January 23, 2011

கருணை



விரட்டாதீர்கள்..

அவர்கள் தான்

இந்த பூமியின் சொந்தக்காரர்கள்..

நமக்கு முன்னே குடியேறியவர்கள்..

நாம் பாதை போட்டதாய்

பெருமை அடித்துக் கொள்கிறோம்..

பாதைகள் பிளவு படுத்திய

பூமியை விட

மண்டிக்கிடந்த தாவரங்களுக்கு நடுவே

ஒன்றிக் கிடந்தவர்கள்.. அவர்கள்..

மிரண்டு விழித்தவர்களை

கொலை வெறியுடன் விரட்டி விட்டோம் ..

ஆறறிவுக்கு முன் தோற்றுப் போன

சிற்றறிவு ஜீவராசிகளை

நேசிக்க முடியா விட்டாலும்

வாழ விடலாம் கருணையுடன்.




20 comments:

அன்புடன் நான் said...

உங்க கருணை மிளிர்கிறது.
பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

கடைசி இரு வரிகளில் உங்கள் கருணை மிளிர்கிறது. பகிர்வுக்கு நன்றி சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கருணை அருமை!!!

Madumitha said...

ஆம் ரிஷபன்.
பல சமயங்களில் ஆறு
ஐந்தை விட தாழ்ந்து தான்
போய்விடுகிறது.

ஹ ர ணி said...

anbulla rishaban..

unmaiyil nammai vida avaithaan mikuntha arivullavai. naamthaam avaikalitam irunthu niraiyaak katrukkolla vendum. ovvoru muraiyum thorruppoovathu naamtham. Tamil Font corrupted. sorry for the inconvenience caused by me.

ஹேமா said...

ஆழமான உண்மை !

Chitra said...

ஆறறிவுக்கு முன் தோற்றுப் போன

சிற்றறிவு ஜீவராசிகளை

நேசிக்க முடியா விட்டாலும்

வாழ விடலாம் கருணையுடன்.


......சிந்திக்க வைக்கும் கவிதை.

சிவகுமாரன் said...

\\\பாதைகள் பிளவு படுத்திய

பூமியை விட//

என்ன ஒரு முகத்திலறையும் உண்மை.
பாதைகள் வழிகாட்டுவதை விடுத்து
பிளவுகளுக்கல்லவா
வழி வகுத்து விட்டது.

Unknown said...

கருணை உள்ளம கொண்டவவளே கருமாரியம்மா ரிசிபன் அம்மா

ADHI VENKAT said...

”சிற்றறிவு ஜீவராசிகளை
நேசிக்க முடியா விட்டாலும்
வாழ விடலாம் கருணையுடன். ”

அழகான வரிகள் சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தனக்குச் சாதகமாக எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்வது மனிதனின் சுயநலம்.

எல்லோரிடமும் ஒரே மாதிரி தன் குணத்தைக் காட்டுபவை ஐந்தறிவு ஜீவனகள்.

மோசமான மனிதனை விலங்குகள் சகித்துக் கொள்கின்றன.

பிறருக்குத் தொந்தரவு தராதவற்றிடமும் மோசமாய் நடந்து கொள்பவன் மனிதன்.

உணரவைக்கும் பதிவு.வழக்கமான உங்க பன்ச் மிஸ்ஸிங் ரிஷபன்.

Thenammai Lakshmanan said...

உங்க வழக்கமான ஸ்டைல் இல்லை ஆனால்ம் மனிதநேயம் இருக்கு ரிஷபன் கவிதையில்.:))

மனோ சாமிநாதன் said...

தொலைந்து போன கருணையை உங்கள் கவிதை ஆதங்கத்துடன் தேடுகிறது!
அருமையான பதிவு!

Anonymous said...

//நேசிக்க முடியாவிட்டாலும் வாழ விடலாம் கருணையுடன்//

உயிரினங்களின் பால் அவசியம் அன்பு செலுத்தவேண்டும்..அறிவுறுத்தலாய் இருந்தது இந்த கவிதை ரிஷபன்..

vasan said...

ம‌ண்ணுக்குச் சொந்த‌க்கார்க‌ளை விஷகிருமிக‌ள் கொண்ட‌ போர்வைக‌ள் கொடுத்து த‌ந்திர‌மாய்
அழித்து அமெரிக்காவை ஆக்கிர‌மித்த‌ அயோக்கிய‌ர்க‌ள் தான் அகில‌ உல‌க ர‌ட்ஷ‌க‌ர்க‌ள் இன்று.
நாக‌ங்க‌ள் வாழ்விட‌த்தை அழித்து, இந்திர‌பிர‌ஸ்த‌ம் அமைத்துப் பின் ப‌த்தாண்டுக‌ள் காடுக‌ளில்
அலைந்து திரிந்து, ப‌ங்காளிக‌ளைக் கொன்ற‌வ‌ர்க‌ள் இதிகாச‌ நாய‌க‌ர்க‌ளாய் அன்று.
நுண்ணுயிர்கள், மூச்சுக்காற்றால் இட‌ற்ப‌ட‌லாம் என்ப‌தால் நாசியும், வாயும் மூடி, ஊர‌வ‌னங்க‌ளின் உயிர் ம‌திப்ப‌றிந்து,ம‌‌யிற்பீலிக‌ளால் பாதையை துடைத்து ப‌ய‌ணிக்கும்
ச‌ம‌ய‌த்த‌வ‌ர்க‌ளும் இன்னும் இருக்கிறார்க‌ள் இங்கே. முர‌ண்பாடுக‌ளின் முடிச்சுக‌ளால் நிர‌ம்பி இருக்கிற‌து இந்த‌ பூமி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// பாதைகள் பிளவு படுத்தப்பட்ட பூமிக்கு முன்பே, மண்டிக்கிடந்த தாவரங்களுக்கு நடுவே ஒன்றிக் கிடந்தவர்கள்.. //

அருமையான வரிகள் !

பத்மா said...

அது சரி தான் ..இந்த உணர்வினால் தான் ஒரு பாம்பு குடும்பத்துடன் எங்கள் மனையை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் ...மனை பாம்பாம் அது ..அப்போப்போ தலையும் காட்டும் ..

raji said...

கவிதையும் அதில் உள்ள உண்மையும் அருமை

***************************

எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டிருக்கிறேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்

arasan said...

அருமையாக சொல்லி உள்ளீர் ....

வாழ்த்துக்கள்

சமுத்ரா said...

நல்ல கவிதை