January 27, 2011

விடிவு


வவ்வால்களின் சிறகடிப்பில்

மிரண்டு கிடந்த நேரம்.

என்றோ நிகழ்ந்த பூஜைகளின்

அடையாளம் மட்டும் மிச்சமாய்..

கருவறைத் தெய்வம்

பேசும் துணையற்று ..

மதில் சுவர் இடிந்து

உட்பிரகாரம் சிதைந்து

செடிகள், மரங்கள் என

ஊடுருவிய இயற்கை ..

அவ்வப்போது வந்து போகிற

பாம்பும்..

வாசலில் விழுந்து கிடக்கிற

ஒற்றைக் கல்லில்

சுமையிறக்கி ஆசுவாசம் கொண்டு

வியர்வை கொப்பளிக்கும்

அவனோ..அவளோ..

சொல்லித்தான் செல்கிறார்கள்..தினமும்.

' இப்படியே இருக்க மாட்ட..

என்னிக்காச்சும் விடிவு வரும் ..

உனக்கும் எனக்கும்.'


18 comments:

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மை .. எதற்கும் ஒரு காலம் உண்டு ரிஷபன்..

raji said...

தெய்வம் கண் திறந்து பாக்காதானு நினைக்கும் மனிதர்கள்,
யாருமே கண்டு கொள்ளாத தெய்வங்களை கண் திறந்து பார்க்க மறுப்பதேன்?

உண்மையான அவல நிலை பதிவு

கே. பி. ஜனா... said...

கவிதை எங்கோ கொண்டு செல்கிறது... பிரமாதம்!

சிவகுமாரன் said...

ஆலயங்களுக்கும் ஜாதகம் இருப்பதாகவும் . அதற்கும் ஒரு கால நேரம் வேண்டும் என்று என் அப்பா சொல்வார்கள். பராமரிப்பில்லாத ஆலயங்களை பார்க்கும் போது தவிக்கும் மனதை தத்ரூபமாய் சொல்லும் வரிகள் அருமை

Chitra said...

விடியல் விரைவில் வரட்டும்!

VAI. GOPALAKRISHNAN said...

//' இப்படியே இருக்க மாட்ட..
என்னிக்காச்சும் விடிவு வரும் ..
உனக்கும் எனக்கும்.'//

முத்தான முத்திரை வரிகள் !

ஹேமா said...

அவரவர் அவரவர் பாடு.
சிதைந்துவிட்ட கருவறையைச் செப்பனிட யார் !

Balaji saravana said...

அருமை ரிஷபன் :)

சுந்தர்ஜி said...

எனெக்கென்னவோ பாழடைந்த கோயில்கள்தான் கடவுளின் உறைவிடமென்று தோன்றும்.

தன்னைக் காப்பவனின் நிலை கண்டிறங்கும் மனது எல்லோருக்கும் வராது ரிஷபன்.

தனக்கும் மேலிருக்கும் ஒருவனின் நிலை மாற விழையும் நல்மனது இந்தக் கவிஞனின் குரலாய்.

சபாஷ் ரிஷபன்.

middleclassmadhavi said...

உங்களைச் சுற்றியிருக்கும் உயர்திணை/அஃறிணை ஜீவன்கள் மேல் உங்கள் பார்வை வியக்க வைக்கிறது..

அரசன் said...

அசத்தல் ...

நிச்சயமா விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்வே கடந்து போகிறது ...

வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் பாழடைந்த கோவில்களைப் பார்க்கும் போதும், “புதுசுபுதுசா லக்ஷங்கள் கொட்டி கோவில் கட்டுவதற்கு பதிலாய், இது போன்ற கோவில்களைப் புனருத்தாரணம் செய்ய ஒருவரும் முன்வருவதில்லையே” எனத் தோன்றும்!உங்கள் கவிதை மூலம் பார்க்கும்போது இன்னும் மனது கனக்கிறது. நல்ல பகிர்வு.

vasan said...

வார்த்தைக‌ள் 'ப‌ட‌ம் பிடிச்ச‌ மாதிரி'யைத் தாண்டி "ஒளிப்ப‌திவு" செய்திருக்கிற‌து அந்த‌ சித‌ல‌மாகிக் கிட‌க்கும் கோவிலை. இதில் ஜூம் காட்சிக‌ளாய், பூஜை ந‌ட‌ந்த சில த‌ட‌ய‌ங்க‌ள், சிதைந்த‌ சுவ‌ர், ஊர்ந்த‌ பாம்பின் த‌ட‌ம், க‌ற்தூண், இளைப்பாருவோரின் விய‌ர்வை மினுமுனுப்பும், ம‌ன‌தில் எல்லோருக்குமான முணு முணுப்பும். அருமை, ரிஷப‌ன்.

rk guru said...

விரைவில் வரட்டும்!

VELU.G said...

நம்பிக்கையூட்டும் கவிதை

Anonymous said...

ஆலயமே புலம்பியதாய் உணரமுடிகிறது ரிஷபன்..

கோவை2தில்லி said...

விரைவில் விடிவு காலம் பிறக்கும். நாம் எல்லோரும் மனது வைத்தால்!

நிலாமகள் said...

என்னிக்காச்சும் விடிவு வரும் ..

விளையாட்டுப் பிள்ளைகளாய் ஆளாளுக்கு புதிது புதிதாய் கட்டிக் கொண்டேயிருக்கும் தற்கால புதுப்புது குடியிருப்புகளின் கோயில்களை நினைத்தால் பேரச்சம் எழுகிறது.