February 20, 2012

போபால் - ஓம்காரேஷ்வர்

12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்று - நர்மதை நதியின் மீது.. ஓம்காரேஷ்வர் ! (தென் இந்தியாவில் ஒரே ஒரு இடம் ராமேஸ்வரம்)

மேலே இருந்து ஏரியல் வியூவில் பார்த்தால் ஓம் போலத் தெரியுமாம்.

போபாலில் இருந்த 300 கிமீ பயணம். காலை ஏழு மணிக்குக் கிளம்பிப் போனோம்.

நடுவில் பாதையைத் தவறவிட்டு 30 கிமீ எக்ஸ்ட்ரா பயணம்.

டிரைவர் அந்த ஊர்க்காரர். வேறெப்படி இருக்க முடியும்.. டவேராவில் ஏழு பேர்.

எங்களில் நன்றாய் ஹிந்தி தெரிந்த ஒருத்தரை டிரைவர் பக்கத்தில் அமர வைத்து மற்றவர்கள் பின்னால்.

டிரைவர் கொண்டு வந்த கேசட்டில் திரும்பத் திரும்ப ஒரே பாடல். நாலு வரி பாடிவிட்டு ஸ்டாண்டர்டாய் ஒரே பல்லவி.

அதே பாட்டை பயணம் முழுக்கக் கேட்டு காது புளித்தே போய் விட்டது.

அதுவும் பின் இருக்கையில் ஸ்பீக்கர் அலற.. வால்யூம் குறைக்கச் சொன்னால் டிரைவருக்குக் கோபம். அவரது பேவரைட் பாட்டு போல!

காதலியிடம் காதலைச் சொன்ன காதலனிடம் அவள் வைத்த டிமாண்ட். ‘உன் அம்மாவின் இதயத்தைக் கொண்டு வா. அப்பதான் உன் லவ்வை ஏத்துப்பேன்’

அவன் ஓடிப் போய் அம்மாவிடம் சொல்கிறான்..

அம்மா தன் இதயத்தை அறுத்துத் தருகிறாள்.. அதை எடுத்துக் கொண்டு ஓடி வரும் போது தடுக்கி விழ.. இதயம் தள்ளிப் போய் விழுகிறது.. அதிலிருந்து அம்மாவின் குரல்..

‘டேய் கண்ணா.. பார்த்துப் போடா.. அடி பட்டுருச்சா’

மா கா தில் .. மா கா தில் .. மா கா தில் .. என்று ஒவ்வொரு பாரா
முடியும்போதும் கோஷ்டி கானம்.

இந்தப் பாட்டை அவரைத் தவிர வேறு யாராலும் ரசிக்க முடியாமல் போனதுதான் பிரச்னை. அவர் இஷ்டத்துக்கு வண்டியை ஓட்டினார்.

’டேய் .. அவர்ட்ட சொல்லு.. நைட் டிரைய்னைப் பிடிக்கணும்னு.. ‘

’ராத்.. காடி.. பக்கட்..’என்று தெரிந்த உடைசல் ஹிந்தியில் சொல்லப் போக.. மா கா தில் இன்னும் அதிக சப்தமாகி.. வண்டி 60 ஸ்பீடுக்கு வந்து விட்டது 100 லிருந்து.

300 கிமீ பயண அலுப்பு நிமிஷத்தில் காணாமல் போனது. நர்மதையின் எழிலில்.

பாலத்தின் மீது நின்று கீழே ஓடும் நதியைப் பார்த்ததும்.. ஆஹா.அங்கே போய்ச் சேர்ந்த போது மணி இரண்டு. இரவு 9.30க்கு ரெயில். ஒரு பக்கம் படபடப்பு.. இன்னொரு பக்கம் அந்த இடத்தின் ஈர்ப்பு.
மேலே இருப்பது கோவிலுக்குள்ளிருந்து எடுத்த போட்டோ இது. படித்துறை.

கீழே இருப்பது நதியின் இன்னொரு பக்க போட்டோ.ராஜா மாந்தாதாவின் இருக்கை என்று ஒரு கண்ணாடி அறை.

எனக்கு ஒரு ருத்ராட்சம் கிடைத்தது. உள்ளிருந்த அர்ச்சகர் கொடுத்தார். இத்தனைக்கும் கோவில் போல அல்லாமல் கடைகள்.. வியாபார பரபரப்பு.. என்று ஒரே ரகளைதான்.

அதையும் மீறி என்னவோ ஒரு அதிர்வை உணர்ந்தேன்.

ஓம்காரேஷ்வர் போனது கடைசி நாள். மறுநாள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் பயணம். 55 கரப்புகளுக்கு மத்தியில்.. ஏசி வேலை செய்யாமல்.. டாய்லட் தண்ணீர் இல்லாமல்.. சாப்பாடு வாயில் வைக்க முடியாமல்..

இந்த நாட்டை.. மக்களை ஓம்காரேஷ்வர்தான் காப்பாற்ற வேண்டும் !
16 comments:

நிலாமகள் said...

