May 27, 2012

காலடியில் சூரியன்

எட்டி உதைப்பதை

எண்ணிப் பார்க்க முடிகிறதா?

காலடியில் சூரியனா..

கனவுகளில் மட்டுமே சாத்தியம்..

வாழ் நாளில் ஏதேனும்

சாதிக்க விரும்பினால்..

சுட்டெரிக்கும் சூரியனை

கால் பந்தாக்கும் லாவகம்

கைவசமாகட்டும்..

உலகத்தை ஒரு தரமாவது

உற்றுப் பார்க்க வைத்தால்

வாழ்ந்ததின் அர்த்தம்

வசப்பட்டு விடும்.25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உலகத்தை ஒரு தரமாவது
உற்றுப் பார்க்க வைத்தால்
வாழ்ந்ததின் அர்த்தம்
வசப்பட்டு விடும்.//

நல்லா இருக்கு! பாராட்டுக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//உலகத்தை ஒரு தரமாவது

உற்றுப் பார்க்க வைத்தால்

வாழ்ந்ததின் அர்த்தம்

வசப்பட்டு விடும்.
//

உண்மையான வரிகள்

அப்பாதுரை said...

புத்துணர்வூட்டும் வரிகள் ரிஷபன்.

a lever for my hand and firm ground for my feet, and i shall...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதைக்கு மிகவும் பொருத்தமானது அந்த நிழற்பட மனிதனும், அவன் காலடியில் சூர்யனும். நல்ல படத்தேர்வு.

KParthasarathi said...

செய்ய முடியாததை சாதிக்க முடியாவிட்டாலும் செயலில் தீவிரத்தை காட்டினால் அதுவேசெய்யும் திறனை எளிதில் கொடுக்கும்

ராமலக்ஷ்மி said...

சாதிக்கும் எண்ணம் உடையவருக்கு என்றைக்கும் வாழ்வு வசப்படும். நல்ல கவிதை!

ஸ்ரீராம். said...

அருமை.

வார்த்தைகள்
வசப்பட்டால்
கனவுகளைக் கவிதையாக்கிப்
படங்களைப்
'பா'வாக்கலாம்!
லட்சியங்களுக்குப்
படத்தைத்
துணைக்கழைத்து
உச்சங்கள் தொடலாம்!

கணேஷ் said...

உலகத்தை ஒரு தரமாவது உற்றுப் பார்க்க வைத்தால் வாழ்ந்ததன் அர்த்தம் பிடிபட்டு விடும். -அருமையான வரிகள். கவிதை மனதில் ஒட்டிக கொண்டது ஸார்!

Ramani said...

நாம் முயன்றால் சூரியப் பந்து கூட
நம் கால்களில் வந்தமர்ந்து விளையாடும் என்பதை
மிக அழகாக விளக்கிப் போகும் படமும் பதிவும் அருமை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 3

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாழ் நாளில் ஏதேனும்


சாதிக்க விரும்பினால்..


சுட்டெரிக்கும் சூரியனை


கால் பந்தாக்கும் லாவகம்


கைவசமாகட்டும்..

SUPER!!

கே. பி. ஜனா... said...

//உலகத்தை ஒரு தரமாவது

உற்றுப் பார்க்க வைத்தால்

வாழ்ந்ததின் அர்த்தம்

வசப்பட்டு விடும்.//

அருமை! உண்மை!

சசிகலா said...

உலகத்தை ஒரு தரமாவது

உற்றுப் பார்க்க வைத்தால்

வாழ்ந்ததின் அர்த்தம்

வசப்பட்டு விடும்.// அதற்கும் நேரம் இல்லை என்பார்கள் . வரிகள் அருமை .

Anonymous said...

''..சுட்டெரிக்கும் சூரியனை


கால் பந்தாக்கும் லாவகம்


கைவசமாகட்டும்..''
படத்திற்குக் கவிதை போன்று நிசமான உயர் எண்ணம். கைப்பற்ற அவைரும் முயலும் தூண்டுதல். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை
சிந்தனை வரிகள் கவிஞரே

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு..

சாதிக்க விரும்புபவர்களுக்கு தடைக்க்கற்களும் படிக்கற்கள்தாம்..

G.M Balasubramaniam said...

வாழ்நாளில் ஏதேனும் சாதிக்க விரும்பினால் சுட்டெரிக்கும் சூரியனைக் கால் பந்தாக்கும் லாவகம் கைவசமாகட்டும். ரிஷபன் சார், மன்னிக்கவும்.எதையுமே சாதிக்க முடியாது என்பதை கொஞ்சம் பாஸிடிவ் வாகச் சொல்ல முயற்சியா.?.

வசந்தமுல்லை said...

நல்லா இருக்கு! பாராட்டுக்கள்.

நிலாமகள் said...

கால‌டியில் சூரிய‌னும் கையருகில் வாழ்வும் வ‌ரும் நேர‌ம் வ‌ருமோ வ‌ராதோ... கால‌டியில் கால‌னை மிதிக்க‌க் கூப்பிட்ட‌ பார‌தியும் க‌ண்ணெதிரே பிளிறி வ‌ந்த‌ கால‌னில் மிதிப‌ட்ட‌து விதிவ‌ச‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌வா...

இராஜராஜேஸ்வரி said...

சுட்டெரிக்கும் சூரியனை

கால் பந்தாக்கும் லாவகம்

கைவசமாகட்டும்..

அசத்தலான தன்னம்பிக்கை வரிகள் ..

கோவி said...

ஒருமுறை அல்ல.. எப்போதும் உலகம் வியக்க வாழ்வோம்..

மோகன்ஜி said...

அழகு!
கவிதை போன்ற சித்திரம்.
சித்திரமாய்க் கவிதை!

விமலன் said...

நல்ல கற்பனை.வாழ்த்துக்கள்.

vasan said...

த‌ன்னை 'காலருகே வாடா", என்ற‌ சூரிய‌னை ஒத்த‌வ‌னை,
யானையின் காலாய் வ‌ந்து கவிழ்த்த‌ கால‌ண்.
(அருமையான‌ அவ‌தானிப்பு. ந‌ன்றி நிலாம‌க‌ள் அவ‌ர்க‌ளுக்கு)

பூமியும், பிற‌ கோள‌ங்க‌ளும் வ‌ல‌ம் வ‌ரும்
சூரிய‌னையே கால் ப‌ந்தாக்கிய‌ நிழ‌ற்ப‌ட‌ம்,
நிஷப்ப‌ட‌ம்மாகிய‌து ரிஷ‌ப‌னின் "கான‌ல்" வ‌ரிக‌ளால்.

கீதமஞ்சரி said...

நேர்மறை எண்ணத்தை ஊட்டும் கவிதைக்கு என் வந்தனம். கவிதை காட்டும் வாழ்வியலைக் கண்முன் காட்டும் நிழற்படமும் அழகு. பாராட்டுகள் ரிஷபன் சார்.