December 20, 2010

உரிய நேரம் - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

'பழமென நினைத்து நான் விழுங்கிய பிறகுதான் அது தீயெனத் தெரிந்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் அதைப் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறேன். அத்தீ நாவுகள் என்னைச் சுவைக்கிற போதெல்லாம் நான் பரவசப்பட்டு சிலிர்த்துப் போய் கவிதை எழுதுகிறேன். '

எதற்கும் உரிய நேரம் வர வேண்டும் என்பார்கள். கவிதைத் தொகுப்பிற்கும் அதே விதி நேர்ந்திருக்கிறது.

'சௌரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான் ' என்று திரு. வ. நாராயண நம்பி , தமிழ் துறை , பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி எழுதியது போல அவரின் கவிதைகள் பல எளிமையாய் இருந்தாலும் முன்னுரையில் படைப்பாளியே 'சில இடங்களில் நான் அதை மீறியிருக்கிறேன் ' என்று சுட்டி இருக்கிறார் .

தீபம், கணையாழி , அமுதசுரபி , யுகமாயினி , திண்ணை. காம் , ராகம், அரும்பு , இன்று , கவிதை உறவு , நற்றிணை , வெளிச்சம், மும்பை தூரிகை - பிரசுரம்
கண்ட பெருமைக்கு உரியவர்.
86 கவிதைகள் அடங்கிய 'உரிய நேரம் ' தொகுப்பில் இருந்து..

தாய்மை என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இதோ..

கொட்டும் மழையில்
கோழியின் வயிறே கூரையாக
சிறகுகள் சுவர்களாக
நனையாத அந்த அந்தச் சிறு இடத்தில்
தெரிந்தன ஐந்தாறு ஜோடி
சிறிய ஈர்க்குச்சி கால்கள்!

(தீபம்)

ஆளில்லாக் கிரகம் ஒன்றைக்
கொக்கி போட்டு
நிலாவில் தொங்க விட்டு
நாம் ஊஞ்சல் ஆடிப் பார்த்தால் என்ன
? என்று "என்னவள்" கவிதையை முடிக்கும்போது அவர் கவிதை விண்ணை முட்டுகிறது.

தீயே கேள் கவிதையில் சொல்கிறார்.

'ஏழை, குழந்தைகள் வயிற்றில்
பசியாகும்போது
சாந்தம் கொள்.
நியாய வான்கள்
நெஞ்சில் நிலை கொள்'
எனும்போது 'ஆம்' என்றே தலை அசைக்கத் தோன்றுகிறது.

'ஒரே நேரத்தில்
தன் ஆயிரமாயிரம் கரங்களால்
தாவரக் குழந்தைகளுக்கு
அமுதூட்டுகிறாள்
மேகத்தாய்'
என்று மழை குறித்த அவர் பார்வை வித்தியாசமாய் பதிவாகிறது.

அழகியல் அவர் பார்வையில் 'ஓரவஞ்சனை'யாய்..

"கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்"

பின் செல்லும் மனம் எனும் தலைப்பில் என்ன அழகாய் பாசத்தைப் படம் பிடித்திருக்கிறார்..

"இருபது வயதில் ஒரு நாள்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
என் அடர்ந்த தலைமுடியை
அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'

இவர் கவிதைகள் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறது. சிலாகித்திருக்கிறது. கோபித்திருக்கிறது. வர்ணித்து இருக்கிறது. ஒரு பார்வையாளனாய் படம் பிடித்திருக்கிறது.

கவிதை அனுபவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்களில் சிலரே வடிவ நேர்த்தியில் சிறந்திருக்கிறார்கள்.

தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் நம் அனுபவத்தையும் பிரதிபலிப்பதால் ரசனை எனும் நேர்கோட்டில் அவரைச் சந்தித்து விடுகிறோம்.

வெளியீடு. சித்திரா நிலையம், 7/40 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை-600 016

23 comments:

R. Gopi said...

\\"கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்"\\

பின்னோக்கிய மனம் இரண்டும் டாப் கிளாஸ்.

பகிர்விற்கு நன்றி ரிஷபன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்ன நேர்த்தியான கவிதைகளின் அறிமுகம் ரிஷபன்!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் நெடுநாட்களாக வாசிப்பவர்களுக்குப் புதியவர் அல்லர்.

கணையாழியிலும் தீபத்திலும் தனித்துத் தெரியும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.

இப்போது எழுதும் கவிஞர்கள் பலருக்கும் சௌரியை சிபாரிசு செய்ய ஆசையாய் இருக்கிறது ரிஷபன்.

எளிமையாய் எழுதுவது எளிமையானதல்ல. அது முதிர்ச்சியை நெருங்கிய அடையாளம்.

நல்ல விஷயங்கள் நல்லவர்களால்தான் அடையாளம் காணப்படும்.

சௌரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

RVS said...

//நனையாத அந்த அந்தச் சிறு இடத்தில்
தெரிந்தன ஐந்தாறு ஜோடி
சிறிய ஈர்க்குச்சி கால்கள்!//
அற்புதம். நன்றி ரிஷபன் சார்!

Thenammai Lakshmanan said...

விமர்சனம் அருமை ரிஷபன்..

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் கவிதை நூல் அறிமுகம். கொடுத்த கவிதைகள் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதைகள் அருமை. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சார் கவிதைகள் என்றாலே,
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கொட்டும் மழையில்
கோழியின் வயிறே கூரையாக
சிறகுகள் சுவர்களாக
நனையாத அந்த அந்தச் சிறு இடத்தில்
தெரிந்தன ஐந்தாறு ஜோடி
சிறிய ஈர்க்குச்சி கால்கள்!//

Wonderful, Sir.
Thanks for You & for the Writer

ஹ ர ணி said...

அன்பு ரிஷபன்...

சௌரிராஜனைக் கவிதைகள் வழியே கண்டிருக்கிறேன். சரியான அறிமுகம் செய்திருக்கிறீர்கள். உங்கள் வார்த்தை விமர்சனங்கள் பளிச்சிடுகின்றன. ஈர்க்குச்சி கால்கள். தீயே கேள் போன்றவை நல்ல ஈர்ப்பு. அருமை ரிஷபன். இதுபோன்று அறிமுகம் செய்யுங்கள்.

வசந்தமுல்லை said...
This comment has been removed by the author.
வசந்தமுல்லை said...

விமர்சனம் அருமை ரிஷபன்..

கே. பி. ஜனா... said...

நான் ரசித்தது
''கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்"

ஹேமா said...

அறிமுகப்படுத்திய அந்தக் கவிதைகளே இன்னும் வாசிக்கும் ஆர்வத்தைத் தருகிறதே !

Anonymous said...

நேர்த்தியான விமர்சனம் ரிஷபன் :)

vasu balaji said...

Nice review.Thanks for sharing

Unknown said...

//அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'//

அருமை! :-)

Aathira mullai said...

விமர்சனத்தின் முழுப்பயன் உங்கள் பதிவில் கிடைத்து விட்டது. விமரசனம் ஒரு நூலைக் கற்கத்துண்டுவனவாக இருத்தல் வேண்டும். அதை நிறைவேற்றியுள்ளது..

Matangi Mawley said...

Beautiful-aaka irunthathu inthak kavithaikal! enakku avvalavaaka thamizh ilakkiyam/ithazhkal patriya parichayam kidayaathu. so- enakku ungalin intha pathivu- oru nalla arimukamaaka irunthathu!

thanks!

ADHI VENKAT said...

விமர்சனம் அருமை சார்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

"இருபது வயதில் ஒரு நாள்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
என் அடர்ந்த தலைமுடியை
அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'
'பெரியவர் சௌரிராஜன் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு வளர்ந்தவன்' என்கிற வகையில் எனக்கு ச்சின்னதாக ஒரு கர்வம் உண்டு. மேற்குறிப்பிட்ட அவரது கவிதை வரிகளை அவர் நேரில் கூறுவது போலவே ஓர் அபரிமித வாஞ்சை அந்த எழுத்துகளில் புலனாகிறதே....aahaa!!!

சிவகுமாரன் said...

நல்ல கவிஞரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

vasan said...

//இருபது வயதில் ஒரு நாள்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
என் அடர்ந்த தலைமுடியை
அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'//
இத‌ன் சிற‌ப்பே, இருப‌து வ‌ய‌துள்ள‌வ‌ரை த‌ந்தை கோதுத‌ல் தான்.

நிலாமகள் said...

சௌரிராஜன் ஐயாவின் 'கவசம்' கவிதைத் தொகுப்பு தான் இப் புத்தாண்டின் முதல் பரிசாய் அஞ்சலில் பெற்று புளங்ககித்தேன். தங்களிடமிருந்து அவர் பெற்ற எனது கவிதை தொகுப்பிற்கான தொலைபேசி விமர்சனமும், உடனடிக் கடிதமாய் ஒரு மதிப்புரையும் கடந்த ஆண்டின் பொக்கிஷமாய் என் மனதுள். எனது சூழல் மற்றும் மந்த புத்தியால் இன்னும் நன்றிக் கடனை நிலுவையில் வைத்திருக்கிறேன். விரைவில் தொடர்பு கொள்வேன் என, பார்த்தால் சொல்லுங்க, எனக்காக. உங்க பதிவும் அவர் கவிதைகளும் ... ஒரே வார்த்தையில் (உங்கள் பாணியில்) அழகு!!

நிலாமகள் said...
This comment has been removed by the author.