December 17, 2012

ஜ்வல்யா

சிலசமயம்
என்னை ரொம்பவே 
குழப்பி விடுகிறாள் ஜ்வல்யா..
‘நான் பிறக்கலேன்னா
என்ன பண்ணியிருப்ப ப்பா’
என்ன பதில் சொலவதென்று

புரியாமல் விழிக்க..
‘நீ மக்குப்பா..
அதான் பொறந்துட்டேனே
அப்புறம் என்ன’















16 comments:

Unknown said...

எப்படியெல்லாம் கார்னர் பண்ணுகிறாள்
இந்த ஜ்வல்யா... பின்னே திணறாமல் என்ன செய்வதாம்! :)

ராமலக்ஷ்மி said...

ஜொலிக்கிறாள்:))!

கே. பி. ஜனா... said...

நாம எப்பவுமே மக்குத்தான் குழந்தைகள் முன்னால...ஆனா அதுல அவ்ளோவ் சந்தோஷம்!

நிலாமகள் said...

பெற்ற பிள்ளை அளவுகோலில் மக்காக இருப்பதும் மகிழ்வே...

Matangi Mawley said...

:D ... Good one!

அப்பாதுரை said...

அட்டகாசம்!

சீனு said...

ஹா ஹா ஹா கவிதை சார்... மிக மிக அருமை ...
கவிதை ஏற்படுத்தும் தாக்கம் அருமை

ezhil said...

குழந்தைகள் உலகம் அறிவானது. அதனுள் நாம் மக்குகளாய் இருந்தால் தவறொன்றுமில்லை..

கோமதி அரசு said...

குழந்தை ஜ்வல்யாவின் மழலைப் பேச்சு அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லார் வீட்டிலும் அப்பா மக்கு தானோ என்கிற சந்தேகம் எழுகிறது

இக்கவிதையைப் படித்ததும் !

இராஜராஜேஸ்வரி said...

அதான் பொறந்துட்டேனே..//

ஜாஜ்வ்ல்யமான பதில் - ஜ்வல்யா"

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘நீ மக்குப்பா..
அதான் பொறந்துட்டேனே
அப்புறம் என்ன’ //

ஜ்வல்யா அழகான பெயர் ....
அவள் பதிலும் அழகே !

வல்லிசிம்ஹன் said...

ஜ்வல்யான்னு பேரு வச்சா ஜ்வலிக்கிறாள்:)தீர்க்க அறிவு.

Ranjani Narayanan said...

குழந்தைகளின் முன் 'மக்'காவதும் ஒரு தனி அனுபவம் தான்!

G.M Balasubramaniam said...


சில நேரங்களில் குழந்தைகளிடம் கற்க நிறையவே இருக்கிறது என்பதை அறியாத பலரும் மக்குதான்.

vasan said...

ந‌ம் குழ‌ந்தைக‌ளிட‌ம் தோற்கும் த‌ருண‌ம்.
தோல்வியும் சிலிர்ப்பூட்டுகிற‌து.