December 14, 2011

நான்


உன் இதயப் பாத்திரத்தில்
ஊறும் அமிழ்தை
உன் கூட்டுப் பறவைகளுக்கு
பகிர்ந்தளித்தாய்..
நிராகரிப்பின் வலியோடு
காலித் தட்டுடன்
தெருவில் நடக்கும் நான் !


எல்லையற்ற பால்வெளியில்
இன்னொரு கிரகம்
கண்டுபிடிக்கப்பட்டது..
மனிதர்கள் இருப்பதாய்த்
தகவலுடன்..
இங்கிருந்து அங்கே
பயணத்திற்கும்
ஏற்பாடுகள்..
நீயிருக்கும்
இந்த பூமியை விட்டு
அகலாமல் நான் !


உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !






32 comments:

ராமலக்ஷ்மி said...

நிராகரிப்பின் வலியையும்
எதிர்ப்பார்ப்பின் வலிமையையும்
அழகாய் சொல்கிறது கவிதை.

ad said...

மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !

அசத்தல்.

ad said...

மிகநன்றாக இருக்கிறது.ஆண்டாள் கதை போல ஒருபடைப்பு இனி எப்பொழுது வரும்?

இராஜராஜேஸ்வரி said...

நீயிருக்கும்
இந்த பூமியை விட்டு
அகலாமல் நான் !

அருமையான நான்.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

உன் வீட்டு வாசலைக்கடக்கும் போதெல்லாம்கதவில் ஒட்டிக் கொண்டுவர மறுக்கும்என் பார்வை.. மூடியிருந்த கதவைமனசுக்குள்ளேதிறந்து பார்க்கும் நான் !

வசீகரிக்கும் வரிகள்..
வாழ்த்துக்கள்..

RAMA RAVI (RAMVI) said...

//கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..//

சிறப்பான வரிகள்.
அருமையான கவிதை .

ஷைலஜா said...

ஆஹா இதான் கவிதை ரிஷபன்...அதிலும் முதல்பாராவின் சோகம் மிக நெகிழ்ச்சி.

Yaathoramani.blogspot.com said...

காதல் வயப்பட்டு எதிர்பார்ப்பில் இருப்பவனின்
மன நிலையை இதைவிட சுருக்கமாகவும்
தெளிவாகவும் அழகாகவும் சொல்வது கடினமே
அருமையான் அபதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !//

’நான்’அருமையான கவிதை தான்.

த.ம:4 இண்ட்லி:4 யூடான்ஸ்:4 vgk

மகேந்திரன் said...

மனதில் பூட்டிவைத்த காதல் உணர்வுகளை
வெளிச்சம் போட்டுக் காட்டும் அழகிய இனிய கவிதை.

அம்பாளடியாள் said...

அருமையான காதல்க் கவிதை வரிகள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

பால கணேஷ் said...

காதலாகிக் காதலால் நனைந்த கவிதை. மூடியிருக்கும் கதவை மனசுக்குள்ளே திறந்து பார்க்கும் நான் -பிரமாதமான வரிகள். மிகமிக ரசிக்க வைத்து விட்டீர்கள் ரிஷபன் ஸார்!

சி.பி.செந்தில்குமார் said...

>மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !

குட் லைன்ஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்.

Admin said...

கவிதையில் ஒரு அழகியல் தெரிகிறது..

துரைடேனியல் said...

Arumaiyana Kavithai Sago.

TM 8.

சக்தி கல்வி மையம் said...

உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..// அசத்தலான வரிகள் சகோ..

கீதமஞ்சரி said...

பாரம் தாங்கிய மனதின் நிலை விளக்கும் வரிகள் அபாரம். அதிலும் கடைசி பத்தியில் கனம் அதிகம். பாராட்டுகள் ரிஷபன் சார்.

மனோ சாமிநாதன் said...

வேதனையும் எதிர்பார்ப்பும் இதயக்கபாடத்தை மெல்ல மெல்ல திறக்க, அருமையான வரிகள் அனாயசமாக வந்து விழுந்த அழகிய கவிதை!!

சென்னை பித்தன் said...

//உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !//
அருமை ரிஷபன்.யதார்த்தம்.

துரைடேனியல் said...

//நிராகரிப்பின் வலியோடு
காலித் தட்டுடன்
தெருவில் நடக்கும் நான் !//

அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ. தொடரவும்.

தங்கள் தள வடிவமைப்பு அருமை.

கே. பி. ஜனா... said...

//உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !//

கிளாஸிக் வரிகள்!

G.M Balasubramaniam said...

முதல் கவிதையில், தாயில்லா தனையனையும், இரண்டாமதில் போக்கிடமில்லாதவனையும், மூன்றாவதில் நிராகரிப்பை எதிர்நோக்கும் காதலனையும் காண்கிறேன், சரியா.?

Unknown said...

//உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..//

அழகான வரிகள்!
மிக ரசித்தேன்!

VELU.G said...

கவிதை அருமை

எளிமையான நடையுடன் வலிமையாய் காதலை பேசுகிறது.


வெளியில் எத்தனை கிரகம் இருந்தாலும் நம்ம கெரகம் இங்கதானே இருக்கு

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா (just for fun)

Radhakrishnan said...

:) கவிதை மிகவும் அழகு.

நிலாமகள் said...

நிராகரிப்பின் வலியோடு
காலித் தட்டுடன்//

மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !//

இந்த‌க் காத‌லைப் பாடும் போதும் உண‌ரும் போதும் மென்சுக‌மும், வ‌ன்சோக‌மும் ஒருங்கே போட்டுத் தாக்குகிற‌தோ தெரிய‌வில்லை...!

ஹேமா said...

நிராகரிப்பின் வலி வரிகளெங்கும்.அருமை அருமை !

ADHI VENKAT said...

//மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான்//

அருமையான வரிகள்.

சாந்தி மாரியப்பன் said...

//உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !//

அன்பு நிராகரிக்கப் படுவதைப் போல கொடுமை ஒன்றில்லை.. அருமையான கவிதை.

Sharmmi Jeganmogan said...

நிராகரிப்பின் வலியோடு நடுவில் கொஞ்சம் விஞ்ஞானத்தையும் புகுத்தியிருக்கிறீர்களே... அழகு!

Unknown said...

'நான்'
என் மனதை படம் பிடித்துக்காட்டுகிறது ரிஷபன் ஜி. நைஸ்!