November 14, 2010

சூரியன்



எனக்கான சூரியனை

என் கவிதைகள் ஒன்றில்

ஒளித்து வைத்தேன் ...

ஒன்பதாவது திசையில்

உதிக்கிறது

இப்போது !



18 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சூரியனையே ஒளித்து வைத்த சுடர்மிகு கவிதைக்கு தனியே ஒரு திசை வேண்டாமோ?உதித்தது ரிஷபனுக்காய் ஒன்பதாவது திசை.

நிலாமகள் said...

எங்களுக்கானதாகவுமிருக்கிறது அந்த ஒன்பதாவது திசை என்பது அதன் கூடுதல் சிறப்பு!

R. Gopi said...

நீங்க கலக்குங்க

Unknown said...

அருமையா இருக்குங்க.

Rekha raghavan said...

மேலே அருமையா சொல்லி இருக்காங்க கேட்டுக்குங்க.

ரேகா ராகவன்.

பத்மநாபன் said...

சூரியனால் திசைக்கு பெருமை...

ஒன்பதாம் திசையில் உதித்த சூரியனால்..கதிர்கள் பட்ட கவியும் ஜொலிக்கிறது

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

உதிக்கும் போது சூரியன் கீழ்த்திசையில் உதிக்கும். இது இயற்கையின் நியதி. ஆனால் ,உங்களால் கவிதையில் ஒளித்து வைக்கப்பட்ட சூரியன் ஆகாசமாகிய ஒன்பதாவது திசையில் உதிப்பதில் அதிசயம் என்ன?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...அப்ப ஆகாயம் தான் ஒன்பதாவது திசையா?

கவிதை அருமை!!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

ADHI VENKAT said...

அருமையாக இருக்கு.

Anonymous said...

சுடும் சூரியனையே சுட்டாச்சா?

வெங்கட் நாகராஜ் said...

சூரியன் உதித்த ஒன்பதாவது திசையினை, பத்தாவது திசையிலிருந்து பார்த்தீர்களா ரிஷபன் சார், நன்றாக இருந்தது உங்கள் கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒளித்து வைத்த சூரியன்.
ஒன்பதாவது திசை//

கவிதக்குப் பொய் அழகு.

தங்களின் வித்யாசமான கற்பனையும் இங்கு அழகு தான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’கவிதைக்குப்பொய் அழகு’
என்று அடிக்கும் போது
தவறுதலாக ’கவிதக்கு’
என்று விழுந்து விட்டது.

Madumitha said...

உங்கள் கவிதைகள்
ஒளிரும் ரகசியம்
புரிந்தது ரிஷபன்.

Philosophy Prabhakaran said...

// அப்ப ஆகாயம் தான் ஒன்பதாவது திசையா? //
நல்லா சொன்னீங்க... அதே தான்...

Anonymous said...

//ஒன்பதாவது திசை //
ரொம்ப வித்தியாசமா இருக்கு ரிஷபன்.. :)

ஹேமா said...

உங்களுக்குன்னு எடுத்துக்கிட்டதும் இல்லாம அதுக்கு ஒரு திசையும் குடுத்துட்டீங்களா ரிஷபன் !

vasan said...

எட்டுத்திக்கும் சுட்ட‌‌ சூரிய‌னை
க‌ட்டிச் சுருட்டி,ஒரு க‌விதையில் அடைத்து,
உரு‌ட்டி விட்டீர்க‌ள் புது திசை காண.
ஒளிர்கிற‌து ஒன்பதாம் திசையெங்கும் க‌விதை.