August 16, 2012

சதுரகிரி - 3

விடியலில் நான்கு மணிக்கே அபிஷேகம் இருக்கும் என்று சொல்ல.. 12 மணிக்கு படுத்தவர்கள் 3 மணிக்கே விழித்து விட்டோம்.
தூங்கினோம் என்று சொல்ல முடியாது.  பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு குளிர் காற்று ஜிவ்வென்று அடித்து உடம்பை உலுக்கி விட அரைகுறைத் தூக்கம்.

எழுந்தோம். மறுபடி டார்ச் லைட். சந்தன மஹாலிங்கம் தரிசிக்க நடந்தோம். 
5 மணி வரை காத்திருந்து.. அபிஷேகம் ஆரம்பிக்கிற வழியாய் இல்லை.
அவ்வளவு நேரம் இருந்த மின்சாரம் போனது. 

ஒரு வழியாய் குருக்கள் வந்து கதவைத் திறக்க ஆனந்த தரிசனம்.

பிறகுதான் அபிஷேகம். மணி மெல்ல ஆறரையைத் தொட்டது.. இப்போது இறங்க ஆரம்பித்தால்தான் என்று ஷான் சொல்ல.. சந்தன .. சுந்தர மஹாலிங்க தரிசனம் பார்த்து நடக்க ஆரம்பித்தோம்.

அகத்தியர் உருவாக்கிய தீர்த்தம் என்று மலை மேல் ஒரு ஊற்றுக் கிணறு.  பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு வாளியில் இறைத்து ஊற்றினார்கள். எங்களுக்கும் ஆசை வர குளித்தோம். அற்புதக் குளியல். ஜில்லென்று  நீர் பட்டதும் உடம்பு வலியெல்லாம் ஓடிப் போனது.

11 மணி .. மீண்டும் அடிவாரம் வர.  எதுவும் சாப்பிடாத எனக்கு பாதி வழி இறங்கும்போது அயர்ச்சி. ஆனால் கீழ் வரை பத்திரமாய் வந்து சேர்ந்தாகி விட்டது.

மீண்டும் ஆட்டோவில் வத்ராப் எனப்படும் வத்திராயிருப்பு.. அப்புறம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.. ஆண்டாள் தரிசனம்.. (அன்றுதான் ரெங்கமன்னார் பிறந்த நாள்) மதுரை.. இரவு 7 மணிக்கு திருச்சி..

ஆத்மார்த்தமாய் பக்தி.. பரஸ்பர மனித நேயம்.. (குரங்கு தள்ளிக் கொண்டு போன பர்ஸை - ஒரு பெண்மணியுடையது - லாவகமாய் மீட்டுத் தந்த யாரோ). நடக்க நடக்க மனசுக்குள் பீரிட்ட உற்சாகம்.. இயற்கையுடன் ஒன்றி இருந்த அனுபவம்.. மலை உச்சியிலும் சுவையான உணவு.. 

சதுரகிரி - வாய்ப்பு கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள்.  



10 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்களுடன் வந்தது போன்ற உணர்வு படிக்கும் போதே!

கவி அழகன் said...

Valthukkal

ஸ்ரீராம். said...

சுருக்கமாகவே முடித்து விட்டீர்கள்! வத்ராப் மற்றும் கிருஷ்ணன் கோவில் கொய்யாப் பழங்கள் பார்த்தீர்களா? தேங்காய் சைசில் இருக்கும்!!

தி.தமிழ் இளங்கோ said...

” சதுரகிரி - வாய்ப்பு கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள். “
என்ற உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நடக்க நடக்க மனசுக்குள் பீரிட்ட உற்சாகம்.. இயற்கையுடன் ஒன்றி இருந்த அனுபவம்..//

மிகவும் அருமையான அனுபவப் பகிர்வு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

நேரில் செல்வதைவிட பதிவில் படிப்பது இன்னும் சுவையாகவும் சுலபமாகவும் [எனக்கு] உள்ளது.

சீனு said...

நெடு நாள் ஆசை சார்... என்னை அழைத்தால் நானும் வந்திருப்பேன்... தென்காசி தான் சொந்த ஊர் என்றாலும்.. சென்னை வந்தததும் தான் சதுரகிரி பற்றி அறிந்து கொண்டேன்... இல்லையேல் எப்போதோ சென்றிருப்பேன்...மலைப் பயணம் என்றால் எனக்கும் கொள்ளைப் பிரியம்.... அலுவலகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர் கிடைத்துள்ளார்... விரைவில் நானும் சதுரகிரி நோக்கி பயணிப்பேன்... கண்டிப்பாக போர்வை எடுத்துக் கொள்கிறேன்... நடுங்கும் குளிர் சுகம் தான் அதில் போர்த்திக் கொண்டு உறங்குவது இன்னும் சுகமல்லவா !

manichudar blogspot.com said...

உங்களுடன் நாங்களும் பயணித்தோம். உங்கள் படைப்பின் வழியே நல்ல பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

ஆத்மார்த்தமாய் பக்தி.. பரஸ்பர மனித நேயம் -உற்சாகமான பகிர்வுகள்...

கோமதி அரசு said...

சதுரகிரி - வாய்ப்பு கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள். //

கண்டிப்பாய் வாய்ப்பு கிடைத்தால் போய் வருகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

முதல் பகுதியில் சொன்னது போல நிச்சயம் செல்லத்தான் வேண்டும்....

அடுத்த தமிழகம் பயணத்தின் போது நான் அங்கே செல்ல ரெடி.... யார் யார் கூட வரீங்க!

இனிய பயணம்... சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகம் மனதில்.