ஸ்ரீ சந்திக்கு காசு..
கோகுலாஷ்டமி சமயத்தில் இப்படி பல குரல்கள் வாசலில் கேட்கும்.
சின்ன வயசில் அதன்அர்த்தம் புரியவில்லை.
வீட்டில் பெரியவர்களும் அதையே திருப்பி சொல்லி காசு கொடுத்து அனுப்புவார்கள்.
கண்ணன் பிறந்த நாளே 'ஸ்ரீ ஜெயந்தி '
ஸ்ரீ ஜெயந்திக்கு காசு தான் 'ஸ்ரீ சந்திக்கு காசு' ஆகிவிட்டது..
இன்றும் ஸ்ரீரங்கம் தெருக்களில் ஏதோ ஒரு டப்பாவை அடித்து கொண்டு தெருவில் போவார்கள். அவரவர் கற்பனை.. சக்திக்கு ஏற்ப அட்டை டப்பாவில் கிருஷ்ணர் படம்.. அல்லது நடைவண்டியில் கிருஷ்ணர் பொம்மை.. சிலர் பல்லக்கு போல சுமந்து ..
உற்சாகம்.. குதூகலம் .. மகிழ்ச்சி ..
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இத்தனை வருடங்கள் ஆனாலும் அதன் தாக்கம் கொஞ்சங்கூட குறையவில்லை. தொலைக் காட்சி பாதிப்பிலிருந்து விடுபட்டு தெருவில் மனிதர்கள்.. அவர்களின் பரவசம்.. கலை.. ஆட்டம் பாட்டம்..
தமிழ்ப் பாசுரங்கள்..
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய். (பெரியாழ்வார்)
என்ன ஒரு அழகான தமிழ்!
10 comments:
மிக மிக அருமை.. ரிஷபன்.. கிருஷ்ணரை தரிசித்தது போல் இருக்கு.. இந்தப் பரவசம்..:)
சரியான சமயத்தில் சுவையான சேதி...
நல்ல தகவல் . தொலைகாட்சி மறந்து... அருமை. வாழ்த்துக்கள்
தொலைக் காட்சி பாதிப்பிலிருந்து விடுபட்டு தெருவில் மனிதர்கள்.. அவர்களின் பரவசம்.. கலை.. ஆட்டம் பாட்டம்..
தமிழ்ப் பாசுரங்கள்..
.....தொலைக்காட்சி பார்ப்பதை மிகவும் குறைத்தாலே, வாழ்க்கையின் எத்தனையோ அழகு தருணங்களை ரசிக்கலாம்.
தொலைக்காட்சியில் மூழ்கி பலவிஷயங்கள் தொலைத்துக் கொண்டு இருக்கும் இந்நாளில் தேவையான ஒரு பதிவு. நல்ல விஷயம்.
வெங்கட்.
ஸ்ரீ சந்திக்கு காசு....மருவிய விஷயம் நல்ல தகவல்..
//இத்தனை வருடங்கள் ஆனாலும் அதன் தாக்கம் கொஞ்சங்கூட குறையவில்லை//
நம்மிடம் கொண்டாட்டத்தை விரும்பும் இறைவனுக்கு ,கொண்டாட்டமாக நன்றி சொல்வதனாலேயே கிருஷ்ணம் தொடர்கிறது..
மஞ்சனமாட அழைக்கும் அழகு அற்புதம்.
நன்றி..
நல்ல பதிவு சார். ஸ்ரீரங்கம் என்றாலே உற்சவங்களும், நாலு இழை கோலங்களும் நினைவுக்கு வருபவை. கோகுலாஷ்டமிக்கு ஏற்ற பதிவு.
”அருமையான, காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு”
சிறியதொரு பதிவினிலே
பெரியதொரு ஆழ்வாரின்
அரியதொரு பாசுரத்தை
அறியச் செயத நீர்
வாழ்க ! வளர்க !!
[ மன்னிக்கவும் - வெண்பாப் புகழ் நண்பர் ஏற்படுத்திய ஒரு தாக்கம் -
எப்படியிருந்த நான் ....... ? ]
நம் மரபும் கலாச்சாரமும் வரும் சந்ததிகள் அறியத் தரும் உத்தியாய் இப் பதிவு அழகு... பாசுரத்திலில்லாத கொஞ்சு தமிழ் அழகு வேறெதில்?
Post a Comment