August 20, 2011

மழை


வானம் கருத்துக் கொண்டு
வருவது பார்த்து
உலர்த்திய துணிகளை
அள்ளி வருவதும்..
மேகங்கள்
சின்ன தூறல் கூடப் போடாமல்
அடுத்த பகுதிக்குப் போவதுமாய்..
மழை விளையாட்டு..
குறுஞ்செய்தி மின்னுகிறது..
‘எங்கள் ஊரில் மழைப்பா’
சிநேகிதியின் உற்சாகம்
என்னுள் விதைக்கிறது
ஒரு புழுக்கத்தை..
இடி.. மின்னல்.. என்று
எதற்கும் குறைவில்லை..
வந்த மழை
எங்கு போனதென்றுதான்
தெரியவில்லை..
சுற்றுப் பகுதியில்
ஏதோ ஒரு இடத்தில்
பூமி குளிர்ந்து போனது..
மறுநாள் தலைப்புச் செய்தி..
மின்னி விட்டு
ஏதும் சொல்லாமல் போன வானம்..
வரண்டு கிடக்கிறது மனசும்..
என் தெருவைப் போலவே.



23 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘எங்கள் ஊரில் மழைப்பா’சிநேகிதியின் உற்சாகம் என்னுள் விதைக்கிறதுஒரு புழுக்கத்தை..//

//‘எங்கள் ஊரில் மழைப்பா’சிநேகிதியின் உற்சாகம் என்னுள் விதைக்கிறதுஒரு புழுக்கத்தை..//

ஆஹா, அருமையான வரிகள்.

மழைபெய்யாத வருத்தத்தை சோ வெனப்பெய்த மழைபோலக் கொட்டி ஓய்ந்து விட்டீர்கள் உங்களின் இந்தக்கவிதையில்.

பாராட்டுக்கள்.

கதம்ப உணர்வுகள் said...

மழை வந்தால் பூமி ஈரமாகும் குழந்தைகள் மனம் குதூகலமாகும்..

ஆனால் உங்கள் வரிகளில் வந்த மழை போன சுவடே தெரியவில்லை என்ற ஆதங்கமும்.... கடைசி இரண்டு வரிகள் நச் ரிஷபன்....

அன்பு வாழ்த்துகள் ரிஷபன்...

வெங்கட் நாகராஜ் said...

இங்கேயும் ஒரு வாரமாக மழை.... அதை நினைவு படுத்தும் விதமாய் மழை கவிதை.

கவிதையில் அதன் சாரல் இதமாய் தெரிகிறது...

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மின்னி விட்டு
ஏதும் சொல்லாமல் போன வானம்..
வரண்டு கிடக்கிறது மனசும்..
என் தெருவைப் போலவே.//

(ஒருதலைக்)காதலியும் வானமும் ஒன்றே! அவளும் மின்னலெனத்தோன்றி மறைவாள், ஏதும் சொல்லாமல் அந்த வானம் போலவே. வரண்டு போகும் காதலன் மனதும் இளமையும்.

ஆனால் மழைவரும் கண்ணீராக அவன் கண்களில் மட்டுமல்ல நெஞ்சிலும் கூட.

இராஜராஜேஸ்வரி said...

‘எங்கள் ஊரில் மழைப்பா’சிநேகிதியின் உற்சாகம் என்னுள் விதைக்கிறதுஒரு புழுக்கத்தை..இடி.. மின்னல்.. என்றுஎதற்கும் குறைவில்லை//


மழைப்பாவின் இனிமைக்குக் குறைவில்லை.

Anonymous said...

இடி மின்னல் ஏமாற்றிவிட்டது போல ...

இறுதி வரிகள் நல்லாய் இருக்கு ...

மதுரை சரவணன் said...

arputham...vaalththukkal

RVS said...

இந்தக் கவிதை மனசை நனைத்துவிட்டது சார்!!

மாலதி said...

மழை எங்கு போனதென்றுதான்தெரியவில்லை..சுற்றுப் பகுதியில் ஏதோ ஒரு இடத்தில்பூமி குளிர்ந்து போனது..மறுநாள் தலைப்புச் செய்தி..மின்னி விட்டு ஏதும் சொல்லாமல் போன வானம்..வரண்டு கிடக்கிறது மனசும்..என் தெருவைப் போலவே.//பாராட்டுக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எப்போ நம்ம புள்ளைங்க அந்த “RAIN RAIN GO AWAY..COME AGAIN ANOTHER DAY, LITTLE TOMMY WANTS TO PLAY..RAIN RAIN GO AWAY" என்ற பாட்டை பாட ஆரம்பிச்சதோ..அன்னிலேர்ந்து வானமே வரண்டு விட்டது!

கே. பி. ஜனா... said...

பெய்யாத மழைகள்! துளிர்க்காத பரவசங்கள்!

நிலாமகள் said...

வாரா ம‌ழைக்கான‌ வ‌ருத்த‌ப்பா! ம‌ழையை இப்ப‌டியும் எழுத‌ முடிகிற‌து!!

Unknown said...

//‘எங்கள் ஊரில் மழைப்பா’
சிநேகிதியின் உற்சாகம்
என்னுள் விதைக்கிறது
ஒரு புழுக்கத்தை..//
அருமையான வரிகள் பாஸ்!

middleclassmadhavi said...

வழியில் மாட்டிக் கொண்டால் திட்டு வாங்கும் மழை, எதிர்பார்த்துக் காத்திருந்தால்,...!!

arasan said...

அழகிய ஏக்கம் ..
நல்ல வரிகளில் நற்கவி

முனைவர் இரா.குணசீலன் said...

மழை விளையாட்டை அழகாகச் சொல்லியிருக்கீங்க..

:)

ADHI VENKAT said...

மழை பெய்யாமல் போனதையும் இப்படியும் அழகாக சொல்ல உங்களால் தான் முடியும் சார்.

Geetha6 said...

அருமை .வாழ்த்துகள்!

Unknown said...

மழலையின் விளையாட்டுக்
கண்டு மகிழ்வதுபோல
உங்கள் கவிதை மழையின்
விளையாட்டைப் பாடியுள்ளது
அருமை நண்பரே!

வந்து கருத்துரைத்தீர்!நன்றி

புலவர் சா இராமாநுசம்

vasan said...

ம‌ழையும், ஒரு யானையை போல‌த்தான்.
அது இருந்தாலும், இற‌ந்தாலும் ஆயிர‌ம் பொன் என்ப‌ர்.
இது பெய்தாலும், பொய்தாலும் ரிஷப‌ன் க‌விதை.
(ஆயிர‌ம் பொன்னொப்ப‌).

சமுத்ரா said...

அருமை .வாழ்த்துகள்!

கீதமஞ்சரி said...

ஏமாற்றிய மழையின் மேல் உண்டான வருத்த்தையும் கவிதையாக்கிவிட்டீர்கள். மழையோ....மனிதரோ... வருவதாய்ச் சொல்லி வகையாய் இணக்கம் காட்டி வாராமற்சென்றால் சுணக்கம் எழுவதில் வியப்பென்ன?மனம் தொட்ட கவிதை. வாழ்த்துக்கள்.

vetha (kovaikkavi) said...

''...சின்ன தூறல் கூடப் போடாமல்
அடுத்த பகுதிக்குப் போவதுமாய்..
மழை விளையாட்டு..''
மழை விளையாட்டு மிக அருமை . வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com