மன விகாரங்களைந்து உயர் நிலையடைய
மதி விதி யாவும் தன்வசமாக
தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்
திருவருள் குருவருள் இணைந்து பெறவே
மீனென கண்கள் சுழன்று வலை வீச
மீளா என் மனம் நன்னிலை அடைய
தானென வந்து தரணியில் இன்று
துணையாய் நின்ற தூய நற்கொடியே.
பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்
வீசும் கதிர்களில் பெருந் தீயாகும்
விந்தையில் மனமே ஞான மயமாகும்
கூசும் உணர்வுகள் விலகிப் போகும்
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
பேசும் என் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடி தானே .
இக்கவிதைகள் என்னை முதன் முதலில் நேசித்த என் சிநேகிதிக்கு - இராமகிருஷ்ண , சாரதா, விவேகானந்தரை எனக்கு அறிமுகம் செய்து மடத்தின் வெளியீடுகளை வாசிக்கக் கொடுத்து , தியானம் பற்றிய தெளிவை சொன்ன - பேரன்பிற்கு எழுதியவை.
வருடங்கள் பல ஒடி விட்டன. அவர் இப்போது எங்கேயோ..
ஆனால் அப்போது எழுதிய கவிதை இன்னமும் மனசுக்குள்..
வாழ்க்கை நடுவே அவ்வப்போது யாரேனும் வெளிச்சம் காட்டிப் போகிறார்கள்.
இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.
22 comments:
//வாழ்க்கை நடுவே அவ்வப்போது யாரேனும் வெளிச்சம் காட்டிப் போகிறார்கள்//.
//இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.//
ஆயிரத்தில் ஒரு வார்த்தை ரிஷபன்.
//இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.//
ஆஹா, நிதர்சனமான உண்மை. நல்ல நட்பு மட்டும் அமைந்துவிட்டால் அதை விட வேறு சுகம் எதற்கு? பகிர்வுக்கு நன்றி.
அந்த இனிய நட்பு மீண்டும் துளிர்க்க வாழ்த்துக்கள்
அருமையாக இருக்கிறது. விரைவில், மீண்டும் சந்திக்க வாழ்த்துக்கள்.
உங்கள் இனிய நட்புக்கு வாழ்த்துக்கள். விரைவில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாழ்த்துக்கள்.
இனிய நட்பு கிடைக்க வேண்டுமே?
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
// மிக இனிமை ரிஷபன்
அழகு.
/இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே. /
நிச்சயமாய்
//பேசும் என் உணர்வுகள் இரு கவிதையானால் பேசா உணர்வுகள் ஒரு கோடி தானே.//
அருமையான, எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
உணர்வுகள் எண்ணில் அடங்காதவை தான்.
தோழியின் நட்பு மீண்டும் கிட்டிட வாழ்த்துக்கள்
ரிஷபன்...உங்கள் மன உணர்வு நிச்சயம் பேசும் கேட்கும்.சந்திப்பீர்கள் உங்கள் தோழியை !
தோழியா...? காதலியா...?
எப்படியோ சீக்கிரமா சந்திப்பீங்க... கவலைப்படாதீங்க...
சீக்கிரம் உங்கள் தோழியை சந்திக்க வாழ்த்துக்கள் :)
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
ரிஷபன். எல்லோரது வாழ்க்கையிலும்
யாரவது வெளிச்சமிட்டுத்தான் போகிறார்கள்.
உயர்ந்த விஷய்ங்களை உங்களுக்கு
அறிமுகப் படுத்திய உங்கள்
நட்புக்கும் சல்யூட்.
அற்புதம்.அற்புதம்.அற்புதம்.
//பேசும் என் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடி தானே .//
Class!
இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.
நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ரிஷபன்.
யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.
எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.
மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.
நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.
பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.
முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.
காத்திருக்கிறேன் அருமை ரிஷபன்.
அருமை பாராட்டுக்கள்
தொலைந்து போன நட்பு தொலையாமல் மனதில்.எண்ணங்கள் வலிமையானால் தேடியது கிடைக்கும். அருமை ரிஷபன் சார்.
//இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.//
//இம்மை மாறி மறுமையாயினும் நீயே யாகுவை என் நேச ஸ்நேகதியாய்
யானே யாகுவள் நின் நெஞ்சு நேர்பவளாக// என்று கூறுகிறீர்கள்.
ஓ தப்பா சொல்லிட்டேனா.. நட்புக்கும் அந்தக் கற்பு உண்டே..
உங்கள் தோழியும் தொடர்வாள்.. ரிஷபன்.
அருமையான பதிவு.
எங்கே எங்க வலைப்பக்கம் ஆளையே காணோம்?
,?
இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.
இதை விளக்க நானும் என்னுடைய வலையில் ஒரு இடுகை இட்டுள்ளேன். பார்க்கவும் ரிஷபன் !
//வாழ்க்கை நடுவே அவ்வப்போது யாரேனும் வெளிச்சம் காட்டிப் போகிறார்கள்//
எவ்வளவு உண்மை!! நட்புக்காக உணர்ச்சிகரமான வரிகள்!!
Post a Comment