July 10, 2010

கோலம்



வீதி நிறைக்கிறது
படி பத்து ரூபா என்று
வாங்கிய கோலப்பொடி.
சுற்றி சுற்றி வந்து
புள்ளிக் கணக்கு தவறாமல்
போட்ட கோலம்.
முதல் நாள் இதற்காய் கண் விழித்த
பயிற்சி முகாம்
வாகனங்களை விரட்ட
பொடியர்கள் படை.
'மிதிச்சிராம போங்க '
அரை மணியா.. முக்காலா ..
நேரம் போனது தெரியவில்லை..
போட்டு முடித்து
பெருமிதப் பார்வை..
அன்றிரவு தூங்க போகுமுன்
கால்கள் அழித்து போனது போக
மிச்சம் இருந்த
வளைவு நெளிவுகள்
தந்த சுகம்
காலையில் போட்டபோது கூட
இல்லை
நினைத்துப் பார்க்கும் புத்திக்கு!




15 comments:

soundr said...

..ஹீம், உங்கள் ஊரிலேனும் இன்னும் இருக்கின்றனவா, கோலங்கள் வரவேற்கும் தெருக்கள்.



http://vaarththai.wordpress.com

மாதவராஜ் said...

அழகு!
வாசலகள் ஒவ்வொரு காலையும்,அந்த வீட்டின் கனவுகளை எல்லோருக்கும் சொல்கின்றன.

மீதமிருக்கும்,அல்லது கலைந்த கனவுகளும் அழுகுதான்!

ரசித்தேன் நண்பரே!

அம்பிகா said...

கோலம் போடுபவர்களுக்கு தான் இந்த ரசனைகள் இருக்கும் என நினைத்தேன். நானும் கலைந்த கோடுகளை ரசிக்கும் ரகம் தான்.

ஹேமா said...

எனக்கும் நிழலாய் ஒரு ஞாபகம் வருகிறது.எங்கள் வீடும் முற்றமும் நித்தமும் அழித்து அழித்து வரையப்படும் கோலமும் அம்மாவும் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதிகாலையில், கோலம் போடுபவர்களுக்கும், அதை என்னைப்போல ரஸித்துப் பார்த்துச் செல்வோருக்கும் புத்துணர்ச்சியூட்டுவது போல இருந்தது தங்களின் கவிதை. பாராட்டுக்கள்.

மதுரை சரவணன் said...

கோலம் வண்ணமாய் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமை ரிஷபன்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ரிஷபன்.

சாந்தி மாரியப்பன் said...

அழகா இருக்கு.. கலைந்த கோடுகளும் கவிதையும்..

Madumitha said...

எந்தப் பாதங்ககளிலும் மிதிபடாமல்
அழியாக் கோலமென ஜ்வலிக்கிறது
உங்கள் கவிதை ரிஷபன்.

vasu balaji said...

கோலம! பார்க்கும்போதே மனசில் பூக்கும். நல்ல கோலம் கலைந்திருந்தால் மனம் வாடிப்போகும். ஆனாலும் அதிலொரு அழகு, சமையல் கட்டு அம்மா புறங்கையில் நெற்றி வேர்வை துடைக்கையில் தீற்றிய குங்குமம் போல்:)

ப்ரியமுடன் வசந்த் said...

புள்ளி வைத்த கோலம்

எழுத்துக்கள் வைத்த கவிதை..

Unknown said...

கோலம் அழகா இருக்கு..

ஷைலஜா said...

இப்போவும் நான் அழகழகான கோலங்களைப்போட்டுட்டுதான் இருக்கேன் அதற்கு சில மணி நேரங்கள்தான் வாழ்வு என்றாலும் வானவில் போல அது மகத்தனாது என்கிற எண்ணம் தான் காரணம்!
ரிஷபனின் கவிதைக்கோலமும் அழகுதான்!

கே. பி. ஜனா... said...

கோலம் நன்றாக இருக்கிறது!