August 10, 2012

எழுதாத கவிதை





எழுதப்பட்ட
எல்லாக் கவிதைகளிலும்
ஒரு சில
வாசிக்கும் நிமிடம் உயிர்த்து..


மறு சில
மீள் வாசிப்பில்
அடையாளம் காட்டி..
சிலவே
ஞாபகத்தில் உறைந்து..

எப்போதும் ஜீவனுடன்
எழுதப்படாத
கவிதைகள் மட்டுமே.





20 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஜீவனுள்ள கவிதை
எழுதாத கவிதை"யே !!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எழுதப்பட்டதில் இதுவே நல்ல ஜீவனுடன் உள்ள கவிதையாக உள்ளது, சார். பாராட்டுக்கள்.

எழுதப்படாத மற்ற கவிதைகளுக்கும் ஜீவன் அளித்து உடனே வெளியிடுங்கள்.
வாழ்த்துகள்.


vgk

அப்பாதுரை said...

யோசிக்க வைக்கிறது... ஹ்ம்..
சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை.

manichudar blogspot.com said...

எழுதிய கவிதைகளை விட ஜீவன் ததும்புகிற எழுதாத கவிதைகள் உயிர்ப்புடன் உறைந்து தான் கிடக்கிறது.

Matangi Mawley said...

What a thought!
Beautiful!

நிலாமகள் said...

எழுத‌ப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளின் வார்த்தைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌ அர்த்த‌ங்க‌ளும், எழுதாக் க‌விதைக‌ளின் க‌ருக்க‌ளுக்கு தேடிப் பொறுக்கும் வார்த்தைக‌ளும் எப்போதும் உயிர்ப்புட‌ன்.

Yaathoramani.blogspot.com said...

எப்போதும் ஜீவனுடன்
எழுதப்படாத
கவிதைகள் மட்டுமே.//

நிச்சயமாக
மன்ம் கொள்ளை கொண்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

Unmaitham

கே. பி. ஜனா... said...

//எப்போதும் ஜீவனுடன்
எழுதப்படாத
கவிதைகள் மட்டுமே.//
Superb!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

ஸ்ரீராம். said...

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்றுதான் நானும் சொல்ல வந்தால் அப்பாதுரை ஏற்கெனவே சொல்லி விட்டாரா.... ! :))) உண்மை சொல்லும் கவிதை.

கோவி said...

அழகு..

பால கணேஷ் said...

நான் மனதில் நினைத்த வரிகள் இங்கே அப்பா ஸாரின் எழுத்தாய்... அதையே வழிமொழிகிறேன். நன்றி.

மகேந்திரன் said...

ஆம் நண்பரே...
சொல்லாத சொல்லுக்கும்
எழுதாத எழுத்துக்கும்
நிலை ஆற்றல் அதிகம்...

கீதமஞ்சரி said...

என்னமாய் யோசிக்கிறீர்கள்? வியப்பூட்டும் வரிகளுக்குள் பொதிந்து கிடக்கிறது கவிதையின் நுண்பொருள். பாராட்டுகள் ரிஷபன் சார்.

G.M Balasubramaniam said...

நான் சற்று மாறுபடுகிறேன். தெரிவிக்காத உணர்வுகளும் சொல்லாத எண்ணஙகளும் வாடிய சருகுகள் என்றே எண்ணுகிறேன்

கோமதி அரசு said...

எப்போதும் ஜீவனுடன்
எழுதப்படாத
கவிதைகள் மட்டுமே.//

உண்மை உண்மை.

அருமையான கவிதை.

vasan said...

ரிஷ‌ப‌ன்ஜி நான் ஜீவ‌னுட‌ன் இருக்கிறேன், பிரிய‌மாய், பிரி(க்க‌)ய‌ முடியாம‌ல்.

வெங்கட் நாகராஜ் said...

மிக மிக அருமை.....