ப‌திவின் உண‌ர்வுக‌ள் த‌த்ரூப‌ம். துல்லிய‌மாக‌ க‌ண‌க்கிட‌ப்ப‌ட்ட‌ 55 க‌ர‌ப்புக‌ள் எண்ணிக்கை விய‌ப்பு! எப்ப‌டிப்ப‌ட்ட‌ இட‌த்திலும் சூழ‌லிலும் ஒவ்வொரு அணுவிலும் க‌ண‌க்காள‌ர் சிந்தை... ஹ‌ ஹ‌ ஹா! வீடு திரும்ப‌த் துவ‌ங்கும் போதே ச‌லிப்பும் வெறுப்பும் ஊட்டும் ந‌ம‌து வாழ்விய‌ல் சார‌ம்.ஓம்காரேஷ்வ‌ர் ர‌க்ஷ‌து!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

புகைப்படங்கள் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்கள் யாவும் அழகு.

வேதனைகளைப் பட்டியலிட்ட விதத்திலும் ஓர் சாதனையைக் காண முடிகிறது. அது தான் ரிஷபன் சார் ஸ்டைல்.

சிவராத்திரி சமயம் ஓம்காரேஷ்வரை நினைத்துக்கொள்ள உதவியது தங்களின் இந்தப்பதிவு.

பகிர்வுக்கு நன்றிகள். வாழ்த்துகள்.

Ramani said...

புகைப்படங்கள் மிக மிக அருமை
நேரடியாக நின்று பார்ப்பதைப் போல இருந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அதையும் மீறி என்னவோ ஒரு அதிர்வை உணர்ந்தேன்.

ஒவ்வொரு பயண்த்திலும் எத்தனையோ இடர்பாடுகளைத்தாங்கியும் உணர முடியும் அதிர்வுகள்தான் வரப்பிரசாதம்...

அருமையான பகிர்வுகளுக்கு நிறைவான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

RAMVI said...

அருமையான பயணம்.படங்களின் மூலம் நர்மதையின் அழகை ரசிக்க முடிந்தது.

வெங்கட் நாகராஜ் said...

நர்மதை நதியின் எழில் ரசிக்க வைக்கிறது.... நானும் சமீபத்திய ஜபல்பூர் பயணத்தின் போது ரசித்தேன்... அது பற்றிய பயணக் கட்டுரை இப்போது எழுதிக்கொண்டு இருக்கிறேன்... விரைவில் பதிகிறேன்..

அது எப்படி சார் ஒக்காந்து எண்ணி இருக்கீங்க 55 கரப்பான்... அது சரி... பயணம் முழுவதும் வேறு என்ன செய்ய?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நான் வரும் போது 56 கரப்பு இருந்ததே!
ஒன்று ரிடையர்ட் ஆயிடுத்து போல.
பதிவு அருமை! படங்கள் அதனினும் அருமை!!

வானம்பாடிகள் said...

55 கரப்பு கொஞ்சம் டூ மச்தான் இல்ல?:))))

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் ரொம்ப அருமை.
சிவராத்திரி ஸ்பெஷல்.

/ருத்ராட்சம் கிடைத்தது/

தேடி வருகையில் அதிர்வு ஏற்படவே செய்திருக்கும். எத்தனை முகம் கொண்டது?

/தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்/

கரப்பு மட்டுமா:(? எலிகளும் உள்ளன.

Shakthiprabha said...

ரசித்தேன் ...

மா கா தில் மூலம் ட்ரைவர் படுத்திய பாடு, அதை நீங்கள் பகிர்ந்த விதம் மிகவும் நகைச்சுவையாக ரசிக்க வைத்தது :)

//இந்தப் பாட்டை அவரைத் தவிர வேறு யாராலும் ரசிக்க முடியாமல் போனதுதான் பிரச்னை///

//அதே பாட்டை பயணம் முழுக்கக் கேட்டு காது புளித்தே போய் விட்டது.
//

:)))))))

//55 கரப்புகளுக்கு மத்தியில்.. ஏசி வேலை செய்யாமல்.. டாய்லட் தண்ணீர் இல்லாமல்.. சாப்பாடு வாயில் வைக்க முடியாமல்..
இந்த நாட்டை.. மக்களை ஓம்காரேஷ்வர்தான் காப்பாற்ற வேண்டும் !

/

:)

கீதமஞ்சரி said...

புகைப்படங்களும், நேரடி வர்ணனை போன்ற நுண்ணிய விவரங்களுடனானா எழுத்தும் மனம் ஈர்த்து ரசிக்கவைத்தன. அருமை ரிஷபன் சார்.

கோவை2தில்லி said...

ஓம்காரேஷ்வரையும், நர்மதையின் அழகையும் நாங்களும் உங்க எழுத்தின் மூலம் கண்டுகளித்தோம்.

55 கரப்பு....:)))

Gopi Ramamoorthy said...

இன்னும் கொஞ்சம் நேரமெடுத்துக் கொண்டு ஓரிரு நாள்கள் நர்மதைக் கரையில் பொழுதைக் கழித்திருக்கலாமே.

நான் ஸ்ரீசைலமும் த்ரயம்பகேஷையும் தரிசித்திருக்கிறேன். மற்ற ஸ்தலங்களுக்குக் கூடியி விரைவில் செல்லவேண்டும்.

அப்பாதுரை said...

அம்மாவின் இதயம் - சுத்தி சுத்தி வருது. ரொம்ப நாளாகும் தணிய.
நர்மதா கங்கா பிரமபுத்ரா எல்லாம் பாத்த பிறகு (படங்கள்ள தான் :) காவிரி பாலாறு எல்லாம் சும்மா வெத்தோனு தோணுது..
கரப்பு எப்படி.. தோராயமா எண்ணிணீங்களா?

மாதேவி said...

ஓம்காரேஷ்வரர் தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.

ரயில் பயணம்:(((