ஏழுகடல் ஏழு மலைகள்
தாண்டி இருக்கும்
உலகம் பற்றி
சின்ன வயதில்
கதைகளும் பிரமிப்பும்..
ஊர் விட்டு ஊர் வந்து
வேலை பார்க்கும் போது
மறந்து போகின்றன
சாகசங்கள்..
வார இறுதி நாட்களில்
கிடைத்த இருக்கையில்
பயணமும்
அல்லது தொங்கிக் கொண்டோ..
கதவைத் தட்டி
(அம்மாதான் வந்து கதவைத்
திறக்கணும்.. கடவுளே )
'சாப்டியா '
இந்த ஒரு வார்த்தைக்குத்தான்
நானூறு மைல் பயணம்.. !
25 comments:
ஒரு வார்த்தை..
அருமை.
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அமர்க்களம்
ஒரு வார்த்தையில் அசத்திட்டீங்க
Thats sweet!!!
ஒரு வார்த்த கேக்க 400மைல் தாண்டிவந்தேன்னு பாடத் தோணுது ரிஷபன்.நல்ல ஜாலி மூட்ல இதைப் படிச்ச எஃபெக்ட்.
வீடு திரும்புதல் ஒரு சுகானுபவம்!
அபாரம்! அம்மாவின் ஒரு வார்த்தை கேட்டால் என்ன ஒரு ஆனந்தம்
//'சாப்டியா '
இந்த ஒரு வார்த்தைக்குத்தான்
நானூறு மைல் பயணம்.. !//
ஹும்ம்ம். இந்த ஒரு வார்த்தைக்கு ஏங்கற ஏக்கம் கொடியது:(. அருமை ரிஷபன்.
அம்மா தான் கேட்பாள் சாப்பிட்டியா என்று..
ஆத்துக்காரி கேட்பாள் சாப்புட்டூட்டு வந்துட்டேளா?
//'சாப்டியா '
இந்த ஒரு வார்த்தைக்குத்தான்
நானூறு மைல் பயணம்.. !//
ஆஹா! அருமை!
"சாப்டியா"வா? "சாப்பிட வரியா"வா?....
ஒரே வார்த்தையில் சொன்னால்: அருமை!
அருமை ரிஷபன். ஆனால் இதே சிரமங்களைப் பட்டு வீடு திரும்பும் பெண்ணை
சாப்ட்டயா என்று கேட்க பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை. எவ்வளவு களைப்போடு வீடு திரும்பினாலும் அவள் அடுப்பு மூட்டினால்தான் அவள் களைப்பும் பசியும் தீரும்
ரிஷபன்..
400 மைல்கள் மட்டுமல்ல....தொலைவில் இருத்தலும் வாழ்தலாய் இயங்குதலும் எப்போது வார இறுதி வரும் பயணத்தில் தொற்றிப்போவோம் எனும் நினைவெல்லாம் நீங்கள் கசியும் ஒற்றைச் சொல்லில்தான் இருக்கிறது. எல்லாம் மறந்துவிடுவோம். மனதை முன்னமே வீட்டிற்கு அனுப்பிவிட்டு உடலை மட்டும் துரத்தவைத்து ஓடுவோம். சீட் இருக்கும் பேருந்து பார்க்கமாட்டோம். கூட்டம் பார்க்கமாட்டோம். குறுக்கே ஓடும்போது யாரின் வசவுக்கும் கண் கொண்டு பார்க்கமாட்டோம். இப்படித்தான் பலரின் வாழ்வும் பயணத்திலும் வீடு திரும்பலின் நம்பிக்கையிலும் கழிந்துகொண்டிருக்கிறது. அருமை.அருமை.அருமை.
ஒரு வார்த்தை! ஒரே வார்த்தை!!. அதுவும் ’சாப்டியா’ இல்லை ”சாப்பிடவா” என்ற ஒரு வார்த்தை. ’அம்மா’ என்ற ஒரு வார்த்தையால் மட்டுமே ஆத்மார்த்தமாகத் தர முடியும்.
அம்மா = கடவுள்.சொல்லி விளக்கின விதம் அருமை ரிஷபன் !
நெகிழ்வு
அம்மாவைத் தவிர யாரறிவார் நம் பசியை.. அருமையா இருக்கு ரிஷபன்!
அருமையா இருக்கு சார்.
அது தெய்வத்தின் குரலன்றோ?
அருமை! அருமை! தாய்க்குத் தெரிந்த ஒரே மூலமந்திரம் 'சாப்டியா' தானே?
சாப்டியா ...அந்த ஒரு வார்த்தையில் அகோர பசியிருந்தாலும் அது காணமற்போய்விடும்...
தாய்மைக்கே என்றே கிடைக்கும் வார்த்தைகள் .
அம்மாவை பார்க்கப் போகணும் வேறொன்னும் சொல்லத் தெரியல.
அம்மா அம்மா அம்மா.
இந்த ஒரு வார்த்தைக்காகத்தானே இவ்வளவு அல்லாட்டமும் ... அம்மா மட்டுமன்றி சக மனிதர் யாரிடமிருந்து வந்தாலும் அதில் வழியும் ஆதுரம் மனசுக்கு வெகு இதம்.
Post a Comment