பத்து நாட்களாய் ஊரில் இல்லை...
‘அதான் பிளாக் அப்டேட் ஆகாததைப் பார்த்தாலே தெரியுதே’
போபால் பயணம் ! ஆபிஸ் வேலையாய்.. எல்லா யூனிட்காரார்களும் கூடி கும்மி அடித்தோம்.
அங்கே எங்கெங்கே போனோம் என்று பகிர்வதற்கு முன் ஒரு ரிவர்ஸ் கியர்..
பயணம் முடித்து சென்னை திரும்பியபோது பேஸின்பிரிட்ஜில் வழக்கமாய் அரை மணி போட்டு விடுவார்கள்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்..
கொருக்குப்பேட்டையில் கொஞ்ச நேரம்..
அப்போது அருகில் இருந்த ரயில்வே டிராக்கில்..
தங்களை மறந்து .. அங்கிருந்த அசிங்கம் மறந்து.. மிக்ஸ் பண்ணி அடித்த இரண்டு குடிமகன்கள் !
(பயணம் தொடரும் )
14 comments:
பெட்டிக் கடைகளில் பிளாஸ்டிக் டம்ளரும், வாட்டர் பாக்கெட்டும், ஊறுகாயும் வாங்கி மக்கள் நடமாடும் அந்த இடத்திலேயே குடிப்பவர்கள் நிறையப் பேரைப் பார்த்து எரிச்சலும் வருத்தமும் அடைந்திருக்கிறேன். ரயில் ட்ராக்கில் கூடவா? கடவுளே! ஹும்... இவனுங்களைச் சொல்லி என்ன பண்ண... அரசாங்கத்தைச் சொல்லணும்!
சுற்றுச்சூழல் மறக்க வைக்கும் ஒரே விஷயம்.... :( கொடுமை சார்....
பயணம் பற்றிய உங்கள் பகிர்வுகளை எதிர்பார்க்கிறேன்....
வேதனைக்குரிய விஷயம்.
உயிருக்கும் ஆபத்தான இடமென்றும் தெரியாத லயிப்பு குடியில்.
பயணக்கட்டுரையின் ஆரம்பமே மிக்ஸிங்குடன் ஒருவித ‘கிக்’ ஏற்படுத்துவதாக உள்ளதே!
தொடருங்கள்.
என்னால் இன்று தங்களுக்கு சமர்பிக்கப்பட்ட இரு விருதுகளை, பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு, பின்னூட்டம் இட்டதற்கு என் நன்றிகள்.
[Ref: http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html ]
தாங்கள் ஊரில் இல்லாத நாட்களில் இங்கு ஒரே பெரும்மழை பெய்து இப்போது தான் சற்றே ஓய்ந்துள்ளது.
அதற்கு “விருது மழை” என பெயரிடப்பட்டுள்ளது, சார்.
வாழ்த்துகள். அன்புடன் vgk
//தாங்கள் ஊரில் இல்லாத நாட்களில் இங்கு ஒரே பெரும்மழை பெய்து இப்போது தான் சற்றே ஓய்ந்துள்ளது.
அதற்கு “விருது மழை” என பெயரிடப்பட்டுள்ளது, சார்.//
நல்ல ஹ்யூமர்!
குடி சூழலை மறக்கும்.
தொடருங்கள்..சுவாரஸ்யங்கள் கலை கட்டட்டும்.படிக்க ஆவலாக உள்ளேன்..நன்றிகள்.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
பசிக்கு மட்டுமல்ல.. இதுக்கும் பத்தும் பறந்து போம் போலிருக்கு..
போபால்" என்றால் விஷவாயு தாக்குதல் நினைவுக்கு வரும்...
குடிமகன்களையும் அறிமுகப்படுத்தி திடுக்கிடவைத்துவிட்டீர்கள்..
அடப்பாவமே போதையில டிரேயின் வருவதை கவனிக்காமல் இருந்தால் என்ன ஆவது??
பயணம் பற்றிய பதிவுகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
ரயில்வே ட்ராக்கிலா.....:((((
உங்க போபால் பயணம் பற்றிய பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
சுவையாகத் தொடங்கியிருக்கிறது. இதைவிடக் கொடுமை ரயில்பெட்டியின் கழிவறையில்..குடிக்க என்று முடிவெடுத்தபின் குடிமகனுக்கு யாதும் இடமே எதுவும் பாரே...அசத்துங்கள். காத்திருக்கிறேன்.
உள்ளே போகும் சாக்கடை வெளியிலிருப்பவற்றை விஞ்சியிருப்பதாலோ...
Post a Comment