வா.. ஒரு கை கொடு.
சூரியனை திசை மாற்றலாம்!
பிரதேசங்கள் எல்லாம்
இருட்டில்லாமல் செய்வோம்.
புதிய பூச்செடிகள்
உண்டாக்குவோம்.
குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.
அறியாமை என்பது
குணப்படுத்த முடியாத
நோயல்ல..
கூடங்களை விட்டு கல்வியை
வெளிக் கொணர்ந்து நம்
கையகப்படுத்துவோம்.
நேசிப்பது சொல்லிப் பெறுவதல்லதான்.
பரவாயில்லை..
மறதி இயல்பான மாந்தருக்கு
வகுப்பெடுப்பொம்.
எதிர்கால இனிமை
கனவு கண்டால் சாத்தியம் என்று
எத்தனை நாளைக்குக்
கண் மூடி எதிர்பார்ப்பது?
கனவு காணவே அவசியமற்ற
நிகழ்காலப் புதுமைகளைப்
பொதுவுடமையாக்குவோம்.
இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்..
நாம் இதுவரை சேர்த்து வைத்த
தனி மனித அநாகரிகங்களை!
சூரியனை திசை மாற்றலாம்!
பிரதேசங்கள் எல்லாம்
இருட்டில்லாமல் செய்வோம்.
புதிய பூச்செடிகள்
உண்டாக்குவோம்.
குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.
அறியாமை என்பது
குணப்படுத்த முடியாத
நோயல்ல..
கூடங்களை விட்டு கல்வியை
வெளிக் கொணர்ந்து நம்
கையகப்படுத்துவோம்.
நேசிப்பது சொல்லிப் பெறுவதல்லதான்.
பரவாயில்லை..
மறதி இயல்பான மாந்தருக்கு
வகுப்பெடுப்பொம்.
எதிர்கால இனிமை
கனவு கண்டால் சாத்தியம் என்று
எத்தனை நாளைக்குக்
கண் மூடி எதிர்பார்ப்பது?
கனவு காணவே அவசியமற்ற
நிகழ்காலப் புதுமைகளைப்
பொதுவுடமையாக்குவோம்.
இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்..
நாம் இதுவரை சேர்த்து வைத்த
தனி மனித அநாகரிகங்களை!
31 comments:
புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரிஷபன்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
கவிதை அருமை.
புத்தாண்டு ' resolutions ' அருமை !
இனிய நல்வாழ்த்துக்கள் !
எழுச்சியூட்டும் பதிவாக புத்தாண்டு சிறப்புப் பதிவை
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இவ்வாண்டில் புதிய சிந்தனையோடு வாழ முயல்வோம்..வாழ்த்துகள்..
அன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
எதார்த்தம் மிகுந்த கவிதை.
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
இனிய நம்பிக்கையான எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் அழகு கவிதையில் நன்றாக பரிமளிக்கிறது. வாழ்த்துக்கள்.
புத்தாண்டில் சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2012ன் அன்பு வாழ்த்துகள் ரிஷபன் !
பாஸிடிவ் எண்ணங்களை விதைத்த அழகான கவிதையுடன் கூடிய புததாண்டு வாழ்த்தைத் தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சிறப்பான சிந்தையோடு ஒரு கவிதை... வாழ்த்துகள்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
''..குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்...''
இது மட்டும் கூட போதும் எதிர்காலச் சந்ததி உருப்படியாக வளர.அருமை வரிகள். வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
\\குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.\\
\\கூடங்களை விட்டு கல்வியை
வெளிக் கொணர்ந்து நம்
கையகப்படுத்துவோம்.\\
குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உடனடித் தேவைகள் இவை. செயல்படுத்த முனைவோம். அழகிய சிந்தனைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.
//குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.// அதுதான் ரிஷபன் டச்!
Very Positive...ரொம்பவே அழகான கவிதை...
Wish you and your family a very happy New Year!!!
எதிர்கால இனிமை
கனவு கண்டால் சாத்தியம் என்று
எத்தனை நாளைக்குக்
கண் மூடி எதிர்பார்ப்பது?
கனவு காணவே அவசியமற்ற
நிகழ்காலப் புதுமைகளைப்
பொதுவுடமையாக்குவோம்.//
நல்ல கவிதை. சிந்திக்க வேண்டிய விஷயம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழர்.
இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்////
உரத்த தனித்த சிந்தனை.
"விடியலுக்காக அல்ல"வா என்று ஒரு கணம் திகைக்க வைத்து பிறகு தெளிய வைத்த கவிதைத் திறன்.
அருமை அருமை ரிஷபன் சார்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமையான கவிதை.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
//அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்..
நாம் இதுவரை சேர்த்து வைத்த
தனி மனித அநாகரிகங்களை!//
அருமையான சிந்தனைகள்.
புத்தாண்டு பிறப்பதற்கு Just கொஞ்ச நேரங்கள் முன்பு பழுதான என் Blogger இப்போது தான் ஒருவழியாக சரியானது. மகிழ்ச்சியில் உங்களுக்கே முதல் பின்னூட்டம் தருகிறேன். அதனால் தான் தாமதம்.
[என்னுடைய 200 ஆவது பதிவு 30/31.12.2011 நள்ளிரவு வெளியிட்டிருந்தேன்.
தாங்கள் அதைப் படித்தீர்களா?]
அன்புடன் vgk
// இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த //
உன்னதமான, கருத்துரை
வழங்கும் கவித்துவ வரிகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் ஊர் அரங்கநாதருக்கு ஒரு பாமாலை இயற்றியிருக்கிறேன்.
படித்துப் பார்த்து கருத்திட வேண்டுகிறேன்
www.arutkavi.blogspot.com
ரொம்ப பாசிட்டிவ் ஆன அப்ரோச்!
சார் என்ன ஓ பாசிட்டிவ்வோஒ.....!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
பொருத்தமான பொருள் பொதிந்த அழகிய கவிதை! சந்தோஷம் சார்.
புதிய பூச்செடிகள்
உண்டாக்குவோம்.
குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.
வரிகள் அருமையாய் மனதில் நிரைகின்றன்..
வாழ்த்துகள்..
"புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
வணக்கம்... தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றேன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா..
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். ரொம்ப நாள் ஆச்சே! :-)
படிக்கவே இத்தனை நல்லாருக்கே..
இந்த வரிகளெல்லாம் செயல்படுத்தினால் புதிய உலகமே அன்பினால் சிருஷ்டித்தது போலாகுமே...
அன்பு மலர்ந்து மனிதர்களுக்குள் நேசம் தொடர்ந்து மனிதம் உயிர்த்து உலகமே நீங்கள் சொன்னது போல அமைதிப்பூங்காவாக மகிழ்ச்சி தோட்டமாக மாறிவிடுமே...
மிக அருமையான வரிகள் ரிஷபா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்பா...
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Post a Comment