July 11, 2010

அப்பா

எனக்கு மெயிலில் வந்த வீடியோ
இதற்கு முன் வேறு பதிவுகளில் யாராவது போட்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் மிகவும் ரசித்தேன். அதனால் உங்களுடன் பகிரவும் ஆசைப் பட்டேன் .

என்ன எளிமையாய் ஒரு சிறுகதை போல அழகாய்படம் பிடித்திருக்கிறார்கள்..

யார் அந்த மகானுபாவன் என்று தெரியவில்லை..

அவருக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும் !

19 comments:

அம்பிகா said...

எத்தனை சொல்கிறது இந்த இந்த சிறுபடம். மிக அருமை
இதை படம்பிடித்தவர் நிச்சயம் பாராட்டுக்குறியவரே!

Rekha raghavan said...

அப்பா குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் பாசத்தை இதை விட அழகாக விளக்கிட முடியாது. அருமை. பகிர்வுக்கு நன்றி.

ரேகா ராகவன்.
(now from Chicago)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்வியலை படம்பிடித்திருக்கிறார்கள் முடியும் நிமிடம் சிலிர்த்துவிட்டது...

Unknown said...

இக்குறும்படத்தைப் பற்றி எஸ்.ரா மிக விரிவாக விகடனில் எழுதியிருந்தார். ஆனால் இன்று தான் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி .

க ரா said...

அருமை ரிஷபன். இதை ஏற்கனவே கதையாக ப்டித்திருந்த போதும் , கானொளியாக பார்க்கும் போது மனதை நெகிழச்செய்து விட்டது. பெரும்பான்மையான இந்த காலத்து இளைஞர்கள்(என்னையும் சேர்த்து) வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு விசயத்தை ஒரு தடவைக்கு மேலே சொன்னால் எரிச்சல் அடைக்கிறோம். இதை பார்த்து முடிக்கும் போது என் தவறுகளை உணர்ந்து நானே வெட்கப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

பெற்றவர்களின் பாசம்.கண்கலங்க வைத்துவிட்டீர்கள் ரிஷபன்.படம் முடிந்தும் அழுகிறேன்.இப்பவே அப்பாவுக்குப் போன் பண்றேன்.நன்றியும் வாழ்த்தும்.

Admin said...

நல்ல பகிர்வு. அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

vasu balaji said...

இந்தக் குருவி காணாமலே போயாச்சு. இந்த எரிச்சல் மட்டும் அதிகமாயிட்டே போகுது. அருமையான படம். பகிர்ந்தமைக்கு நன்றி.

Easwaran said...

எத்தனை முறை எரிச்சல் அடைத்திருக்கிறேன். இந்தப் படத்தை பார்த்தபின் குற்ற உணர்வு குறுகுறுக்கின்றது.

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க அக்பர்.. சப்-டைட்டில வச்சிதான் முழுசா உணர்ந்து பார்த்தேன்... கலங்கத்தான் செய்தேன்...

கிச்சான் said...

ஹாய் ரிசபன்
இந்த
வீடியோ முடிவில் வருகிற கிளைமாக்ஸ்
மியூசிக் .................சொல்லமுடியல
ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி யா இருக்கு

அன்புடன் கிச்சான்

கே. பி. ஜனா... said...

அருமை! ஏற்கனவே கதையாக ப்டித்திருந்த போதும், பார்க்கும் போது இன்னும் மனதைக் கவர்ந்தது.

Anisha Yunus said...

கஷ்டமாத்தான் இருக்கு. இது போல பல சமயங்களில் நடந்துள்ளது. அப்புறம் வருத்தப்படூம் பிரயோஜனமில்லையோன்னு தோணுது... நமக்கு அந்த அளவு பொறுமை பெற்றவர்களிடத்தும் இல்லை, பெற்ற பிள்ளைகளிடத்தும் இல்லை...ப்ச்ச்..

Madumitha said...

மிகப் பெரிய பாடத்தை
சொல்லியிருக்கிறது
இந்தப் படம்.
உங்களுக்கும்
அந்த மகானுபாவருக்கும் மிக்க
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இப்படம் ஒரு மிகப்பெரிய பாடம் எல்லா குழந்தைகளுக்கும்/ அப்பாக்களுக்கும். இப்போதெல்லாம் நிறைய அப்பாக்களுக்கும் தன் சிறு குழந்தைக்கு இப்படி சொல்லிக்கொடுக்கும் பொறுமையில்லை என்பதும் உண்மை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் கண்களில் பட்ட ஒரு நல்ல விஷயத்தை எங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதற்கு, உங்கள் அபிமான ரசிகர்கள் சார்பில் நன்றி.

மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பது போல, இந்தப்படம் மனசாட்சியுள்ள அனைவரையும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

நாடோடிப் பையன் said...

Very moving depiction of parental love. Thanks for sharing.
I shared it with a number of friends.

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி. படம் பிடித்தவருக்கு பாராட்டுகள் ரிஷபன்.

veligalukkuappaal said...

ரிஷபன், வாழ்த்துக்கள். இதற்கு முன்பே இதனை நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் படமாகப் பார்க்கும்போது இன்னும்கூட ஆழ்ந்துபோகின்றோம். நல்ல விஷயத்தை அறிமுகம் செய்யும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், இக்பால்