரும்போது இருவருமே நிபந்தனைகள் போட்டுக் கொண்டனர் .

"நான் எழுதற ஸ்பீட்ல நீங்க சொல்லணும்" என்று கணபதி.

"புரிஞ்சுக்காம எழுதக் கூடாது " - இது வியாசர்.

அப்பத்தான் சரஸ்வதி நதியின் இரைச்சல்.

'அம்மா .. தாயே .. ரூட் மாத்திக்க " என்று வியாசர் வேண்டுகோள் வைக்க சரஸ்வதி பிரவகித்து வந்தவள் , சட்டென்று மறைந்து பிறகு மலையின் வேறு பக்கம் வெளிப்பட்டு அதே பேரிரைச்சலுடன் ஓடுகிறாள்.

கண்கொள்ளா காட்சி !

இதோ வியாசர் குகை நுழைவு வாசல். எத்தனை வருடங்களுக்கு முந்தைய குகை என்று போட்டிருக்கிறது பாருங்கள். ( 5111 வருடங்கள் பழமையான குகை)

சரஸ்வதி மீண்டும் வெளிப்பட்டு ஓடும்போது அதே இரைச்சல்!

வீடியோ பதிவு உங்களுக்காக ...

ஒரு சின்ன கோவிலும் சரஸ்வதிக்காக அங்கே இருக்கிறது.. அதையும் வீடியோவில் பார்க்கலாம்.

8 comments:

Thenammai Lakshmanan said...

பகிர்வுக்கு நன்றி ரிஷபன்..:))

Chitra said...

அந்த வீடியோவில் காட்சிகள் நல்லா இருக்குங்க..... பகிர்வுக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காதில் இன்னமும் அந்த சரஸ்வதி நதியின் ‘அலை ஓசை’ ஒலித்துக் கொண்டே இருக்கிறது!!!

ஹேமா said...

காட்சி அழகாயிருக்கு அருவியின் இரைச்சலோடு.நன்றி ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சார். சரஸ்வதியின் ஒலி காதில் ஒலித்தபடி இருக்கிறது.

பனித்துளி சங்கர் said...

அருமை நண்பரே . காட்சிகள் உள்ளத்தில் மகிழ்ச்சியின் எல்லையை தேட வைக்கிறது அருமை . பகிர்வுக்கு நன்றி !

அண்ணாமலை..!! said...

தங்களுடைய பகிர்விற்கு
நன்றிகள் ரிஷபன்!
அழகான இயற்கை அமைப்பு அது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நதியின் அலை ஓசை அருமை. நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. நல்லதொரு பதிவும் பகிர்வும். நன்றி.