November 17, 2010

கூடும் சில பறவைகளும்




கலைத்துப் போட்டிருந்த

கூடு பார்த்தும்

தளராமல் ,

இன்னொரு கிளையில்

கட்டத் துவங்கியது

அதற்கான கூட்டை ..

என் மனப் பறவை!



வனத்தினூடே

எவ்வித ஒலியுமற்று

நகர்ந்தன கால்கள்

சற்றே தொய்வாய்..

எங்கோ ஒரு பறவையின்

கீச்சொலிக்கு

பதில் தந்தது

இன்னொரு பறவை..

கானகம் முழுவதும்

பல பறவைகளின்

சம்பாஷணைகள்..

வாழ்வின் தூரம்

சுலபமாய்க் கடந்தன

என் கால்கள் ..


23 comments:

Rekha raghavan said...

பறவைகளைப் பற்றிய இரண்டு கவிதைகளையும் படித்ததும் வானத்தில் பறப்பது போலிருந்தது. அருமை.

ரேகா ராகவன்

வெங்கட் நாகராஜ் said...

பறவைகள் பலவிதம். உங்கள் இரு கவிதைகளுமே நன்று. நெய்வேலியில் இருந்தபோது, தினமும் ”அக்காவ்” குருவிகளின் ஓசையிலே துயிலெழுவது ஒரு சுகமான அனுபவம்.

மாதேவி said...

வானத்தில் செட்டை அடித்துப்பறக்கும் "மனப்பறவை" அழகு.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கானகமும் பறவைகளின் கீச்சொலியும் சிறகடிப்பும் கவிதையெங்கும் ஒலிக்கிறது.படித்து முடிக்கையில் இனம்புரியாத ஒரு அமைதி அசைவதை உணர்கிறேன் ரிஷபன்.

VELU.G said...

இரண்டு கவிதைகளுமே மிக அருமை நண்பரே


//
வாழ்வின் தூரம் சுலபமாய்க் கடந்தன என் கால்கள் ..
//

சுலபமாய் கடக்க முடிகிறதா நண்பரே

பத்மா said...

பறவையின் இன்னிசை காலத்தை நகர்த்தும் ரகசியம் கற்றதோடு இல்லாமல், பகிர்வும் அழகு

கே. பி. ஜனா... said...

இரண்டு கவிதைகளுமே பிரமாதம். முதலாவது மிக.

சாந்தி மாரியப்பன் said...

முதலாவது ரொம்ப பிடிச்சிருக்கு..

RVS said...

படிக்கும் போதே மனது சிறகடித்துப் பறக்கிறது.. நன்றி ;-)

ராமலக்ஷ்மி said...

//வாழ்வின் தூரம்

சுலபமாய்க் கடந்தன

என் கால்கள் ..//

வெகு அருமை.

ADHI VENKAT said...

இரண்டு கவிதைகளுமே அருமை.

vasu balaji said...

rendum prammatham:)

Anonymous said...

சூப்பர் :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதைகளைப்படித்ததும், என் மனமும் பறவைகள் போல சிறகடித்து சுதந்திரமாய்ப் பறக்க ஆரம்பித்தது.

க ரா said...

ரெண்டுமே மனச கிறங்கடிக்குது ரிஷபன் :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வானத்தில் வெகு சுகமாய் பறப்பது போன்ற அனுபவம் என்னுள்!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

ஹேமா said...

ஐந்தறிவு ஜென்மங்களோடு இருக்கும்போது அதன் உலகமே தனிதான்.
கவிதையாக்கினது அற்புதம் ரிஷபன் !

Philosophy Prabhakaran said...

ஜோடிப்பறவைகள் சூப்பர்...

நிலாமகள் said...

பறவைச் சிறகாய் கனமற்றுப் போகிறேன் உங்கள் கவிதைகளால்...

vasan said...

/இன்னொரு கிளையில்
கட்டத் துவங்கியது
அதற்கான கூட்டை ..
என் மனப் பறவை!/
ச‌ற்றும் ம‌னம் த‌ள‌ராத‌, ரிஷப‌ன்..மீண்டும்...

/பறவைகளின்சம்பாஷணைகள்..வாழ்வின் தூரம் சுலபமாய்க் கடந்தன என் கால்கள் ../
ப‌ற‌வையின் கான‌ங்க‌ளால், க‌ட‌ந்தீர்க‌ள் கான‌க‌த்தின் ப‌ல காதாங்க‌ளைப் பாத‌ங்க‌ளால்.

ஹ ர ணி said...

ரிஷபன்..

உண்மை படைப்பாளி என்றைக்கு நம்பிக்கை இழந்திருக்கிறான். சோர்ந்து போயிருக்கிறான். உங்கள் மனப்பறவை நம்முடைய கூடு...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

தளரா மனம் கொண்ட பறவை குறித்த கவிதைகள் அருமைங்க..!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

என்றைக்குமே இயற்கையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. சமீபத்தில் பறவையைப் பற்றிப் படித்த ஒரு தகவல். நம் வேடந்தாங்கலுக்கு வரும் சில பறவைகள் at one stretch இல் பெருங்கடலின் சில ஆயிரம் கி.மீ.களைக் கடந்து வருகின்றனவாம் ! அந்த சின்ன இறகுகளுக்கு வலிக்காதோ.....

உங்கள் இரு கவிதைகளும் பறவைகளின் மீதான என் அன்பை அதிகப் படுத்துகின்றன.