'இல்லை' என்று மறுக்கவும்
'உண்டு' என்று ஏற்கவும்
அநேக விஷயங்களுடன்
வாழ்க்கை..
அவரவர்க்கான முரண்களை
மூட்டை கட்டி
காலடியில் வைத்துக் கொண்டு
கை குலுக்கிக் கொண்டிருக்கிறோம்.
எந்த நிமிடம் பிரிவு என்பது
தெரியாத புதிரில்
இன்றைய தினம்
குறைந்த பட்சம்
மலர்க் கொத்து ..
இல்லாவிட்டாலும்
ஒற்றை பூ வை
ஏந்திய விரல்களுடன்
எதிரில் வரட்டும்..
சிணுங்கல்கள் அற்ற புன்னகை
சுலபமாய்த் தொற்றிக் கொள்ளும் ..
கண்ணாடி முன் சிரித்துப் பழகிய
ஒத்திகை
வரட்டும் வாழ்நாள் முழுவதும்.
20 comments:
அருமை ரிஷபன் ..
//கண்ணாடி முன் சிரித்துப் பழகிய
ஒத்திகை
வரட்டும் வாழ்நாள் முழுவதும்//
அருமையான சிந்தனை
//அவரவர்க்கான முரண்களை
மூட்டை கட்டி
காலடியில் வைத்துக் கொண்டு
கை குலுக்கிக் கொண்டிருக்கிறோம்.//
Super! :-)
கவிதை மிக நன்று. சிந்தனைகள் கவிதையாக ஆகும்போது அழகாய்த் தான் இருக்கிறது…
நமக்குக் கிடைத்திருக்கிற வாழ்வின் எந்த முகமும் தெரியாமல் அவ்வப்போது அனுபவிப்பதைச் சேகரிக்கிறோம். வாழத்தானே வந்திருக்கிறோம். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழத்தான்வேண்டும். இனியொரு வாழ்க்கை இல்லையென்பதால். யதார்த்தம் கொண்ட கவிதை. அழகு.
யாதர்தங்களுடன் பினைத்து கொள்வேம் :)
/அவரவர்க்கான முரண்களை
மூட்டை கட்டி
காலடியில் வைத்துக் கொண்டு
கை குலுக்கிக் கொண்டிருக்கிறோம்/ superb
//அவரவர்க்கான முரண்களை
மூட்டை கட்டி
காலடியில் வைத்துக் கொண்டு
கை குலுக்கிக் கொண்டிருக்கிறோம்.//
உண்மையான வரிகள்
நல்லாருக்கு ரிஷபன்.
super ரிஷபன்.
இதையும் படிச்சி பாருங்க
இருட்டில் கட்டிய தாலி
வாழ்க்கையே ஒத்திகை...நடிப்புன்னு சொல்றீங்களா.உண்மைதான் !
பார்க்கும் மனிதர்களிடம் சிரிப்பையாவது வழங்குவோம் :)
நல்லாயிருக்கு ரிஷபன் :)
வழக்கம் போல நல்லா இருக்கு
//கண்ணாடி முன் சிரித்துப் பழகிய
ஒத்திகை
வரட்டும் வாழ்நாள் முழுவதும்
//
வரட்டும் வரட்டும் வாழ்நாள் முழுக்கவே
அருமை ரிஷபன்
வெளிப்படையான கவிதைக்கு ஒப்பனையில்லாத புன்னகையுடன் ஒரு மலரேந்தி உங்கள் முன் நிற்கிறேன் ரிஷபன்.எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுதும் போல அருமை சார். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதை அருமை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஒத்திகையில் இருக்கும் ஈடுபாடு நிஜத்திலும் மிளிர அழைத்த கவிதை அருமை...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
ரொம்ப நல்லாருக்கு! அது சரி..என்ஃபோட்டா போட்டீங்களே, என்னை ஒரு வார்த்தைக் கேட்க வேண்டாமா?
//எந்த நிமிடம் பிரிவு என்பது
தெரியாத புதிரில்//இதுதான் நிதர்சனம் !
Post a Comment