மேரிபிஸ்கட் .. குட் டே பிஸ்கட் கொடுத்ததும் ஆசையாய் வாங்கி சாப்பிட்ட யானை, வாழைப் பழம் கொடுத்ததும் தூக்கிப் போட்டது!
பாகன் சொன்ன தகவல்..
'யானை ஓவர் வெயிட்டாம் .. 750 கிலோ வெயிட் கூடவாம் .
பிளட் பிரஷர் வேற இருக்காம். வாழைப் பழம் நோ .. '
டெய்லி வாக்கிங் போகிறதாம்..
********************************************************************
அபார்ட் மென்ட்டில் புதுசாய் ஒரு பைக் ..
எந்த வீட்டில் கேட்டாலும் 'என்னோடது இல்லை' என்றார்கள்.
அவ்வளவுதான் .. பீதி கிளம்பி விட்டது செகரட்டரிக்கு.
'திருட்டு பைக் .. நைசா இங்க வச்சுட்டு போயிட்டான்.' என்று சீரியல் பார்க்கிற மாமி பிரஷர் ஏற்றி விட ..
'போலிஸ் ல சொல்லிருங்க ' என்று ஒருவர் அறிவுரை சொல்ல ..
'வேணாம் .. உங்களை அலைக்கழிப்பாங்க ' என்று இன்னொருவர் தடுக்க..
மெல்ல மாடியிலிருந்து இறங்கி வந்த நண்பர் கொட்டாவியுடன் சொன்னார்.
'நைட் டூட்டி முடிஞ்சு லேட் ஆ வந்தேன்.. அதான் ப்ரெண்டு கிட்ட வண்டி வாங்கிட்டு ..'
பீதி கிளப்பியவர்கள் எஸ்கேப்!
19 comments:
இரண்டும் அருமை:))!
அந்த யானையைப் பார்த்தா சர்க்கரை வந்தா மாதிரி தெரியலையே?
இரண்டு தகவலும் நல்ல ரசனை....
யானைக்கும் அடி சறுக்கும்.. வெயிட் போட்டால்!!! ;-)
கலாட்டா கலக்கல் ரிஷபன். சுவை.
//நைட் டூட்டி முடிஞ்சு லேட் ஆ வந்தேன்.. அதான் ப்ரெண்டு கிட்ட வண்டி வாங்கிட்டு ..'
பீதி கிளப்பியவர்கள் எஸ்கேப்! //
நெறைய இடத்தில நடக்கிறது
ha ha,... funny twits rishaban :)
ஆண்டாள் (யானை) சீரியல்ல நடிச்சப்புறம் பூரிச்சுப் போச்சு போல!
ஆண்டாளை சென்ற ஸ்ரீரங்க பயணத்தின் போது சந்தித்தது. அப்போ நல்லா இருந்த மாதிரிதான் இருந்தா பாவம்! நொண்டி அடிச்சு வாழைப்பழம் வாங்கிண்டாளே!!!!
பைக் விஷயம்! :))))
இரண்டுமே மிகச்சிறிய பதிவுகளானாலும், மிகப்பெரிய சிரிப்பை வரவழைத்தது, சார்.
யானைக்கு [மிகப்பெரிய கிணறு போன்ற சைஸ் ஜோடுதளை நிறைய] அல்வா கொடுத்தால் உடம்பு சரியாகிவிடுமோ என்னவோ !
அந்த பைக் சம்பவம் போல, சில பார்த்து இருக்கிறேன். எதார்த்தம்!
யானைக்கு வந்த விழிப்புணர்வு அருமை..யானையும் ஜாக்கிங் ஆரம்பிச்சுரும்...
அடுக்கக கலாச்சாரமே தனி...கண்டுக்கவே மாட்டார்கள், சிறியதை பெரிது பண்ணுவார்கள்
யானை பற்றிய துணுக் நிஜமாகவே துணுக்குற வைத்தது. யானைக்கு வாழைப்பழம்,'நோ' என்றால், 'எல்லாம் கலிகாலம்.....' என்று சொல்வதைவிட வேறென்ன ? அதேபோல் , பிளாட்டில் புதிதாய் நிற்கும் பைக்கை பற்றிய துணுக்கும் 'நச்'.
இரண்டு விஷயங்களுமே சிரிப்பை வரவழைத்தது. ஆண்டாள் கொலுசு போட்டுண்டு தாயாருக்கு அழகா வெண்சாமரம் வீசி பதினோரு தடவை நொண்டி அடிச்சாளே. மவுத் ஆர்கான் கூட வாசிச்சாளே.
அப்படியா, நான் யானைக்கு சுகர் இருக்கு போல நினைச்சேன்!
ஹா ஹா! :)
வேண்டியதுதான்...!! சுவையான சம்பவங்களை சொல்லும் போது கூட அவரவர் மனப்போக்குகளை துல்லியமா கணிக்கிற உங்க திறன் எனக்கு வியப்பாயிருக்கு!!
adappavame! :( namma yaanaya paththi kekkum pothu koncham kashtamaa pochchu... oru thadava evening market pona pothu-- paaththen.... 30 1/2 lit. marinda bottle kudichchuthu namma yaana! :)
paravaa illa... sari aidum! :)
2nd one... :D super! nalla thamaash! nannaa pozhuthu poirukkum! ungalukku nalla kathayum kittiduththu! :)
யானை மாறினதுபோல, புலி சிங்கங்களும் பிரஷர்/கொலஸ்ட்ரால் காரணமா சைவமா மாறினா எப்படியிருக்கும்? :-)))
பைக்: இப்பல்லாம் எதையாவது எங்கயாவது மறந்துவிட்டுட்டு வந்துட்டா, கவலையேயில்லை. போலீஸ் பாதுகாப்போட பத்திரமா இருகும் ;-)) #பாம் வைப்பவர்களுக்கு நன்றி!! :-(
Post a Comment